Published:Updated:

இதுவரை சொல்லாதது! -இந்த வாரம் சிம்பு

இதுவரை சொல்லாதது! -இந்த வாரம் சிம்பு

இதுவரை சொல்லாதது! -இந்த வாரம் சிம்பு

இதுவரை சொல்லாதது! -இந்த வாரம் சிம்பு

Published:Updated:
இதுவரை சொல்லாதது! -இந்த வாரம் சிம்பு
நா.கதிர்வேலன்
இதுவரை சொல்லாதது! -இந்த வாரம் சிம்பு
இதுவரை சொல்லாதது! -இந்த வாரம் சிம்பு
இதுவரை சொல்லாதது!
இதுவரை சொல்லாதது! -இந்த வாரம் சிம்பு
'இன்னும் அவள் நினைவாக!' -இந்த வாரம் சிம்பு
இதுவரை சொல்லாதது! -இந்த வாரம் சிம்பு

ரகசியங்கள், அனுபவங்கள், தத்துவங்கள், ஆசைகள், கோபங்கள், பிரியங்கள், சோகங்கள் என ஒவ்வொரு மனதிலும் சொல்ல மறந்த - மறுத்த கதைகள் ஆயிரம் இருக்கும். அப்படி இதுவரை சொல்லாதவற்றைப் பற்றி பிரபலங்கள் மனம் திறக்கிறார்கள் இங்கே...

இதுவரை சொல்லாதது! -இந்த வாரம் சிம்பு

சிம்பு என்றால் கோடம்பாக்க அகராதியில் 'ஓப்பன் ஹார்ட்' என்று அர்த்தம். காதில் புதுக் கடுக்கன். பேச்சில், பார்வையில், புதிய நிதானம்!

லைஃப் லைன்: ''சிம்பிள்... 'கடவுளை நம்பு. ஆனா, உன் காரைப் பூட்டு!' - இதுதான் நம்ம தத்துவம். நமக்கு இங்கே இருக்கிற கஷ்டம், துக்கம், வறுமை, ஏழ்மை, சோகம்னு எதுவும் எனக்குப் பிடிக்கலை. ஆனா, அத்தனைக்கும் நடுவில் தாமரை இலைத் தண்ணீர் மாதிரி எல்லாருக்கும் வாழ்க்கையில் ஏதோ ஒரு நம்பிக்கை இருக்கே... அதுதான் என் ஆச்சர்யம். அதுதான் கடவுளை நம்பி, அவர்கிட்டே அப்ளிகேஷன் போடாமப் போய்க்கிட்டே இருக்கவைக்குது. புரியலையா? ஆனா, எனக்குப் புரியுதே... அதுபோதும்!''
சென்டிமென்ட்: ''ஒரு நதி நகர்கிற மாதிரி வாழ்க்கை அதன் போக்கில் போவதால், என் லக்கி நம்பர் 6. தங்குற ரூம் நம்பர், சந்திக்கிற தேதி, முக்கியமான அப்பாயின்ட்மென்ட் எல்லாம் 6-ம் தேதி இருக்கிற மாதிரி பார்த்துப்பேன். காரணம் தெரியாது. அது அப்படித்தான். நல்லது நடக்குது!''

பொக்கிஷம்: ''என் எக்ஸ் கேர்ள் ஃப்ரெண்ட் தந்தது. லவ் பண்ணிட்டு இருக்கும்போது அவ பிரியமாகக் கொடுத்த ஒரு கறுப்புக் கலர் வாட்ச். அதைத் தூக்கிப் போட மனசு வரலை. வாழ்ந்த காலமும், பழகின தினங்களும், பகிர்ந்துக்கிட்ட விஷயங்களும் பொய் இல்லையே!''

சிம்பு சீக்ரெட்: ''நான் பக்கா தண்ணி பார்ட்டின்னு ஊர், உலகமே நினைக்குது. ஆனா, நம்புங்க... நான் டிரிங்க்ஸ் குடிக்க மாட்டேன். நம்ப மாட்டீங்கள்ல. எதைத்தான் நம்புவீங்க, இதை நம்புறதுக்கு! அதே போல, அப்பப்போ ஹெல்மெட் மாட்டிட்டு தி.நகர்ல பைக்ல திரிஞ்சுட்டு இருப்பேன். தவிர, நான் அருமையான போக்கர் (Poker) பிளேயர். வெளியே யாருக்கும் தெரியாது இது!''

மறக்க முடியாத நாள்: '' 'மன்மதன்' ரிலீஸ் ஆன தினம். நான் இயக்கிய முதல் படம். நான் ஹீரோவா நடிச்ச 'காதல் அழிவதில்லை' படம் ரிலீஸ் ஆனப்பகூட அந்தப் பதற்றம் இல்லை. முதல் ஷோ முடியும்போது தேவி தியேட்டர் வாசல்ல உயிரைக் கையில் பிடிச்சுட்டு நிக்கிறேன். அப்போ இன்னும் சின்ன வயசு. 'டப்பா டான்ஸ் ஆடிச்சுன்னா... மவனே நீ காலிடா!'ன்னு விபரீதமான பயம். முதல்ல வெளியே வந்த நாலு முகங்களைப் பார்த்ததுமே, 'ஜெயிச்சுட்டேன்'னு தெரிஞ்சுடுச்சு. பதற்றத்துல ஆரம்பிச்சுக் கொண்டாட்டத்துல முடிஞ்ச நாள். என்னை நான் பெருமையா உணர்ந்த நாள்!''

இதுவரை சொல்லாதது! -இந்த வாரம் சிம்பு

கனவு: ''ரெண்டு குட்டிப் பையன்கள் ஆளுக்கொரு பக்கம் என் கையைப் பிடிச்சுக்கிட்டு கூடவே நடந்து வர்றாங்க. என் மகன்கள்தான். ஆனால், என் மனைவியின் முகம் மட்டும் தெரியலை. மீண்டும் மீண்டும் வரும் அந்தக் கனவு ஏதோ சொல்லுது... ஆனா, என்னன்னு புரியலை!''

பெஸ்ட் ஃப்ரெண்ட்: ''நான்தான். தினமும் கொஞ்சநேர மாவது கண்ணாடியைப் பார்த்து என்கூடவே நான் பேசு வேன். ரொம்பவும் மனசுவிட்டு குறை நிறைகளைச் சொல்லிப் பேசிக்குவோம். இந்த உலகத்தில் ஒரு பொண்ணு கஷ்டப் பட்டா, அவள் கண்ணீரைத் துடைக்க, அவள் சாயத் தோள் கொடுக்க எத்தனையோ பேர் ஓடி வருவாங்க. ஆனா, ஒரு ஆண் துக்கத்துல இருந்தா, அவனுக்கு அவனேதான் துணை! சிம்புக்கு சிம்புதான் சார் பெஸ்ட் ஃப்ரெண்ட்!''

மறக்க முடியாத சம்பவம்: ''டான்பாஸ்கோ ஸ்கூல்ல ஆறாவது படிக்கிறேன். ஒரு பையன் என்னை அடிச்சுட்டான். விடுவேனா நான்... அவனையும் அவனுக்கு சப்போர்ட்டா வந்த பசங்களையும் அடிச்சு, ஆத்திரம் தீராம அவனுங்க கொண்டுவந்த டிபன் பாக்ஸ் சாப்பாட்டுல மண்ணை அள்ளிப் போட்டுட்டேன். எனக்குச் சாப்பாடு எடுத்து வந்திருந்த அப்பா அதைப் பார்த்து அதிர்ந்துட்டார். 'சாப்பாட்டுல மண் அள்ளிப் போடுறவன் என் மகனாடா?'ன்னு என்னை அடிச்சுட்டு, அப்பா கண்ணில் வடிஞ்ச கண்ணீரை இன்னிக்கும் மறக்க முடியாது!''

பயப்படும் விஷயம்: ''கடவுள்!''

டிரெஸ்ஸிங்: ''என்னோட அதிகபட்சச் செலவுகள் துணிகளுக்குத்தான். பாங்காக், துபாய், லண்டன்னு எங்கே போனாலும், ஊர் சுத்துறதைவிட அதிகமா டிரெஸ் வாங்கிட்டே இருப்பேன். எவ்வளவு வேலை இருந்தாலும், தினமும் நெட்ல ஃபேஷன் பத்தி அப்டேட் பண்ணிக்காமத் தூங்க மாட்டேன். இந்த வயசுக்கு எந்த டிரெஸ் போட்டாலும் நல்லா இருக்கும். ஆனா, எனக்குப் பிடிச்ச கறுப்புக் கலர்தான் எப்பவும் என் சாய்ஸ். பர்சனல் கலெக்ஷன்ஸ் நிறைய இருந்தாலும், சினிமா டிரெஸ் போட்டுப் போட்டு, சொந்த டிரெஸ் போடுறதுக்கு நேரம் இல்லாமப்போச்சு. காலையில் எழுந்திருக்கும்போதே 'இன்ன டிரெஸ், இன்ன மேட்ச்'னு யோசிச்சு எழுந்திருக்கிற ஆள் நான்!''

இதுவரை சொல்லாதது! -இந்த வாரம் சிம்பு

மெனு: ''இந்தியன், இத்தாலியன் உணவுன்னா ரொம்ப இஷ்டம். பிரியாணி பிடிக்கும். நல்லாச் சாப்பிட்டு ஒரு இடத்துல நிக்காமத் திரிவேன். ரொம்ப நேரம் தூங்க மாட்டேன். நிறைய நேரம் உட்கார மாட் டேன். என் வாழ்க்கையில் நான் இதுவரை பழங்கள் சாப்பிட்டதே கிடையாது. காலைச் சாப்பாடு சாப்பிடுவதே இல்லை. துறுதுறுன்னு இருந்தால்போதும். சாப்பிட்டது செரிக்கும்!''

பர்ஸில் இருக்கும் பணம்: ''கிரெடிட் கார்டு எப்பவும் இருக்கும். தவிர, 2 நாட்களுக்கு ஒரு தடவை அம்மாவைத் தாஜா பண்ணி பெட்ரோல் செலவுக்குன்னு 5,000 ரூபாய் வாங்குவேன். எனக்குச் செலவு பண்றது ரொம்பப் பிடிக்கும்!''

இதுவரை சொல்லாதது! -இந்த வாரம் சிம்பு

ஃபிட்னெஸ்: ''ரெகுலரா ஜிம்முக்குப் போக மாட்டேன். நினைச்சா ஒரு மாசத்துல மெலிவேன். திடீர்னு உடம்பை ஏத்துவேன். கல்லைக்கூடச் செரிக்கிற வயசு சார். இப்போ ரொம்ப மெனக்கெட வேண்டாம். சொல்றதைக் கேட்காம உடம்பு அடம்பிடிக்கிறப்போ பார்த்துக்கலாம். நான் ஒண்ணும் மிலிட்டரியில் வேலை பார்க்கலையே... ஆக்டர்தானே!''

சமீபத்தில் அதிர்ந்தது: ''என்னால் இன்னும் நம்ப முடியலை. சமீபத்தில் நான் அதிர்ந்தது, துடித்தது, அழுதது எல்லாமே ஒரு விஷயத்துக்குத்தான். ஓர் இனத்துக்கே தலைமை தாங்கிய பிரபாகரன் அவர்களின் மறைவு. மனசு உடைஞ்சு என்ன செய்றதுன்னு தெரியாமஅழுதப் போதான் எனக்கே தெரியாம அவர் மேல் பெரிய மரியாதை வெச்சிருக்கேன்னு தெரிஞ்சது. அப்படி ஒரு தலைவனை இனி எங்கே பார்க்க முடியும்!''

 
இதுவரை சொல்லாதது! -இந்த வாரம் சிம்பு
-
இதுவரை சொல்லாதது! -இந்த வாரம் சிம்பு