Published:Updated:

''சினிமாவை தாண்டியது என் லட்சியம்!'' -அஜீத் அசல் முகம்

நா.கதிர்வேலன்,படங்கள்: உசேன்
''சினிமாவை தாண்டியது என் லட்சியம்!'' -அஜீத் அசல் முகம்
''சினிமாவை தாண்டியது என் லட்சியம்!'' -அஜீத் அசல் முகம்
''சினிமாவை தாண்டியது என் லட்சியம்!'' -அஜீத் அசல் முகம்
''சினிமாவை தாண்டியது என் லட்சியம்!''
- அஜீத் அசல் முகம்
''சினிமாவை தாண்டியது என் லட்சியம்!'' -அஜீத் அசல் முகம்
''சினிமாவை தாண்டியது என் லட்சியம்!'' -அஜீத் அசல் முகம்

ருத்ராட்சம், அஜீத் வாழ்விலும் விளையாட வருகிறது. 'அசல்' படத்தில் இருக்கு அந்த இமாலய மேஜிக் என்கிறார்கள்.

இந்திய மண்ணிலேயே கால் பதிக்காமல் மலேசியா, லண்டன், துருக்கி எனப் பறந்து பறந்து படம் பிடிக்கிறார்கள். செலவைப் பற்றிக் கவலைப் படாமல் தயாரிப்பு வேலைகள் களைகட்டுவதால் 'எந்திரனு'க்கு அடுத்து 'அசல்'தான் பெரிய படமாக இருக்கும் என்கிறார்கள். 'பில்லா' ஸ்டைலையே அடித்துச் சாய்க்க வேண்டும் என்று பில்டப்கள் பின்னியெடுக்கிற படப்பிடிப்பாம்! மிதமான குளிர், இதமான மழை என கிளைமேட்டே அல்டி மேட்டாக இருந்த நாளில் அஜீத்துடன் சந்திப்பு.

கொஞ்சம் நரை உள்ள தாடியிலேயே அசல் அழகு. கலக்கலான கலரிங் ஹேர் ஸ்டைல். ''சினிமா என் தொழில். ஆனா, அதையும் தாண்டி ஒரு மனுஷனா பேசுறதுக்கும், ரசிக்கிறதுக்கும், என்னோட லட்சியமா நினைக்கிறதுக்கும் நிறைய இருக்கு!'' என அவர் தொடங்க... நட்பின் புள்ளியில் ஆரம்பிக்கிறது குளிர்ப் பேச்சு.

''நல்ல வாழ்க்கை வாழறோம். தொழிலுக்கு வேண்டிய மரியாதை குடுக்குறோம். அதே சமயம் டென்ஷன்ல இருந்து தப்பிக்க நமக்குன்னு சில பொழுதுபோக்குகள் வேணும். நான் ரொம்பப் பிரியப்பட்டுத் தேர்ந்தெடுத்தது ஏரோ-மாடலிங். சொந்தமா அச்சு அசல் ஒரு மினி ஹெலிகாப்டர். கம்ப்யூட்டர் கொஞ்சம் தெரிஞ்சுக்கிட்டு கொஞ்சம் கிரியேட்டிவிட்டி, கொஞ்சம் டெக்னிக்கலா, ஜாலியா ரிமோட்ல விளையாடலாம். நிறைய நேரம் சினிமாவில் இருக்கோம். அதுக்காக, அல்லும் பகலும் சினிமாவே போதும்னு இருந்திட முடியாது. கேமராமேன் அரவிந்தன்தான் இந்த ஹெலிகாப்டர் விளையாட்டை எனக்கு அறிமுகப்படுத்தினார். சடார்னு பொறி தட்டி இதைப் பிடிச்சுக்கிட்டேன். இப்ப நானும், என் நண்பர்களும் சேர்ந்து ரேடியோ கன்ட்ரோல் பைலட்ஸ் அசோசியேஷன்னு ஆரம்பிச்சிருக்கோம். என் நண்பர் டாக்டர் அருள்மொழிவர்மன் மேல்மருவத்தூரில் எங்களுக்காக 5 ஏக்கர்

''சினிமாவை தாண்டியது என் லட்சியம்!'' -அஜீத் அசல் முகம்

நிலத்தை ஒதுக்கிக் கொடுத்திருக்கார். எங்களுக்கான ஒரு ஏர்போர்ட், ஸ்பெஷல் ரன்வே, கொஞ்சம் ஆகாயம்னு ஜாலியா விளையாடுவோம். இன்னும் கொஞ்ச நாள்ல இந்த விளையாட்டு இன்னும் பிரபலமாக வாய்ப்பு இருக்கு!''

''எல்லோரும் உங்களை ஆச்சர்யமாகப் பார்த்த கார் ரேஸில் உங்க மனசு போனது எப்படி?''

''எங்க வீடு ஆழ்வார்பேட்டையில் சேஷாத்ரி ரோட்டில் இருந்தது. ரேஸ் நடக்கும் சமயங்களில் சாயங்காலம் கார்கள் குவிய ஆரம்பிக்கும். விர்ர் விர்ர்னு வண்டிகள் கலர் கலரா வந்து நிக்குற அழ கும், தரையோடு தரை மாதிரி இருக்கிற புது அமைப் பும் என்னைக் கட்டிப் போட்டுச்சு. 2003-ல் பி.எம்.டபிள்யூ ஃபார்முலா சேம்பியன்ஷிப்பில் மலேசியா, தாய்லாந்து, ஜப்பான், கொரியா, இந்தோனேஷியான்னு அப்படியே ஒரு ரேஸ் டூர் போன நாட்களை மறக்க முடியாது. 2004-ல் பிரிட்டிஷ் ஃபார்முலா 3-ல் கலந்துக் கிட்டு 3-வது இடம் வந்தேன். சினிமாவைத் தாண்டியும் இது போன்ற பதிவுகள் கிடைச் சதை இன்னிக்கு நினைச்சாலும் மகிழ்ச்சியா இருக்கு!''

''இப்போ ஒரு தேர்ந்த புகைப்படக்காரராவும் உருமாறிட்டு வர்றீங்களாமே?''

''சினிமாவை தாண்டியது என் லட்சியம்!'' -அஜீத் அசல் முகம்

''ஹா... எனக்கு மனிதர்களை அவங்களோட இயல்போடு படம் பிடிக்கிறது ரொம்பப் பிடிக்கும். நான் காருக்கு பெட்ரோல் போடக் காத்திருந்த சின்ன அவகாசத்தில் ரோட்டோரம் உட்கார்ந்திருக்கிற ஒரு பெரியவரின் தோற்றம்... 'ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண் டால் என்ன?'ங்கிறது மாதிரி இருந்தது. வெறிச்ச பார்வை, தளர்ந்த உடல்... எனக்கு ஒரு படம் கிடைக்கும் என உந்து தல் இருந்தது. படத் தின் முந்தைய விநா டியைத் தவறவிட்டுட் டோமான்னு ஒவ்வொரு படத்தை க்ளிக் செய் யும்போதும் நினைக்கிறது ஆச்சர்யமா இருக்கு. எனக்கு இடங்கள், பாவங்களைவிடவும் மனிதர்களை, அவங்களோட இயல்பான பொழுதுகளைப் படம் பிடிக்க ஆசையாக இருக்கு!''
''எப்படி வருது 'அசல்'?''

''இப்ப நான் அமைதியாக இருக்கேன். நல்ல விதமாக, நம்பிக்கையோடு 'அசல்'ல நடிக்கிறேன். 'அசல்' அதுவா வந்து பேசட்டும் அசலா!''

''சினிமாவை தாண்டியது என் லட்சியம்!'' -அஜீத் அசல் முகம்

அஜீத்தின் அடுத்த படம்?

கேட்டாலே தித்திக்கிற, பத்திக்கிற மாதிரி யான ஜாலி காம்பினேஷன் ஒன்றுகாதில் விழுகிறது. 'தல'க்கு ஜோடி ஸ்ருதி ஹாச னாமே? டைரக்ஷன் - 'கோவா'ரிட்டர்ன் வெங்கட் பிரபுவாமே? 'மொழி' படத்தில் அபார்ட்மென்ட் செக்ரெட்டரியாகக் கலக்கிய பிரம்மானந்தா, அதில் அஜீத் துக்குப் போட்டியாக காதல் டார்ச்சர் தரப் போகிறாராமே?

''சினிமாவை தாண்டியது என் லட்சியம்!'' -அஜீத் அசல் முகம்
''சினிமாவை தாண்டியது என் லட்சியம்!'' -அஜீத் அசல் முகம்