Published:Updated:

செக்ஸின்னா பிபாஷா... பார்டின்னா பிரியங்கா!

செக்ஸின்னா பிபாஷா... பார்டின்னா பிரியங்கா!

பிரீமியம் ஸ்டோரி
செக்ஸின்னா பிபாஷா... பார்டின்னா பிரியங்கா!
சார்லஸ்
செக்ஸின்னா பிபாஷா... பார்டின்னா பிரியங்கா!
செக்ஸின்னா பிபாஷா... பார்டின்னா பிரியங்கா!
செக்ஸின்னா பிபாஷா... பார்டின்னா பிரியங்கா!
செக்ஸின்னா பிபாஷா... பார்ட்டின்னா பிரியங்கா!
செக்ஸின்னா பிபாஷா... பார்டின்னா பிரியங்கா!
செக்ஸின்னா பிபாஷா... பார்டின்னா பிரியங்கா!

ஷாரூக், அமீர், சல்மான் என பாலிவுட் ஹீரோக்கள் எல்லாம் 'சித்தப்பா'க்கள் ஆகிவிட்டதால், இளமையும் இனிமையுமான 'லவ்வர் பாய்', 'ப்ளே பாய்' ஹீரோ இடத்துக்கு அங்கு ஆட்கள் தேவை!

'ஜப் வி மெட்', 'கமினே' என அடுத்தடுத்த ஹிட்களால் கிட்டத்தட்ட அந்த இடத்தை எட்டிப் பிடித்து விட்டார் ஷாகித் கபூர். கரீனா கபூருடன் காதல், பிறகு பிரிவு, 15 கோடி ரூபாய் சம்பளம், பிரியங்கா சோப்ராவுடன் கிசுகிசு என ஹிட் ஹீரோவுக்கான அனைத் துத் தகுதிகளும் ஷாகித்திடம் செம ஃபிட். 'ரோஜா' படத்தில் தீவிரவாதிகளின் தலைவனாக நடித்த பங்கஜ் கபூரின் மகன் இவர். ஃபாரின் டூர் பரபரப்பில் இருந்தவருடன் அடம்பிடித்து வம்பிழுத்து சாட் செய்ததில் இருந்து...

''பளிச்சுனு ஒரு 'சாக்லேட் பாய்' இமேஜ் வந்துச்சு உங்களுக்கு. திடீர்னு 'கமினே' படத்துல நெகட்டிவ் ரோல் நடிச்சு சீரியஸ் ஆக்டர் இமேஜுக்கு டிரை பண்றீங்களே?''

''எவ்வளவு நாள்தான் லவ்வர் பாய் கேரக்டர் மட்டுமே பண்ணிட்டு இருக்க முடியும். வித்தியாசமா ஏதாவது முயற்சி பண்ணினால்தானே அடுத்தடுத்த உயரங்களுக்குப் போக முடியும். இப்போது நான் நடித்திருக்கிற 'தில் போலே ஹடிப்பா' ஜாலியான என்டர்டெயினர். நான் சிக்ஸ் பேக்ஸ் வெச்சிருக்கேன். என் ஜோடி ராணி முகர்ஜி. நான் சிக்ஸ் பேக்னா, அவங்க ஜீரோ சைஸ்ல வந்து நிக்குறாங்க. ஃபிட்னெஸ், பெர்ஃபார்மன்ஸ் எல்லாத்திலும் பயங்கரப் போட்டி. கென் கோஷ் இயக்கத்தில் நான் நடிக்கிற அடுத்த படத்துக்காக இப்போ எய்ட் பேக்ஸ் வெச்சிருக்கேன். அந்த போட்டோஸ் கேக்காதீங்க... அதெல்லாம் டிசம்பர் ரிலீஸ்!''

''ஆனா, ஹிந்திப் பட நடிகர்கள் சிக்ஸ் பேக்ஸ், எய்ட் பேக்ஸ், ஜீரோ சைஸ்னு ஸ்டைலுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்குறாங்க. பெர்ஃபார்மன்ஸில் கோட்டை விட்டுர்றாங்கன்னு ஒரு பேச்சு இருக்கே?''

''ஒரு 'ஸ்டார்' ஆகணும்னா, அதுக்குன்னு சில ஸ்பெஷல் தகுதிகளை வளர்த்துக்கணும். அதில் ஒண்ணு, ஃபிட்னெஸ். 'ஸ்டார்' - 'ஆக்டர்' இந்த ரெண்டு இமேஜுமே ஒரு ஹீரோவுக்கு அவசியம். கதையோட ஸ்கோப்புக்கு ஏத்த மாதிரி ஒரு படத்தில் இந்த இரண்டு அம்சங்களில் ஏதோ ஒன்று அதிகமாக வெளிப்படும். அதைத் தவிர்க்க முடியாது. எல்லா ஸ்டாருக் குள்ளேயும் நிச்சயம் ஒரு ஆக்டர் இருப்பான். ஆனா, எல்லா ஆக்டருக்குள்ளேயும் ஒரு ஸ்டார் இருப்பான்னு சொல்ல முடியாது!''

''ஷாரூக், அமீர், சல்மான் வரிசையில் இடம் பிடிச்சுட்டோம்னு உங்களுக்கே ஓர் உற்சாக நம்பிக்கை தோணியிருக்கா?''

''நான் சினிமாவில் நடிக்க ஆரம்பிச்சு, ஆறு வருஷம்தான் ஆகுது. இன்னும் என்

செக்ஸின்னா பிபாஷா... பார்டின்னா பிரியங்கா!

திறமை முழுக்க வெளிப்படலைன்னு நினைக்கிறேன். அதுக்குள்ளே என்னைத் தகுதி கடந்து ஒப்பிட வேண்டாமே!''

''எங்க ஹீரோக்கள் அங்கே நடிக்க வர்றாங்க. நீங்க தமிழ்ப் படங்களில் நடிப்பீங்களா?''

''இப்போதைக்கு பாலிவுட்லதான் என் முழுக் கவனமும் இருக்கு. கைல இருக்குற நாலு படங்களை முதலில் முடிக்கணும். தமிழ், ஹிந்தி இரண்டு மொழிகளிலும் சேலஞ்சிங்கான கதையோடு யாராவது வந்தா நிச்சயம் யோசிப்பேன்!''

''இப்போதுள்ள நடிகைகளில் செக்ஸியான நடிகை யார்?''

''பிபாஷா பாசு... அடுத்தது பிரியங்கா சோப்ரா!''

செக்ஸின்னா பிபாஷா... பார்டின்னா பிரியங்கா!

''ஆங்! நீங்களே சிக்கிட்டீங்க. கரீனா கபூர், சானியா மிர்ஸா வரிசையில் இப்போ உங்க லவ் லேடி பிரியங்கா சோப்ராவாமே?''

''கரீனா கபூருடன் எனக்கு இருந்த உறவு வெளிப்படையானது. உண்மையானது. அதை நான் எந்தக் காலத்திலும் மறக்க மாட்டேன்... மறைக்க மாட்டேன். ஆனா,

செக்ஸின்னா பிபாஷா... பார்டின்னா பிரியங்கா!

சில பிரச்னைகளால் பிரிஞ்சுட்டோம். ரெண்டு பேரும் சேர்ந்து எடுத்த முடிவுன்னாலும்... அதனால் எனக்குத்தான் வலி ஜாஸ்தி.

மத்தபடி சானியா மிர்ஸா, பிரியங்கா சோப்ராவெல்லாம் எனக்கு நல்ல ஃப்ரெண்ட்ஸ். நண்பர்களோடு ஹோட்டல், பார்ட்டின்னு போனால், உடனே 'காதல்'னு எழுதிடுறாங்க. நண்பர்களுடன் வெளியே போறது தப்பா?''

''சரி, அப்போ யார்தான் உங்க காதலி?''

''என் கேரக்டருக்கு முற்றிலும் எதிராக இருப்பவள்தான் என் காதலியாக இருக்க முடியும்.

ரெண்டு பேரும் ஒரே கேரக்டரா இருந்தால், கொஞ்ச நாள்ல போரடிக்க ஆரம் பிச்சுடும். என்னோட எல்லா விஷயத்திலும் சண்டை போடும் ஒரு பெண்ணைத் தான் தேடிட்டு இருக்கேன். இதுவரை சிக்கலை!''

 
செக்ஸின்னா பிபாஷா... பார்டின்னா பிரியங்கா!
செக்ஸின்னா பிபாஷா... பார்டின்னா பிரியங்கா!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு