Published:Updated:

மலரும் நினைவில் மகிழும் ராதா!

மலரும் நினைவில் மகிழும் ராதா!

பிரீமியம் ஸ்டோரி
மலரும் நினைவில் மகிழும் ராதா!
எம்.குணா
மலரும் நினைவில் மகிழும் ராதா!
மலரும் நினைவில் மகிழும் ராதா!
கார்த்திக் முதல் கார்த்திகா வரை...
மலரும் நினைவில் மகிழும் ராதா!
மலரும் நினைவில் மகிழும் ராதா!
மலரும் நினைவில் மகிழும் ராதா!
மலரும் நினைவில் மகிழும் ராதா!
மலரும் நினைவில் மகிழும் ராதா!

ழைவிட்டும் தூவானம் விடாத கதையாக 'எண்பதுகள் சந்திப்பு'தான் இன்னமும் கோடம்பாக்க சுவாரஸ்யம். ''என்னதான் விஷயம்... கொஞ்சம் பளிச்னு சொல்லுங்களேன்?'' என்று ராதாவிடம் சரண்டர் ஆனேன்.

''கிட்டத்தட்ட 80-களில் தமிழ் சினிமாவில் பரபரப்பா இருந்தவர்களில் பலர் 'ஸ்டில்ஸ்' ரவி மகளின் திருமணத்தில் எதிர்பாராமல் சந்தித்தோம். கல்யாண வீட்டுப் பரபரப்பில் எங்களால் மனம்விட்டுப் பேசிக்க முடியலை. அந்த வருத்தத்தை சுஹாசினியிடம் சொன்னப்போ, 'ஒரு மீட்டிங் அரேஞ்ச் பண்ணலாமே'ன்னார். லிசி வீடுதான் ஸ்பாட்னு ஃபிக்ஸ் ஆச்சு. பார்ட்டியின் தீம் கலர் பிளாக். அதனால எல்லாரும் பிளாக் டிரெஸ்லதான் வரணும்னு சொல்லிட்டோம். நாங்க அழைச்சவங்கள்ல ரெண்டு பேர்தான் மிஸ்ஸிங். சிரஞ்சீவி, ஃப்ளைட் மிஸ் பண்ணிட்டார். சரத், நடிகர் சங்க வேலைகளில் பிஸியா இருந்தார். மோகன், நதியா, ரேவதி, ராதிகா எல்லாரையும் நேர்ல பார்த்ததும் சந்தோஷத்துல திக்குமுக்காடிட்டேன். எங்க காலத்துல ஹிட்டான இளையராஜா பாடல்களைப் பாடி ஆடிட்டு இருந்தோம். எல்லோரும் அவங்கவங்க நடிச்ச படங்களோட வீடியோ கிளிப்பிங்ஸைக் கொண்டுவந்திருந்தாங்க. அதை ஸ்கிரீன்ல ப்ளே பண்ணி ரசிச்சோம். 'கிழக்கே போகும் ரயில்' படத்தில் ராதிகா ஆடின 'பூவரசம்பூ பூத்தாச்சு...' பாட்டுக்கு ரேவதி டான்ஸ் ஆட, 'மண்வாசனை' படத்துல ரேவதி நடிச்ச 'பொத்திவச்ச மல்லிகை மொட்டு...' பாட்டுக்கு ராதிகா ஆடினாங்க.

மலரும் நினைவில் மகிழும் ராதா!

ரஜினியும் ராதிகாவும் நடிச்ச 'போக்கிரி ராஜா' படத்துல வரும் 'நான் போக்கிரிக்குப் போக்கிரி ராஜா...' பாட்டை பச்சைப்பசேல்னு இருக்குற ஒரு புல்வெளியில் சூட் பண்ணியிருப்பாங்க. அந்த இடம் பாக்கத்தான் புல்லு. ஆனா, கீழே முட்டுமுட்டா கல்லுங்க இருக்குமாம். அங்கே ரஜினி யோட முதுகு மேல நின்னுட்டு ராதிகா டான்ஸ் ஆடுவாங்க. கல்லு குத்தினதால 28 டேக் வரைக்கும் போச்சாம். டேக் முடிஞ்சதும், 'ராதிகா, என் முதுகை இப்படிப் புண்ணாக்கிட்டியே'ன்னு பரிதாப மாச் சொன்னாராம். அன்னிக்கு பார்ட்டியில் அந்தப் பாட்டை ப்ளே பண்ணப்ப ரஜினி திரும்பவும், 'என் முதுகைப் புண்ணாக் கிட்டியே'ன்னு சொல்லிச் சிரிச்சார்.

ரஜினி, மோகன், கார்த்திக், சுரேஷ் எல்லோரையும் என் கல்யாணத்துக்கு அப்புறம் இப்போதான் பார்த்தேன். அப்பல்லாம் ரஜினியோட தலைமுடி அவர் என்ன சொன்னாலும் கேட்கும். அதை அவர்கிட்ட சொன்னப்போ, 'ஆமா ராதா... அதெல்லாம் அந்தக் காலம்'னு சிரிச்சார். 'யாரோ புது ஆள் குல்லா போட்டுட்டே வர்றாரே'ன்னு பார்த்தா என் முதல் ஹீரோ கார்த்திக். அவருக்கும் தலைமுடி எல்லாம் அம்பேல். 'ஹேய்! என்னப்பா ஆச்சு?'ன்னு நம்ப முடியாமக் கேட்டுட்டே இருந்தேன். 'ஏய்! உன் மகளையும் உன்னை மாதிரியே நடிகை ஆக்கிட்டே. கார்த்திகா அழகா இருக்கா. நல்லா நடிக்கச் சொல்லு. நீ நடிப்பு சொல்லிக்கொடுத்துடாத'ன்னு கலாய்ச்சுட்டு இருந்தார்.

படிச்ச காலேஜுக்குத் திரும்பப் போய் பழைய ஃப்ரெண்ட்ஸைப் பார்த்துட்டு வந்த மாதிரி இருந்துச்சு!'' என்றார் உற்சாகமாக!

 
மலரும் நினைவில் மகிழும் ராதா!
மலரும் நினைவில் மகிழும் ராதா!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு