நா.கதிர்வேலன்,படங்கள்:கே.ராஜசேகரன்

இதுவரை சொல்லாதது! -இந்த வாரம்: அமீர்

''மதுமிதாவைக் காதலித்தேன்... கலைஞரிடம் பேனா கேட்டேன்!''

ஒவ்வொரு மனதிலும் சொல்ல மறந்த, மறுத்த கதைகள் ஆயிரம் இருக்கும். அப்படி இதுவரை சொல்லாததை பிரபலங்கள் மனம் திறக்கிறார்கள் இங்கே...

''நம்மூரு சாமி எல்லாம் பொட்டக்காட்டுலதான நிக்குது. திங்குறது, தூங்குறதுன்னு மழைக்கும் வெயிலுக்கும் பிளாட்ஃபார்ம்ல வாழ்ற பயபுள்ளைகளும் நம்ம பாட்டன் பூட்டன் வகையறாதான். நாமளும் அந்த காட்டுப்பயக் கூட்டம்தான. நம்மகிட்ட என்ன ரகசியம் இருக்கப் போகுது. நிறையப் பேசுவம்... 'இதுவரை சொல்லாதது' எதுன்னு நீங்கதான் எடுத்துப் போடணும்!'' - உற்சாகம் உருமி அடிக்கப் பேசுகிறார் அமீர்.

மிகச் சிறந்த நண்பன்:

''நான்தான். நானேதான்! நானே என்கூட கேள்வி கேட்டுப் பேசுவேன். இந்தப் பேட்டி முடிஞ்ச பிறகுகூட இதில் எவ்வளவு தூரம் உண்மை பேசியிருக்கேன், பொய் கலந்திருக்கு, நடிப்பு இருக்கான்னு நானும் நானும் பேசிக்குவோம். மத்த யாரை வேணும்னாலும் ஏமாத் தலாம். நம்மளை நாமே ஏமாத்தினா, அப்புறம் நம்ம வளர்ச்சிக்கு வழியே இல்லையே!''

அடிக்கடி வரும் கனவு:

''சின்ன வயசுல இருந்து இப்ப வரை பாம்புதான் அடிக்கடி என் கனவுல வரும். பாடாப்படுத்திரும் அந்தப் பாம்பு. கனவுல பயந்து நடுங்கி ஓடுவேன். விரட்டிக்கிட்டே இருக்கும். கொத்தவும் செய்யாது... நிக்கவும் செய்யாது. இப்படி ஒரு சைஸ் இருக்குமான்னு ஆச்சர்யப்படுற அளவு மகா சைஸ்ல பாம்புகள் வந்துட்டே இருக்கும்.

கல்யாணம் ஆன புதுசுல வண்டலூர் ஜூவுக்கு என் மனைவியைக் கூட்டிட்டுப் போனேன். கண்ணாடிக்குப் பின்னாடி பாம்புகளா இருந்துச்சு. என் மனைவிகண்ணா டியைத் தட்ட, பாம்புகள் சீறிச்சு. பதறி அலறிட்டேன். 'இவ்வளவு வீரனா நீங்க?'ன்னு என்னைப் பார்த்துச் சிரிச்சா என் மனைவி. அந்தப் பாம்புகளுக்கு போன ஜென்மத்துல என்ன பாவம் செஞ்சேன்னு தெரியலை. தொடர்ந்துக்கிட்டே வருது. என்ன செய்றதுன்னும் புரியலை!''

சென்டிமென்ட்:

''அதெல்லாம் மதுரையோடு சரி. சென்னைக்கு வந்து நாயா பேயா அலைஞ்சு திரிஞ்சு, களைச்சு, துடிச்சுப் போய் நிக்கும்போது சென்டிமென்ட்டுக்கு எல்லாம் கணக்கு வழக்கு ஏது. நான் சென்டிமென்ட்களை அண்டவிடுறதில்ல!''

பொக்கிஷம்:

''ஒரு சமயம் கலைஞரைப் பார்க்கப் போயிருந்தேன். பேசிட்டு எல்லோரும் திரும்புறோம். நான் மட்டும் தயங்கி நிக்கிறேன். 'என்னப்பா?'ன்னு கேட்கிறார் கலைஞர். 'உங்க பேனா ஒண்ணு வேணும்'னு சொல்றேன். 'நான் எழுதறது வெறும் 10 ரூபா பேனாப்பா'ன்னு சொல்லிட்டு, சண்முகநாதன்கிட்ட ஒரு பேனா எடுத்துட்டு வரச்சொல்லி, என்கிட்ட கொடுத்தார். வாங்கி சட்டைப் பைக்குள்ள வெச்சுக்கிட்டேன். 'புது பேனான்னா எழுதிப் பார்க்கணும்'னு சொல்லி, அவரே பேனாவை வாங்கி அமீர்னு எழுதிக் கொடுத்தார். அந்தப் பேனாதான் இப்போ வரை நான் பாதுகாத்து வெச்சிருக்கிற பொக்கிஷம்!''

தத்துவம்:

'' 'நீ வாழ பிறரைக் கெடுக்காதே!' திங்க, தூங்க நேரம் இல்லாம பரபரன்னு ஓடிட்டு இருக்குற நம்ம சமூகத்துக்கு ரொம்ப அவ சியமா தேவைப்படுற வாக்கியம் இது!''

பணம்:

''கையில் பத்து பைசா இல்லாம பசியால் துடித்த பொழுதுகள்லாம் இருந்தது. அதிசயமாக் கையில 100 ரூபா கிடைச்சா பர்ஸைத் தூசி துடைச்சு அதுக்குள்ள வெச்சுக்குவேன். 'பருத்திவீரன்' சமயத்துல 500 ரூபா வரை பர்ஸ்ல நின்னுச்சு. 'யோகி' நடிக்கும்போது 3,000 ரூபா வரை தங்குது. ஆனா, பசியால துடிச்ச அந்த நாட்களைவிட இந்த நாளின் நிம்மதி நிச்சயம் குறைவுதான்!''

10 வருடங்கள் கழித்து:

''இதைவிடவும் நல்ல மனுஷனா இருக்கணும். நல்ல கலை ஞனாகக்கூட பரிணாம வளர்ச்சி அடைய வேண்டாம். நல்ல மனுஷனா இருக்கணும். இப்ப மாதிரியே கடன் இல்லாம இருக் கணும். என் தொழுகையில்கூட அதைத்தான் வேண்டுவேன்!''

கடைசியாக அழுதது:

''கடந்த 30 வருஷத்துல மூணே தடவைதான் அழுதிருக்கேன். அப்பா திடீர்னு இறந்து போயிருந்தார். ரெண்டு நாள் கதறிக் கதறி அழுதேன். அடுத்து என் காதலி என்னைவிட்டுப் போன நாள். அப்பாவுக்கு அழுததில் பாதி அழுத நாள். அடுத்து 10 வருஷமா சென்னையில் கிடந்து அல்லல்படுறேன். நடுநடுவே மதுரைக்குப் போய் மனைவியைப் பார்த்துட்டு வருவேன். கர்ப்பிணியான என் மனைவியின் பிரசவம். ஒரு கட்டத்தில் குழந்தையும் தாயும் நிலைமை மோசம்னு சொல்றாங்க. பார்க்காத மகனைவிட, சந்தோஷப்படுத்திப் பார்க்காத மனைவி என்னைவிட்டுப் போயிடுவாளோன்னு பயந்து அழுதேன்!''

ஆசைப்பட்டு நடக்காதது:

''காதல்தான். அஞ்சாம் கிளாஸ் படிச்ச காலத்துல இருந்து லவ் பண்ணிட்டு இருக்கேன். எத்தனையோ பெண்கள் மனசைத் தொட் டுப் போயிருக்காங்க. ஆனா, எல்லாமே ஒரு தலைக் காதல். ஒரு காதல்கூடவா வெற்றியில் முடியாமல் போகும்? என் கணக்கில் அப்படித்தான் நடந்தது. ஒரே ஒரு தடவைதான் அந்தப் பொண்ணு ஏமாத்திட்டுப் போய்ட்டது. என் ராசி, நான் எந்தப் பொண்ணை லவ் பண்ணினாலும் அவளுக்குக் கல்யாணம் ஆயிடும். காலங்காலமா இது நடந்துக்கிட்டு இருக்கு. இங்கே பாருங்க, என் படம் 'யோகி'யில் மதுமிதாவைக் காதலிக்கிற மாதிரி நடிச்சா, அந்தப் பொண்ணுக்கு உடனே நிஜமாக் கல்யாணம் நடந்திருச்சு!''

பயம்:

''இறைவனுக்கு மட்டுமே பயப்படுவேன். அவர்தான் என்னை இயக்குகிறார். வேறு யார்கிட்டேயும் எனக்குப் பயமே கிடை யாது!''

மறக்க முடியாத சம்பவம்:

''எப்படி மறக்க முடியும்!

மூணே பேர் ஆரம்பிச்ச ஓர் அமைப்பு, கட்டுக்கோப்பான இயக் கமா வளர்ந்து, தனி அரசாங்கம் அமைச்சு ஆண்ட விடுதலைப் புலி கள் இயக்கம் வீழ்ந்ததை எப்படி ஜீரணிக்க?

ஏன் அப்படி நடந்தது? எப்படி எல்லோரும் இருந்தும் அதை அனுமதிச்சோம்? ஒரு திருட்டு, வழிப்பறி, கற்பழிப்புன்னு நடக்காத ராஜ்ஜியம் எல்லார் கண்ணு முன்னாலும் இருந்ததே. 30 வருஷம் கட்டிக்காத்த இயக்கத்தை அழிக்கவிட்டது யாரு?

இனிமே எதிர்காலத்தில் ஆராய்ச்சியாளன் ஹிட்லர் கொடுமைன்னு எழுதாமல், இந்தப் பேரழிவுச் சம்பவத்தை எழுத வெச்சோமே, எப்படி அதை மறப்பது!

நாம் ஒவ்வொருத்தரும் கற்றுக் கொள்ள அவங்க ஆட்சியில்

எவ்வளவு கண்ணியத்தைக் கடைப்பிடிச்சாங்க. இரவு 12 மணிக்குத்தெரு வில் பெண்கள் அங்கே எந்தப் பய மும் இல்லாமல் நடமாட முடிஞ்சுதே. அதை எல்லாம் ஏன் மறந்தோம்?

இவ்வளவு நல்லது நடந்ததையும் இலங்கை அரக்கன் ஒரே நாளில் ரசாயனக் குண்டுகளால் முடிச்சு வெச்சானே. என் மனசைத் துள்ளத் துடிக்கவெச்ச ஒரே சம்பவம் அது மட்டும்தான்!''