Published:Updated:

16 வயசுல குண்டு... 25 வயசுல ஈரம்!

16 வயசுல குண்டு... 25 வயசுல ஈரம்!

பிரீமியம் ஸ்டோரி
16 வயசுல குண்டு... 25 வயசுல ஈரம்!
ம.கா.செந்தில்குமார், படங்கள்: வி.செந்தில்குமார்
16 வயசுல குண்டு... 25 வயசுல ஈரம்!
16 வயசுல குண்டு... 25 வயசுல ஈரம்!
16 வயசுல குண்டு... 25 வயசுல ஈரம்!
16 வயசுல குண்டு... 25 வயசுல ஈரம்!
16 வயசுல குண்டு... 25 வயசுல ஈரம்!
16 வயசுல குண்டு... 25 வயசுல ஈரம்!

''நடிக்கணும்னு ஆசை. ஹீரோயினாத்தான் நடிக்கணும்னு முடிவு பண்ணியாச்சு. சும்மா உக் காந்துட்டு இருந்தா வேலைக்கு ஆகுமா?அதான்தடா லடியா வெயிட் குறைச்சு ஸ்லிம் ஆகிட்டேன். 'சமுத்திரம்'ல பார்த்த சிந்துவுக்கும் 'ஈரம்'ல பார்த்த சிந்துவுக்கும் வித்தியாசம் தெரியுதா?'' என்று கண்க ளில் ஆர்வம் தேக்கிக் கேட்கிறார் அழகாக! பக் கத்து வீட்டுப் பெண் போல இயல்பான முகம் மட்டுமல்ல; பழக்கவழக்கங்களும்! வாசல் வந்து வரவேற்றது போலவே, வழியனுப்பவும் செய்கிறார்.

''நீங்க 'சமுத்திரம்' படத்துல நடிச்ச சிந்துவா... நம்பவே முடியலை. ஏன் இத்தனை வருஷ இடைவெளி?''

'' 'சமுத்திரம்', 'கடல்பூக்கள்', 'யூத்'னு நடிச்சபிறகு தமிழ்ல 'ஈரம்' என்னோட நாலாவது படம். இதுக்குஎல்லாம் முன்னாடியே கன்னடம், தெலுங்கு, மலையாளம்னு பல படங்கள்ல நடிச்சுட்டேன். தமிழ்ல எனக்கு சரியான கேரக்டர்கள் கிடைக்கலை. அத னால மற்ற மொழிப் படங்கள்ல தீவிரக் கவனம் செலுத்த ஆரம்பிச்சுட்டேன். ஆனால், இப்போ 'ஈரம்' கிட்டத்தட்ட எனக்கு ஓர் அறிமுக வெளிச்சம் கொடுத்திருக்கு. அதை அப்படியே பிடிச்சுட்டு தமிழ்ல ஒரு நல்ல இடத்தைப் பிடிக்கணும்கிறதுதான் இப்ப என் அடுத்த ஐந்தாண்டுத் திட்டம்!''

''அது எப்படிங்க 'சமுத்திர'த்தைக் காட்டிலும் இப்ப இளமை அதிகரிச்சு வந்திருக்கீங்க. கமல் சார்கிட்ட டியூஷன் எதுவும் போனீங்களா?''

''நீங்க நம்பினாலும் நம்பாவிட்டாலும் கமல் சார்தான் எனக்கு ரோல் மாடல். இன்னொரு விஷயத்தையும் நீங்க நம்பியே ஆகணும். 'சமுத்திரம்' படத்துல நடிக்கும்போது எனக்கு வயது 16தான். இப்ப 25. அப்ப நான் கொஞ்சம் குண்டாகவும் இருப்பேன். புடவை கட்டிட்டு நடிச்சதால பெரிய பொண்ணு மாதிரி

16 வயசுல குண்டு... 25 வயசுல ஈரம்!

தெரிஞ்சிருக்கலாம். அந்தப் படத்துல நடிக்கும்போதே 'வெயிட்டைக் குறைச்சா வெளுத்து வாங்கலாம்'னு செட்ல என்னைச் சுத்தி முணுமுணுத்தாங்க. அப்ப எனக்கு அதோட சீரியஸ்னெஸ் புரியலை. புரிஞ்சப்ப வொர்க்-அவுட் பண்ணேன். பேக் டு ஃபார்ம்!''

'' 'ஈரம்' வாய்ப்பு எப்படிக் கிடைச்சது?''

''அந்தப் படத்துக்காக குடும்பப் பாங்கான முகம் வேணும்னு டைரக்டர் அறிவழகன் சார் தேடிட்டு இருந்திருக்காரு. அப்ப ஒரு தெலுங்குப் பத்திரிகை அட்டையில வந்த என் படத்தைப் பார்த்துட்டுஎன்னைக் கூப்பிட்டாரு. ஷங்கர் சார்தான்

16 வயசுல குண்டு... 25 வயசுல ஈரம்!

தயாரிப்பாளர்னு சொன்னதும், என் மனசுல பளிச்னு வந்தது அவர் தயாரிச்ச 'காதல்' படம்தான். எதுவும் யோசிக்காம உடனே 'ஒ.கே.' சொல்லிட்டேன். படம் பார்த்துட்டு 'ரொம்ப நல்லா நடிச்சிருக்கீங்க. தொடர்ந்து நல்ல படங்களா பண்ணுங்க'ன்னு ஷங்கர் சார் சொன்னது, எனக்கான பொக்கிஷப் பாராட்டு!''

''தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்னு எல்லா மொழிகளும் கொஞ்சம் கொஞ்சம் பேசுறீங்களே...''

''நல்லாவே பேசுவேன். பெங்களூர்ல செட்டிலான மலையாளப் பொண்ணு நான். அப்பா, சென்னைக்காரர். அதனால், தமிழ், மலையாளம், கன்னடம் போக தெலுங்கு, ஹிந்தி, இங்கிலீஷ்னு எனக்கு மொத்தம் எட்டு மொழிகள் தெரியும். ஒரு அண்ணன், ஒரு அக்கா. அக்கா, பெங்களூர் ஐ.பி.எம்ல வேலை செய்யுறாங்க. அண்ணன் மனோஜ் கார்த்திக், கன்னட மியூஸிக் சேனல்ல காம்பியரா இருந்தார். இப்ப அவரும் ஒரு கன்னடப் படத்துல ஹீரோவா நடிச்சுட்டு இருக்கார்!''

16 வயசுல குண்டு... 25 வயசுல ஈரம்!

''வேற என்ன... கிளாமரா நடிக்கச் சொல்வாங்களே... என்ன பண்ணப் போறீங்க?''

''தமிழ்ல இப்பவே நிறைய வாய்ப்புகள் கதவைத் தட்டினாலும் எந்தப் படத்திலும் கமிட் ஆகலை. கிளாமரா நடிக்கலாமா வேணாமா என்பதைப்பற்றி இந்த நிமிஷம் வரை எந்த முடிவும் எடுக்கலை. நீங்களே சொல் லுங்க... எனக்கு கிளாமர் கேரக்டர்சூட்ஆகுமா?''

ஹ்ம்ம்... இப்படித்தாங்க நாம நல்லவனா இருக் கப் பார்த்தாலும் இந்த உலகம் நம்மளைச் சும்மா விட மாட்டேங்குது!

 
16 வயசுல குண்டு... 25 வயசுல ஈரம்!
16 வயசுல குண்டு... 25 வயசுல ஈரம்!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு