மறக்க முடியாத நாள்:
''இதோ இப்போ தேசிய விருது கிடைச்ச இந்த இனிய நாள்னு வெச்சுக்கலாம். 'இப்பவாச்சும் பொறுப்பு வந்திருச்சா?'ன்னு கேட்கிறாங்க. பொறுப்பு வந்ததால்தானே, 'காஞ்சிவரம்' மாதிரி படத்தில் நடிக்கிறேன். 'மொழி' தயாரிக்கிறேன். 'தேசிய விருதுக்குப் பிறகு என்ன?'ன்னு கேட்டால், 'அது ஒரு மைல் கல்' அவ்வளவுதான்!
ஒரு நடிகனுக்கு தேசிய விருது என்பது அந்த வருஷத்தின் சிறந்த நடிப்புக்கே தவிர மொத்த வாழ்க்கைக்குமான கிரீடம் கிடையாது. அந்தக் கிரீடம் சிவாஜி, நாகேஷ், எஸ்.பி.ரங்காராவ் இவங்களுக்கு கடைசி வரை கிடைக்கவே இல்லை. இது எனது தனிப்பட்ட பயணம். லவ்வர் பாயா ஆரம்பிச்சு 'தாரே ஜமீன் பர்'னு பொறுப்புடன் ஒரு படம் எடுத்த அமீர்கானின் பக்குவத்துக்கு முன்னாடி, 15 வருஷமாகச் சிறப்பாக நடிக்கிற மோகன்லாலின் அனுபவத்துக்கு முன்னாடி, டி.வி. சீரியல் நடிகனா ஆரம்பிச்சு ஸ்டார் ஹீரோவா உயர்ந்து நிக்கிற ஷாரூக்குக்குப் பக்கத்தில், வில்லனா அறிமுகமாகி பெரியாரைக் கண் முன்னாடி நடமாடவிட்ட சத்யராஜ் முன்னாடி ஒப்பிட்டால், நான் ஒண்ணும் செய்யவே இல்லை. இது அவை அடக்கம் கிடையாது. உண்மையிலும் உண்மை. அதனால், இந்த நாள் கிட்டத்தட்ட எனக்குப் பிறந்த நாளா அமைந்துவிட்டது. 'சம்ப ளம் வாங்காமல் நடிச்சிட்டேன்'னு பாராட்டு வேறு. காசில்லாமல் நடிக்க நான் என்ன முட்டாளா? தேசிய விருதுதான் எனக்குச் சம் பளம்!''
|