Published:Updated:

நடிகர் சூர்யா குறித்த 25 சுவாரஸ்ய தகவல்கள்!

பொறுப்புள்ள மகன், பாசக் கணவன், அன்புள்ள அண்ணன், சிறந்த நடிகர்... அத்தனைக்கும் உதாரணமாக இருக்கும் சூர்யாவைப் பற்றி குட்டி க்யூட் தகவல்கள்...

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

 

பொறுப்புள்ள மகன், பாசக் கணவன், அன்புள்ள அண்ணன், சிறந்த நடிகர்... அத்தனைக்கும் உதாரணமாக இருக்கும் சூர்யாவைப் பற்றி குட்டி க்யூட் தகவல்கள்...

பார்ட்டி, டிஸ்கோதெ, டிரிங்ஸ், சிகரெட் எந்தப் பழக்கமும் இல்லாதவர் சூர்யா. சூட்டிங் முடிந்தால் அப்பா, அம்மா, மனைவி என செட்டில் ஆவதையே விரும்புவார். கேட்டால், 'அப்பாவும் இப்ப டித்தானே இருந்தார்!' என்பார்.

நடிகர் சூர்யா குறித்த 25  சுவாரஸ்ய தகவல்கள்!

முருக பக்தர் சூர்யா. எழுந்தவுடன் குளித்துவிடுபவர். நெற்றி யில் கொஞ்ச நேரமேனும் திருநீறு துலங்கும். சமீபத்தில் திருவண்ணாமலைக்குச் சென்று, செருப்பு போடாமல் கிரிவலம் வந்திருக்கிறார்!

காலையில் ஹெல்த் டிரிங்ஸ், கொஞ்சம் உலர்ந்த பழங்கள். மதியம் மூன்று சிக்கன் பீஸ், சப்பாத்தி, வேகவைத்த காய்கறிகள். மாலை ஜுஸ், இரவு சப்பாத்தி. இதுதான் அவருடைய மெனு. ஸ்வீட்டுக்கு எப்பவும் தடா!

ராம்கோபால் வர்மாவின் ஹிந்திப் படத்தில் நடிக்கவிருப்பதால், 'சிங்கம்' சூட்டிங் முடிந்ததும் மாலை 6 மணி முதல் 10 மணி வரை ஹிந்தி டியூஷன் படிக்கிறார். வசனங்களைப் புரிந்துகொண்டு அவரே டப்பிங் பேச ஆசைப்பட்டுத்தான் இந்த ஏற்பாடாம்!

பொள்ளாச்சி பகுதிகளில் காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிக்கும் விண்ட் மில்களுக்குச் சொந்தக்காரர் சூர்யா. தேசிய வங்கியில் வாங்கிய கடன் முடிந்து, விண்ட் மில் விரைவில் சொந்தமாகப் போகிறதாம்!

துணி ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை பார்த்த காரணத்தால், சூட்டிங்கில் அவருக்கான ஆடைகளை அவரே கட்டிங் செய்து டிசைன் செய்கிறார்!

அவரது புதுப் படம் வெளியாகும்போதெல்லாம், அவர் படித்த லயோலா கல்லூரியின் பேராசிரியர் களுக்கு ஸ்க்ரீன் செய்து அபிப் பிராயம் கேட்பார்!

சூர்யாவின் பக்கத்துப் பக்கத்து வீட்டுக்காரர்கள் இயக்குநர்கள் பாரதிராஜா மற்றும் ஷங்கர். ஆனாலும், இவர்கள் இருவரின் படத்திலும் நடித்தது இல்லை சூர்யா!

30 வருடங்களுக்கு மேலாக சிவகுமார் குடும்பத்தின் டிரைவ ராகப் பணிபுரிந்து வரும் சண்முகத் தின் மீது சூர்யா, கார்த்தி, பிருந்தா மூவருக்கும் மிகுந்த மரியாதை. திருமணம் முடிந்தவுடன் சூர்யா, பிருந்தா ஆகியோர் தம்பதிகளாக அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கும் அளவுக்குப் பாசம் காட்டுவார்கள்!

தங்கை பிருந்தா மீது சூர்யாவுக்கு அலாதி பாசம். வாரத்துக்கு ஒரு முறையேனும் பிருந்தாவை அவர் பார்த்துவிட வேண்டும். நாட்கள் கடந்தால் இவரே தன் குழந்தை தியாவைத் தூக்கிக் கொண்டு தங்கையைப் பார்க்க ஓடிவிடுவார்!

ஸ்கூலுக்கு அடிக்கடி சென்ற 12ஙி பஸ்ஸில் இப்போது ஒரு ஜாலி டிரிப் அடிக்க வேண்டும் என்பது சூர்யாவின் நீண்ட நாள் ஆசை. ஆனால், 'வேண்டாம்... கூட்டம் சேர்ந்து எல்லாருக்கும் தொந்தரவாக இருக்கும்!' என்று நண்பர்கள் அவரை அரெஸ்ட் செய்து வைத்திருக்கிறார்கள். 'ஒருநாள் உங்களுக்கெல்லாம் டேக்கா கொடுத்துவிட்டு, ஜாலி டிரிப் அடித்தே தீருவேன்!' என்று பந்தயம் கட்டியிருக்கிறார் சூர்யா.

10 வருடங்களுக்குப் பிறகு ஒரு படம் இயக்க வேண்டுமென்பது சூர்யாவின் கனவு. இப்போதே ரீ- ரிக்கார்டிங், கதை விவாதம், எடிட்டிங் எனப் பாடம் கற்றுக் கொண்டு இருக்கிறார்.

உலக சினிமாக்களில் இரானியப் படங்கள்தான் சூர்யா சாய்ஸ். சூட்டிங் கேன்சல் ஆனால் அந்தப் படங்கள்தான் சூர்யாவின் ஹோம் தியேட்டரில் கதை பேசும்!

நடிகர் சூர்யா குறித்த 25  சுவாரஸ்ய தகவல்கள்!

வீட்டிலேயே ஜிம் இருக்கிறது. ஹிந்தி 'கஜினி'யில் அமீருக்கு உடற்பயிற்சியாளராக இருந்த அல்காஸ்தான் இப்போ சூர்யாவுக்கும் கைடு!

தன்னுடன் கல்லூரியில் படித்த நண்பர்களின் வீடுகளுக்கு திடீர் விசிட் அடிப்பது, கிறிஸ்துமஸ், தீபாவளி, ரம்ஜானின்போது வாழ்த்து அனுப்புவது சூர்யா பழக்கம். 'சினிமா ஸ்டார் ஆயிட் டோம்னு நண்பர்களை மறக்க முடியாதுல்ல!' என்பார்!

மகள் தியா ஆங்கிலம், ஹிந்தி என கலந்து கட்டிப் பேசி னாலும், சூர்யாவை 'அப்பா' என்றுதான் அழைக்கிறார்!

அடிக்கடி ரஜினி, கமல் படங்களைப் பார்ப்பார். சமீபமாக 'குருதிப்புனல்', 'மூன்று முகம்' படங்களை அடிக்கடி பார்க்கிறாராம்!

சமீபத்தில் சூர்யா ஆசை ஆசையாக வாங்கியிருப்பது ஆடி க்யூ 7 கார். அவரிடம்இருக்கும் நான்கு கார்களின் பதிவு எண்களும் 5005 தான்!

சினிமாவில் கமல்தான் சூர்யாவின் குரு. 'தேவர் மகன்' படம் வந்த சமயம் கமல் போலவே ஃபங்க் தலைமுடி வைத்துக் கொண்டு திரிந்தவர் சூர்யா!

சூர்யா கௌரவ நடிகராக நடித்த ஒரே படம் 'ஜூன் ஆர்'. ஜோவின் அன்புக்காக அது. ரஜினிக்காக ஒரே ஒரு காட்சியில் நடித்த படம் 'குசேலன்'!

எல்லோரையும் 'ஜி' என்றுதான் அழைப்பார் சூர்யா. வயதில் மூத்தவர்களை 'அண்ணே' என்பார். மிகவும் நெருக்கமானவர்களைத்தான் பெயர் சொல்லி அழைப்பார்!

நடிகர் சூர்யா குறித்த 25  சுவாரஸ்ய தகவல்கள்!

எம்.ஜி.ஆருக்குப் பிறகு அம்மா சென்ட்டிமென்ட்டில் இவரை அடித்துக்கொள்ள ஆளே இல்லை எனலாம். அந்தளவுக்கு அம்மா வார்த்தைக்கு மறு பேச்சு பேசாமல் நடந்துகொள்வார்!

செப்டம்பர் 11 அன்று காரைக்குடி சூட்டிங்கில் இருந்த சூர்யா, இயக்குநரிடம் அனுமதி வாங்கி, விமானத்தில் புறப்பட்டு சென்னை வந்து, பகல் பொழுதை வீட்டில் கழித்துவிட்டு, மீண்டும் அன்றிரவே காரைக்குடி சூட்டிங்குக்குத் திரும்பிவிட்டார். காரணம், அன்றுதான் சூர்யாவுக்குத் திருமண நாள்.

தேசியக் கட்சி நடத்தியசர்வே யில் முதல் இடத்தில் வந்தவர் சூர்யாதானாம். ஆனால், அவர்கள் விடுத்த அழைப்புக்கு, 'ஆளை விடுங்க சாமி' என்று கையெடுத்துக் கும்பிட்டு வழியனுப்பி இருக்கிறார்!

சூர்யா சம்பந்தப்பட்ட குடும்ப விழாக்களில் நண்பர்கள், உறவினர்கள் போக கட்டாயமாக அழைப்பு அனுப்பப்படும் இரண்டு நண்பர்கள் விஜய், அஜீத்!

 
நடிகர் சூர்யா குறித்த 25  சுவாரஸ்ய தகவல்கள்!
நடிகர் சூர்யா குறித்த 25  சுவாரஸ்ய தகவல்கள்!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு