ரஜினி, கமல், விஜய், அஜீத்களே வெரைட்டி விருந்து வைத்தால்தான்
தியேட்டருக்குள் கூட்டம் வருகிறது. சேனல்களில் மட்டும் உட்டாலக்கடி அடித்துக்கொண்டே இருக்க முடியுமா? 'கனாக் காணும் காலங்கள்' சக்சஸ் ஃபார்முலாவில் லொகேஷன் மட்டும் மாற்றம் செய்து, அடுத்த ஜில் ஜாலி கலாட்டாவை ஆரம்பித்துவிட்டது விஜய் டி.வி. இதுவரை சிட்டி பள்ளிக்கூடத்தில் ஜுஜுலிப்பான சேட்டைகள் செய்து வந்த மாணவர்கள் கும்பல், இனி அலப்பறை கொடுக்கவிருப்பது பட்டி பள்ளிக் கூடத் தில்! தேனி குமரகுருபரர் மேல்நிலைப் பள்ளிக்கூடம்தான் இனி 'கள்ளிக்காட்டுப் பள்ளிக்கூடம்!'
கிராமத்து மாணவர்கள் என்றால் வழிய வழிய எண்ணெய் தேய்த்து, வழித்துச் சீவி அடக்க ஒடுக்கமாக இருப்பார்கள் என்று எதிர்பார்த்த எனக்கு ஏமாற்றம். யூனிஃபார்ம் அணிந்த சண்டியர்களாக சூட்டிங் ஸ்பாட்டில் சலம்பிக்கொண்டு இருந்தார்கள் பயபுள்ளைகள்!
|