டி.வி. விகடன்
விகடன் பொக்கிஷம்
ஸ்பெஷல் -1
தொடர்கள்
Published:Updated:

அசின் தங்கச்சி யாரு?

அசின் தங்கச்சி யாரு?

கிஷோர்,டெலிசினி
அசின் தங்கச்சி யாரு?
அசின் தங்கச்சி யாரு?
அசின் தங்கச்சி யாரு?
அசின் தங்கச்சி யாரு?
அசின் தங்கச்சி யாரு?
அசின் தங்கச்சி யாரு?

யாரிடம் பேச ஆரம்பித்தாலும் குறைந்தது 30 மணித் துளிகள் பார்த்திபன் புகழ் பாடிவிட்டுத்தான் சப்ஜெக்ட்டுக்கு வருகிறார் பூர்ணா. 'வித்தகன்' படத்தில் பார்த்திபனுடன் பணிபுரிந்தபோது அவரின் ஆல்ரவுண்ட் திறமையை அறிந்துகொண்டாராம். 'சற்றே அசின் சாயலில் இருக்கும் பூர்ணாவை கன்னட மீடியாக்கள், 'அசின் சிஸ்டர்' என்றே அழைக்கின்றன!' என்பது பிட்டுக்குள் ஒரு டிட் பிட்!

ஆந்திராவில் 'மஹாதீரா' எகிடுதகிடு ஹிட்டடித்த ராசி, அதில் நடித்த காஜல் அகர்வாலை கோலிவுட்டிலும் ராசிக்காரி ஆக்கிவிட்டது. கார்த்தி நடிக்கும் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடி காஜல். ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிக்கும் காஜலின் தங்கை நிஷா, படிப்பு முடிந்ததும் நடிப்புப் பக்கம் வரப்போகிறார் என்பது நாட்டுக்கு இன்னொரு நல்ல செய்தி. இன்னுமாடா இந்த நாடு நம்மளை நம்புது!?

அசின் தங்கச்சி யாரு?

''ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் எங்க 'சரிகமப சேலஞ்ச்' போட்டியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் தாங்கள் ஆசைப்படும் பின்னணிப் பாடகர்களைத் தங்களுடைய பயிற்சியாளராகத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். வாணி ஜெயராம் மேடம்தான் நடுவர். நிகழ்ச்சியின் இடையே அவங்ககிட்ட, 'மேடம், நீங்க பாடின 'மேகமே... மேகமே...' பாட்டை ரீ-மிக்ஸ் பண்றாங்களாம். அந்தப் பாட்டை எங்களுக்காக ஒருமுறை பாடுங்களேன்'னு கேட்டோம். உடனே, அந்த மயக்கும் குரலால் செட்ல இருந்த எல்லாரையும் மெய்மறக்க வெச்சுட்டாங்க!'' என்று சிலிர்க்கிறார் அந்த நிகழ்ச்சியின் இயக்குநர் ஆண்ட்ரூ!

திருக்குறளை மட்டுமே மையமாகவைத்து 'குறள் பேசும் குரல்' என்ற நிகழ்ச்சியைத் தயாரிக்கிறது மக்கள் தொலைக்காட்சி. ''வார்த்தைகளைக் கலைத்துப் போட்டுக் கண்டுபிடிப்பது, சைகை மூலம் கண்டுபிடிப்பது என்று பல சுவையான சுற்றுகள் அமைத்திருக்கிறோம். இன்றைய இளைய தலைமுறைக்கு குறள் பற்றி எந்த அளவுக்குத் தெரியும் என்பதை நாம் தெரிந்துகொள்ள இந்த நிகழ்ச்சி பயன்படும். நிகழ்ச்சிக்காக ஏராளமான பள்ளி மாணவர்களைச் சந்தித்தோம். கிராமம், நகரம் வேறுபாடு இல்லாம நிறைய மாணவர்கள் திருக்குறள் மேல ஆர்வத்தோடு இருக்காங்க!'' என்கிறார் சௌமியா அன்புமணி. ஸ்ஸ்ஸ்ஸப்பா... முழுக்க முழுக்க தமிழ்ல ஒரு துணுக்குச் செய்தி!

'இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்', 'நான் அவன் இல்லை-2' படங்களைத் தவிர, வேறு படங்களில் கமிட் ஆகாமல் தமிழ்ப் பேட்டையைக் காலி செய்கிறார் லட்சுமிராய். காரணம், மலையாள கோட்டையைப் பிடிக்கும் லட்சியமாம். போன வேகத்தில் மம்மூட்டியுடன் இரண்டு, மோகன்லாலுடன் ஒன்று என்று படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார் லட்சுமி. தமிழ் டு மலையாளம் போன நடிகைகளில்

அசின் தங்கச்சி யாரு?

பெரிய ஹீரோக்களோடு இத்தனை படங்களில் நடித்துக்கொண்டு இருப்பது லட்சுமி ராய்தானாம். டோனி பிட்டைப் போட்டே போணி பண்ணிட்டியே லட்சுமி!

ஆத்தாடி பாவாட காத்தாட!' பாடலும் ரீ-மிக்ஸ் பட்டியலில் இடம் பிடிக்கிறது. 'பூவிலங்கு' படத்தில் முரளி ஆடிய பாடலுக்கு 'பாணா' படத்தில் ஆடவிருப்பது அவரது பையன் அதர்வா. கூட ஜோடி போடுவது இசையருவி மகேஸ்வரி. அந்தப் படத்தில் குப்பத்துப் பெண்ணாகக் கும்மியெடுக்கிறாராம் மகேஸ். சும்மா கும்மு கும்முன்னு கும்மு!

அசின் தங்கச்சி யாரு?

உற்சாக சந்தோஷத்தில் திளைக்கிறார் 'நாடோடிகள்' அபிநயா. ஹைதராபாத்தில் வேலை பார்த்துக்கொண்டு இருக்கும் அவருடைய அண்ணனின் திருமண வரவேற்புக்கு சசிகுமார், சமுத்திரக்கனி, ஒளிப்பதிவாளர் கதிர் என 'நாடோடிகள்' டீம் வந்திருந்ததுதான் சந்தோஷத்துக்குக் காரணம். கல்யாணக் கொண்டாட்டங்கள் முடிந்ததும் தெலுங்கு 'நாடோடிகளி'ல் நடிக்கக் கிளம்பிவிடுவார் அபிநயா! உனக்கு எப்ப கல்யாணம் கண்ணு?

யார்கிட்டேயும் சொல்லாதீங்க...

நம்புவதா... வேண்டாமா என்று தெரியவில்லை. ஹன்டர் நடிகர், 'நான் கட்சியில் சேருகிறேன். என் காட்ஃபாதரும் ஆனவருக்கு கவர்னர் பதவி தருவீர்களா?' என்ற கோரிக்கை வைத்தாராம். அதனால்தான் ஏஜ் லிமிட் சொல்லி, இளைஞரணி இடம்கூட மறுத்துவிட்டார்களாம்!

தனக்கு ஆகாத உறவினர்களுடன் வழியில் பேசினார் என்பதற்காகவே தனது டி.வி. நிறுவன ஊழியர் ஒருவரை வேலையை விட்டு நீக்கிவிட்டாராம், அந்த குயின் நடிகை. அரண்டு மிரண்டு கிடக்கிறார்கள் ஊழியர்கள்!

'இந்த ஆளோட அமெச்சூர் அட்டகாசம் தாங்கலையே!' என்று பெரிய அரசு இயக்குநரின் டபுக்கு டுபுக்கு பில்ட்-அப்களால் டார்ச்சர் ஆகிறார்களாம் ஊர் பெயர் படக் குழுவினர்!

'பாலிவுட்டிலேயே செட்டில் ஆகிவிடலாம்!' என்று முடிவெடுத்திருந்த கொச்சின் கோழி, அங்கு பப்பு வேகாமல் மீண்டும் கோலிவுட் ஹீரோ, இயக்குநர்களுக்கு மெசேஜ் பாஸ் செய்துகொண்டு இருக்கிறாராம்!

அக்கட பூமியில் பாலிடிக்ஸில் பரபரப்பு செய்து கொண்டு இருந்த பூ நடிகை, மாநிலக் கட்சியில் இருந்து தேசியக் கட்சிக்கு ஜம்பினார். ஆனால், அங்கு சீந்துவார் இல்லாததால் பேஸ்தடித்துக் கிடக்கிறாராம்!

'மும்பை, ஹைதராபாத்ல நீ ஆடிக்கோ, பாடிக்கோ... ஆனா, சென்னை வந்தா பார்ட்டி, டிஸ்கோன்னு சுத்திட்டு இருக்காதே!' என்று சென்னை அழகிக்கு பலத்த அட்வைஸ் செய்துஇருக்கிறாராம் தாய்க்குலம்!

 
அசின் தங்கச்சி யாரு?
அசின் தங்கச்சி யாரு?