Published:Updated:

அவுட்டோர் ஷுட்டிங்கில் அப்பா!

அவுட்டோர் ஷுட்டிங்கில் அப்பா!

அவுட்டோர் ஷுட்டிங்கில் அப்பா!

அவுட்டோர் ஷுட்டிங்கில் அப்பா!

Published:Updated:
##~##

''அப்பா அவுட்டோர் ஷூட்டிங் போனால், வீட்டுக்கு வர்றதுக்கு ரெண்டு மாசம்கூட ஆகும். இப்போ, அப்பா அப்படி ஏதோ அவுட்டோர் ஷூட் போன மாதிரி தான் நினைச்சுட்டு இருக்கேன்!''- புகைப்படத்தில் சிரிக்கும் முரளியைப் பார்த்தபடியே பேசுகிறார் அதர்வா. குடும்பம், தொழில் என இரு தளத்திலும் அதிகரித்திருக்கும் பொறுப்பு முகத்தில் கூடுதல் பக்குவத்தை நிரப்பி இருக்கிறது.  

அவுட்டோர் ஷுட்டிங்கில் அப்பா!

''உங்க அக்கா காவ்யாவுக்குக் கல்யாணம் நிச்சயம் ஆகி இருந்ததே... எப்போ கல்யாணம்?''

''அப்பாவுக்கு ஏதோ முன்னாடியே தெரிஞ்சிருக்குபோல. அக்கா கல்யாணம் சம்பந்தமா எல்லா வேலைகளையும் தெளிவா முடிச்சுவெச்சுட்டார். அப்பா இறந்த ஒரு வருஷத்துக்கு வீட்ல விசேஷம் வைக்க வேண்டாம்னு நிறையப் பேர் சொன்னாங்க. ஆனா, அக்கா கல்யாணத்தைக் கோலாகலமா நடத்தணும்னு அப்பா பேசிட்டே இருந்தார். அவர் ஆசைப்படி, அவர் குறிச்சிருந்த ஏப்ரல் 14-ம் தேதியே அக்கா கல்யாணத்தை நடத்தப்போறோம்!''

அவுட்டோர் ஷுட்டிங்கில் அப்பா!

'' 'பாணா காத்தாடி’யில் நல்ல பேர் கிடைச்சது. எப்படி அந்தப் பேரைத் தக்கவெச்சுக்கப் போறீங்க?''

''ஒரு ஆசையில் நடிகன் ஆகிட்டேன். மக்கள் ஏத்துப்பாங்களான்னு சந்தேகமா இருந்தது. சொந்தப் பையன் மாதிரி அந்தஸ்து கொடுத்து ஏத்துக்கிட்டாங்க. இனிதான், முழுமையான நடிகன் ஆகணும். டான்ஸ் கிளாஸ், நடிப்பு வகுப்புகள் போயிட்டு இருக்கேன். அடுத்து, கௌதம் மேனன் தயாரிப்பில், 'முப்பொழுதும் உன் கற்பனை’னு ஒரு படத்தில் நடிக்கப்போறேன். படத்தோட டைரக்டர் கணேஷ்கிட்ட அப்பா முன்னாடியே கதையின் 'ஒன் லைன்’ கேட்டு உற்சாகமாகி, 'முழுக் கதையும் ரெடி பண்ணுங்க. நிச்சயம் பண்ணலாம்’னு சொல்லிவெச்சிருந் தார். ஆனா, கடைசி வரை அவர் அந்தக் கதையைக் கேட்கவே இல்லை!''- குரல் கம்முகிறது அதர்வாவுக்கு!

படம்: பொன். காசிராஜன்