என் விகடன் - கோவை
என் விகடன் - மதுரை
என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - திருச்சி
Published:Updated:

காட்டுக்குள் புலி... கல்யாண கிலி!

த்ரிஷா ஆச்சர்யம்நா.கதிர்வேலன்

##~##
ரு ஃபேஷன் ஷோவில் ஜெயித்தபோது, பார்த்த த்ரிஷா இல்லை இந்தப் பெண். 'வாழ்க்கை வாழ்வதற்கே’ பக்குவம் நிரம்பி வழிகிறது உடல் மொழியிலும் இதழ் மொழியிலும்!

'' 'த்ரிஷாவுக்குக் கல்யாணம் முடிஞ்சிருச்சு. கன்ஃபர்ம். ஆந்திரா பையன்’னு கோடம்பாக்கத்தில் வதந்தி பலமா இருக்கே?''

''காதல் கிசுகிசுக்கள் தாண்டி, இப்போ கல்யாண கலாட்டாவா? சினிமாவில் புரமோஷன் கிடைக்குதோ இல்லையோ, வதந்திகளில் அது மிஸ் ஆகிறதே இல்லை. என் கேரியரை ஸ்பாயில் பண்ண ணும்னு யாருக்கு இவ்வளவு ஆசைன்னு எனக்குப் புரியலை. எனக்கு வெளிப்படையா யாரும் எதிரி கிடையாது. மூணு மாசத்துக்கு ஒரு தடவை இப்படிப் புதுசு புதுசா ஏதாச்சும் வதந்தி கிளம்பிடுது. கல்யாணம் பண்ணிக்கணும்னு முடிவு பண்ணிட்டா, எல்லாருக்கும் சொல்லிட்டுத்தான் செய்வேன். நான் வெளிப்படையான பெண். என்னோட எந்த முடிவுக்கும் என் குடும்ப ஆதரவும் இருக்கும். அடுத்தடுத்து தமிழ், தெலுங்குனு படங்களுக்கு கால்ஷீட் கொடுத்துட்டே இருக்கேன். இப்போ கல்யாணம் பத்தி யோசிக்க நேரம் இல்லை!''

காட்டுக்குள் புலி... கல்யாண கிலி!

''சாகச விரும்பி த்ரிஷா, சமீபத்தில் என்ன சாகசம் பண்ணினாங்க?''

''ஜெய்ப்பூர் ரந்தம்பூர் புலிகள் சரணாலயத்துக்கு ஒரு ட்ரிப் அடிச்சுட்டு வந்தேன். எப்பவும் ஃபாரின் ட்ரிப்தான் போவோம். இந்தத் தடவை இந்தியாவிலேயே எங்காவது சுத்திப் பார்க்கலாம்னு தோணுச்சு. செல்போன், லேப்டாப், பேப்பர், டி.வி, சினிமான்னு எல்லாத்துக்கும் லீவ் விட்டுட்டு, ஒரு வாரம் காட்டுக்குள்ளேயே இருந்தோம். உள்ளே போயிட்டு ரெண்டு, மூணு நாள் கழிச்சுத்தான் புலிகளைப் பார்க்க முடிந்தது. ரெண்டு அடி எடுத்துவெச்சா... தொட்டுடலாம்கிற தூரத்துல புலிகள். வாவ்... சான்ஸே இல்லை. அந்த ராத்திரியில் நெருப்புத் துளி மாதிரி புலிகளோட கண்ணு மினுமினுங்குது. கம்பீரமான அழகு!

நாங்க தங்கியிருந்த ரூம் ஜன்னலில் வந்து மயில்கள் உள்ளே எட்டிப் பார்க்கும். ஏதேதோ பறவைகள் தலையை நீட்டி நீட்டி ஆட்டிட்டு எங்களை முறைச்சுப் பார்க்கும். என்னோட என் ஃப்ரெண்ட்ஸ் சபீனா, ஹேமா வந்திருந்தாங்க. சேட்டையும் அரட்டையுமா கிட்டத்தட்ட த்ரீ இடியட்ஸ் மாதிரி காட்டுக்குள்ளே திரிஞ்சுட்டு இருந்தோம். இனிமே, சம்மர் ஹாலிடேஸ்களை இந்தியாவில்தான் கொண்டாடணும்னு முடிவு பண்ணி இருக்கேன். நான் இதுவரை போன வெளிநாடுகளைவிட ரந்தம்பூர்தான் பெஸ்ட் பிக்னிக் ஸ்பாட்!''  

காட்டுக்குள் புலி... கல்யாண கிலி!

''இந்தி 'விண்ணைத்தாண்டி வருவாயா’வில் நீங்க நடிப்பதாகச் செய்தி வந்தது. ஆனா, இப்ப வேற யாரோ நடிக்கிறாங்க. இந்தியில் வேறு எந்தப் படத்திலும் நடிக்கிற மாதிரி தெரியலையே?''  

காட்டுக்குள் புலி... கல்யாண கிலி!

''இந்தி 'விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்துக்கு நான் 25 நாள் கால்ஷீட் கொடுத்திருந்தேன். ஆனா, கௌதம் அந்த டேட்ஸை யூஸ் பண்ணிக்கலை. அதனால், என்னால் அந்தப் படத்தில் நடிக்க முடியலை. ஆனா, பிரச்னை எதுவும் இல்லை. இப்பவும் எங்க ஃப்ரெண்ட்ஷிப் அப்படியேதான் இருக்கு. இந்தியில் இதுவரை வேறு எந்தப் படத்திலும் கமிட் ஆகலை. ஒரு பெரிய பேனரோடு பேசிட்டு இருக்கேன். சீக்கிரமே நியூஸ் சொல்றேன்!''

''தேர்தல் சமயம்... எந்தக் கட்சிக்கு உங்க ஓட்டு?''

''ஆங்... அது சீக்ரெட்! ஆனா, நிச்சயம் நான் இந்தத் தேர்தலில் ஓட்டுப் போடுவேன். எப்பவும் ஜனநாயகக் கடமையைச் செய்யத் தவற மாட்டாள் இந்த த்ரிஷா... த்ரிஷா... த்ரிஷா. எக்கோ எஃபெக்ட் கிடைக்குதா?''