சினிமா விமர்சனம்

நட்பின், காதலின் வாசல்புரத்தையும் துரோகத்தின் கொல்லைப்புரத்தையும், அழகும் திகிலுமாய்த் திறக்கும் படம்!

ஜெய், சசிக்குமார்(அறிமுக இயக்குநர்), கஞ்சா கருப்பு மூவரும் வம்புக்கு கொம்பு சீவித் திரியும் மைனர்கள். வாழ்ந்து கெட்ட அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த சமுத்திரக்கனிக்கு விசுவாச அல்லுசில்லுகளாய் இருக்கிறார்கள் மூவரும். கட்சிப் பதவி கைமாறிப் போக, அரசியல் எதிரியைப் போட்டுத்தள்ள இவர்களை இழுக்கிறார் கனி. சராசரி இளைஞர்களின் வாழ்க்கை சடாரென வன்முறையின் கொடூர பாதையில் வளைய, அடுத்தடுத்து நடக்கின்றன பகீர் துரோகங்கள்!

பெல்ஸில் தொடங்கி பழைய பத்து ரூபாய் நோட்டு, சில்வர் பெயின்ட் பஸ் வரை 80களின் உலகத்தைப் பார்த்துப் பார்த்துப் பதிவு பண்ணியிருக்கிற கலை வித்தைக்கு முதல் வணக்கம். ஐந்து நண்பர்களின் அலப்பறையும், இசையாய் இழைந்து கடக்கும் ஜெய் ஸ்வாதி காதலுமாய் முதல் பாதி பிரமாதக் கவிதை. ஒட்டுமொத்தக் குழுவின் உழைப்பு... பிரமிப்பு!

லாட்ஜ் அறையில் சமுத்திரக்கனி மூன்று பேரையும் முதல் கொலைக்கு ப்ரைன்வாஷ் செய்கிற காட்சியில், அந்த கேரக்டருக்கான அத்தனை வில்லத்தனத்தையும் கொண்டுவந்ததில் அடடா! எத்தனை நுணுக்கம். ரகளையும் ரம்மியமுமாகப் போகிற கதை பின்பாதியில் திடுதிடுவென ரத்தமயமாவது அதிரவைக்கிற ட்ரீட்மென்ட். க்ளைமாக்ஸ் காட்சி, தமிழ் சினிமா இதுவரை பார்க்காத பதறவைக்கிற பயங்கரம்.

பின்பாதியில் அடுத்தடுத்து அரங்கேறும் கொலைகளில் ஐயோ.... எவ்வளவு ரத்தம். ஒரு மாவட்டச் செயலாளர் வீட்டில் கட்சிக்காரர்களே இல்லாமல் அம்போ என நிற்பதும், அதில் ஜெய், சசி குரூப் புகுந்து கலாட்டா செய்வதும் இயல்பாக இல்லை. கோலி விளையாடுவது மாதிரி கொலைகள் செய்துவிட்டு சசி ஜெய் அலைவதில் நம்பகத்தன்மை இல்லை.

வறட்டுத் தலைமுடி, தாடி, சாய்ந்த நடை என வரும் ஜெய் 'அழகர்' கேரக்டருக்கு அழகு. காதலில் ஈயென இளிப்பதும் 'எனக்குச் சாவு பயம்னா என்னன்னு காட்டிட்டாய்ங்கடா..!' என்று அலறி அரற்றும்போதும் அப்ளாஸ் அள்ளுகிறார். குரல்தான் அப்படியே சிம்புவை ஞாபகப்படுத்துகிறது. வெடவெட தேகமும் கிடுகிடு கோபமுமாகத் திரியும் பரமனாக, சசிக்குமார், இயக்குநர் கம் நடிகர் ஏரியாவில் பலமாக பட்டா போடுகிறார். கருப்புவுக்கு, இது முக்கியமான படம். பார்வைகளாலேயே பரவசமூட்டும் ஹீரோயின் ஸ்வேதாவும் நல்வரவு. டும்கானாக வரும் மாரி, சவுண்ட் சர்வீஸ் சித்தன், கோவில் தர்மகர்த்தா, சமுத்திரக்கனியின் அண்ணன், தம்பி... என நிறையப் பாத்திரங்கள் மனதில் பச்சக்கெனத் துண்டு போடுகிறார் கள்.

படம் முழுக்கக் கடுமையாக உழைத்திருக்கிறது கதிரின் கேமரா. காலத்தையும் கதையையும் இயல்பு மாறாமல் கொண்டுவந்து கொட்டும் ஒளி விளையாட்டு. ஜேம்ஸ் வசந்தன் அறிமுக இசையில் 'கண்கள் இரண்டால்..' பாடல் மனதை நனைக்கும் மென் மெலடிச் சாரல். ரேம்போன் கலை இயக்கத்துக்கு ஒரு ஸ்பெஷல் கைகுலுக்கல்.

ரத்த வாசனை அதிகம் என்பது ஒரு மைனஸ். இருப்பினும், இழைத்து இழைத்து சுப்ரமணியபுரம் கட்டியிருக்கிற அறிமுக இயக்குநர் சசிக்குமார், தரமான இயக்குநர்கள் வரிசையில் தன் முதல் முத்திரையைக் குத்தி இருக்கிறார்!

-விகடன் விமர்சனக் குழு