சினிமா
Published:Updated:

''என் அளவுக்கு யாரும் நடிக்க முடியாது!''

''என் அளவுக்கு யாரும் நடிக்க முடியாது!''


''என் அளவுக்கு யாரும் நடிக்க முடியாது!''
''என் அளவுக்கு யாரும் நடிக்க முடியாது!''
''என் அளவுக்கு யாரும் நடிக்க முடியாது!''
 
''என் அளவுக்கு யாரும் நடிக்க முடியாது!''
''என் அளவுக்கு யாரும் நடிக்க முடியாது!''

'இதுதாங்க எங்க புது ப்ளாட். ஐஸ்வர்யா எவ்வளவுதான் வீட்டை அழகுபடுத்திவெச்சாலும், யாத்ரா சார் அதைப் பிரிச்சுக் கலைச்சு விளையாடுவார். குழந்தைகள் வீட்டைக் கலைச்சுப் போட்டுச் சிரிக்கிறது இருக்கு பாருங்க, அது இன்னும் அழகு!'' ரசனையாகப் பேசுகிறார் தனுஷ்.

''என் அளவுக்கு யாரும் நடிக்க முடியாது!''

'''திருவிளையாடல்', 'பொல்லாதவன்' இரண்டு வெற்றிகளுமே உங்களை மேலும் உற்சாகமாக்கியிருப்பது தெரியுது. பழைய வெற்றியை மீண்டும் பிடித்தது பற்றிச் சொல்லுங்க..?''

'''பொல்லாதவன்' ஸ்க்ரிப்ட்ல நான் வெச்சிருந்த நம்பிக்கை அவ்வளவு பெரிசு. 'பொல்லாதவன்' முழுக்க முழுக்க டைரக் டரின் மூளையில் பிறந்து வளர்ந்த விஷயம். வெற்றிமாறனை என் கையைவிட்டுப் போய்விடாமல் கட்டிப்போட்டு வெச்சிருந்தேன்னு சொல்றதுதான் பொருத்தம். ஒரு கமர்ஷியல் கதையைக்கூட வித்தியாசமான ட்ரீட்மென்ட்டில் அழகாக்க முடியும்னு வெற்றிமாறன் நிரூபிச்சார். 'திருவிளையாடல்' படத்தைப் பொறுத்தவரைக்கும் நிஜத்தில் நான் எப்படியோ, அப்படியே படத்திலும் இருந்தேன். எந்நேரமும் என் கேலியும் கிண்டலும் சிரிப்பும் வீடு முழுக்கப் பரவித் திரியும். அதையே இயல்பான காமெடியா மாற்றிக்கிட்டேன். ரஜினி சாரை காமெடி இன்னும் ஜோராக்கிக்காட்டும். அவர் அளவுக்கு இல்லைன்னாலும், ஜனங்க என்னை ரசித்து ஏத்துக்கிட்டாங்க. 'திருவிளையாடல்' முடிஞ்ச கையோடு, 'பொல்லாதவன்' செய்ய முடிஞ்சதுதான் என்னை வித்தியாசமானவன்னு காட்டிக்க வெச்சது.''

'''யாரடி நீ மோகினி' எப்படி வந்திருக்கு?''

''என் அளவுக்கு யாரும் நடிக்க முடியாது!''

''அண்ணன் செல்வராக வனின் கதை. குடும்பமே உட்கார்ந்து ரசிச்சுப் பார்க்கிற மாதிரி, சங்கீதமும் சிரிப்பும் பாசமுமா நெகிழ்ச்சியான கதை. நயன்தாராவை பொதுவா, கவர்ச்சியா நாலு பாட்டு, இரண்டு ஸீனில் தலையைக் காட்டிட்டுப் போனதைத்தானே பார்த்திருக்கீங்க? இதில், நானே பொறாமைப்பட்டேன். அந்த அளவுக்கு அசத்தியிருக்காங்க. கவிதையான வீடு, கலகலப்பான குடும்பம், களேபரமான உறவுகள்னு ஜிலுஜிலுன்னு காட்டியிருக்கோம். அண்ணாவோட அசிஸ்டென்ட் ஜவஹர் டைரக்ட் பண்றார். தனுஷ் நயன்தாரா ஜோடி கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆகியிருப்பதா படம் பார்த்த வங்க சொன்னாங்க. நானும் பார்த்தேன்; அதை வழிமொழிகிறேன்!''

''பையன் யாத்ரா எப்படி இருக்கார்?''

''சார் பிறந்து ஒரு வருஷம், இரண்டு மாதம் ஆச்சு! ஆனால், அவர் பண்ணுற சேட்டைகளைப் பார்த்தால் அவர் வயசைக் கூட்டிச் சொல்லத் தோணும். எந்தப் பொருளைப் பார்த்தாலும், தூக்கி எறிஞ்சுடறார். கட்டுப் படுத்த முடியாத சேட்டை. என் பால்ய காலங்களை நினைவுபடுத்துவதா அம்மா சொல்றாங்க.

நான் ஷ¨ட்டிங் போயிட்டா, என் போட்டோவைக் கட்டிப் பிடிச்சுக்கிட்டே இருக்காராம். ஆனா, யாத்ராவுக்கு ரொம்ப இஷ்டமானவர், அவங்க தாத்தா ரஜினிதான். அவருக்கு முன்னால் மட்டும் யாத்ரா சார் எப்படியோ அடங்கிப்போறார். பேரனைத் தூக்கி வெச்சிருக்கும்போது ரஜினி சாரின் முகம் அபாரமா ஒளிவிடுவதை நான் பார்த்திருக்கேன். தாத்தாவுக்குப் பிறகு, அவங்க அம்மாதான் அவனுக்கு இஷ்ட தெய்வம். யாத்ரா எப்படி வருவான், வரணும்னு எந்தத் திட்டமும் எனக்கு இல்லை. யாத்ரா மீது எனக்கு நம்பிக்கை உண்டு!''

''என் அளவுக்கு யாரும் நடிக்க முடியாது!''

''அண்ணி சோனியா அகர்வால் எப்படியிருக்காங்க?''

''அவங்கவங்க வேலையைப் பார்க்கிறதுக்கு ஏற்ற மாதிரி தனித்தனியே இருந்தாலும் வார, மாதக் கடைசியானால் எல்லோரும் கூடிடுவோம். அது, அவ்வளவு நல்ல தருணங்களாக அமைஞ்சுடும். நாங்க மொத்தமும் சேர்ந்து சிரிச்சா, மேற்கூரை தெறிக்கும். செல்வாவும் சோனியாவும் நல்ல ஜோடி... ஆத்மார்த்தமான ஜோடி!''

''என்னாச்சு 'ஆயிரத்தில் ஒருவன்'? செல்வா டைரக்ஷனில் நீங்க நடிக்கப் போறீங்கன்னு பார்த்தால், பார்த்திபன் நடிக்கிறாரே?''

''கிட்டத்தட்ட இரண்டு மாதம் இன்டர்நெட் பார்த்து, என்னையே மாத்திக்கிட்ட ரோல் அது. என்னோட கனவுகளில் ஒண்ணா 'ஆயிரத்தில் ஒருவன்' இருந்தது. அவ்வளவு பிரமா தமான ரோல். அதைப் பத்தி இன்னும் விவரமா உங்ககிட்டே பேசினா, அண்ணன் என் தோலை உரிச்சுடு வார்.

அந்த ரோலில் நடிக்கிற பார்த்திபன் சாருக்கு என் வாழ்த்துக்கள். ஆனா, யார் நடிச்சாலும் என் அளவுக்கு யாரும் அதில் நடிக்க முடியாது. இப்படிச் சொல்றதை என்னோட முட்டாள்தனம், அதிகப்பிரசங்கித்தனம்னு எப்படிச் சொன்னாலும் சரி, நான் அப்படித்தான் சொல்வேன். காரணம், என்னை எப்படி வேண்டுமானாலும் தட்டிக் கொட்டி தனக்குத் தேவையான மாதிரி உருவாக்கிவிடுவார் செல்வா. சொல்ல முடியாத காரணங்களால் 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் என்னால் நடிக்க முடியலை!''

''என் அளவுக்கு யாரும் நடிக்க முடியாது!''

''விஜய், அஜீத் இருவரும்கூட ஒண்ணா சேர்ந்து விருந்து சாப்பிடுகிற அளவுக்கு வந்துட்டாங்க. உங்களுக்கும் சிம்புவுக்கும் எப்படி இருக்கு உறவு?''

''அதென்ன, எல்லோருமே நானும் சிம்புவும் மறைவா கத்தி வெச்சுக்கிட்டு திரியுறோம்னு நினைக்கிறீங்க? அதெல்லாம் இல்லை. ரெண்டு பேரும் இப்ப நல்ல ப்ரெண்ட்ஸ்.

புது வருஷத்துக்கு வாழ்த்துச் சொன்னார். 'யாரடி நீ மோகினி' ஸ்டில்ஸ் பிரமாதம்னு பாராட்டினார். இரண்டு பேரும் சேர்ந்து படம் செய்யணும்னு சொன்னார். சமீபத்தில் ஓட்டலில் பார்த்து அரட்டைஅடிச்சோம். சேர்ந்து நடிச்சா, அது ஆயிரத்தில் ஒரு கதையாக இருக்கணும். அப்படி ஒரு கதை வரட்டும். பண்ணிடலாம்!''

 
''என் அளவுக்கு யாரும் நடிக்க முடியாது!''
-நா.கதிர்வேலன்
படங்கள்: கே.ராஜசேகரன்
''என் அளவுக்கு யாரும் நடிக்க முடியாது!''