Published:Updated:

''சமத்துப் பிள்ளையா மாறிட்டேன்!''

நா.கதிர்வேலன்

''சமத்துப் பிள்ளையா மாறிட்டேன்!''

நா.கதிர்வேலன்

Published:Updated:
 ##~##
''வெ
ங்கட்பிரபு, சசிகுமாருக்கு அடுத்து பெரிய வாய்ப்பு கொடுத்திருக்கார் ஏ.ஆர்.முருகதாஸ். 'என்னோட தயாரிப்பில் என் அசோசியேட் சரவணன் டைரக்ட் பண்றார். உங்களுக்கு ஏத்த கதை. கேட்க விருப்பமா?’ன்னு தன்மையா போன் பண்ணினார். உடனே, நேர்ல பார்க்கக் கிளம்பிட்டேன். படத்தோட பெயர்... 'எங்கேயும் எப்போதும்’. சினிமா கேரியரில் நான் விட்ட இடத்தைப் பிடிக்க இந்தப் படம் கை கொடுக்கும்!'' - நம்பிக்கையாகப் பேசுகிறார் ஜெய்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''சமத்துப் பிள்ளையா மாறிட்டேன்!''

''எப்படி இருக்கும் 'எங்கேயும் எப்போதும்’?''

''அது ஒரு அருமையான காதல் கதை. காதலிப்பதும் காதலிக்கப்படுவதும்  நடந்துக்கிட்டே இருக்கு. அப்படி எங்கேயும், எப்போதும் நடக்கிற அழகான காதல்தான் இந்தப் படம். 'நீங்களும் சரவணனும் க்ளோஸா இருக்குறது நல்ல விஷயம். அப்படியே நானும் சூர்யாவும் சேர்ந்து இருக்கிற மாதிரி இருக்குது’ன்னு முருகதாஸ் சொன்னார். இன்னொரு நாள் 'உங்க மேலே குறை சொல்ல முடியாது. நீங்க பண்ணின சில படங்கள் உங்களை வேறு மாதிரி மாத்திருச்சு’ன்னு சொன்னார். என்னோட கேரக்டரையும் என்னோட கேரியரையும் மொத்தமா இந்தப் படம் மாத்தி அமைக்கும். என்னோட எல்லாத் தப்புகளையும் இதில் சரி பண்ணிருவேன்!''

''என்னென்ன தப்பு பண்ணுனீங்க?''

'' 'சுப்ரமணியபுரம்’ இப்படி ஹிட் ஆகும்னு நான் எதிர்பார்க்கலை. அந்தப் படம் என்னைப் பெரிய உயரத்துக்குத் தூக்கிட்டுப் போயிருச்சு. அந்த உயரத்தில் இருந்து அடுத்த ஸ்டெப் போறதுக்கு எனக்குத் தெரியலை. அதற்கடுத்து வந்த படங்கள் எனக்கு உதவியா அமையலை. யாரையும் குறை சொல்ல விரும்பலை. 'பள்ளத்துல விழுந்துட்டோம். இனிமே, இன்ச் பை இன்ச்தான் முன்னேற முடியும்’னு கவலையில் இருந்தேன். முருகதாஸ் படம் தேடி வந்தது பெரிய ஆறுதல். இனிமேல் எல்லாமே சரியா இருக்கும். கொஞ்சம் யோசிச்சு நல்ல படங்களைத் தேர்ந்தெடுப்பேன். இந்த அடியும் நல்லது தான். யோசிக்கவைக்குதே?''

''நீங்களும் சிம்புவும்தான் இன்னும் கல்யாணத்துக்கு பாக்கி... என்ன திட்டம்?''

''அஜீத், விஜய், விக்ரம், சூர்யாவுக்குப் பிறகு இப்போ சிம்பு, தனுஷ் இருந்தாங்க. ரொம்ப நாள் கழிச்சு ஜீவா அந்த வரிசையில் ஒரு இடம் பிடிச்சிட்டார். அதே மாதிரி நானும் ஒரு இடம் பிடிக்கணும். அப்புறம்தான் காதல், கல்யாணம் எல்லாமே. ஒரு நல்ல நிலைமையை அடைகிற வரைக்கும் சினிமா... சினிமா... சினிமாதான்!''

''சமத்துப் பிள்ளையா மாறிட்டேன்!''

''உங்க காட்ஃபாதர் அஜீத்தை சந்திச்சீங்களா?''

''மாசத்துக்கு ஒரு தடவையாவது வீட்டுக் குக் கூப்பிட்டு நல்லதா நாலு விஷயம் சொல்லுவார். 'தோல்வி வந்தா சோர்ந்து போயிடாதீங்க..., எப்பவும் எச்சரிக்கையா இருக்கணும்’னு எனக்கு நிறைய அறிவுரை கள் சொல்லி இருக்கார். அவர்கிட்ட பேசிட்டு இருந்தா, பத்து பாட்டில் 'ரெட் புல்’ குடிச்ச மாதிரி எனர்ஜியா இருக்கும். முருகதாஸ் படம் கிடைக்கலைன்னா, 'மங்காத்தா’வில் அசிஸ்டென்ட் டைரக்டரா வேலை பார்க்கப் போயிருப்பேன். அஜீத் சார்கிட்ட பழகுறதும், பேசுறதும் நல்ல அனுபவம். 'என்னை ஏன் உங்களுக்குப் பிடிச்சிருக்கு?’னு கேட்டேன். 'நான் அமராவதியில் நடிச்சப்போ எப்படி

''சமத்துப் பிள்ளையா மாறிட்டேன்!''

இருந்தேனோ, நீ இப்போ அப்படி இருக்குறே’னு சிரிச்சார்!''

''இப்போலாம் உங்களை லேட் நைட் பார்ட்டியில் பார்க்க முடியலையே?''

''எங்க கேங் 'மங்காத்தா’வில் பிஸி ஆகிட்டாங்க. நானும் முருகதாஸ் சார் படத்துக்காக திருச்சி பக்கம் செட்டில் ஆகிட்டேன். இப்போ 'நான் உண்டு, என் வேலை உண்டு’ன்னு அமைதியா இருக்கேன். 'பார்ட்டி ஆளாச்சே... சரியா ஷூட்டிங் வருவாரா?’ன்னு இன்டஸ்ட்ரியில் நிறையப் பேர் கேட்டு இருக்காங்க. அதனால, சமத்துப் பிள்ளையா மாறிட்டேன். இனிமே என்னை பார்ட்டிகளில் பார்க்க மாட் டீங்க. நல்ல படங்களில் மட்டும்தான் பார்ப்பீங்க... போதுமா?''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism