Published:Updated:

ஆலைக்காரி... பஞ்சாலைக்காரி!

நா.கதிர்வேலன்

ஆலைக்காரி... பஞ்சாலைக்காரி!

நா.கதிர்வேலன்

Published:Updated:
 ##~##
'ப
ஞ்சாலைத் தொழிலாளர்களின் வாழ்க்கையைச் சொல்கிற படம், 'கிருஷ்ணவேணி பஞ்சாலை’. இதுவரை பஞ்சாலைகளின் பின்னணியில் கதை சொல்லப்பட்டது இல்லை. என் அப்பா, ஒரு மில் தொழிலாளி. அந்தக் காலத்தில், மில் தொழிலாளிகளுக்கு இருந்த மதிப்பு அதிகம்.  அப்போ அரசு ஊழியர்களைவிட, மில் தொழிலாளிகளுக்குத்தான் முன்னுரிமை கொடுத்துப் பெண் கொடுப்பாங்க. தாராளமயமாக்கலும் அரசியலும் சேர்ந்து அந்தப் பொற்காலத்தைச் சிதைத்துவிட்டது. ஓர் அழகான காதல் கதையைப் பஞ்சாலையின் பின்னணியில் சொல்லி இருக்கேன். நான் நினைச்ச மாதிரி படம் வந்திருக்கு. ரொம்பச் சந்தோஷம்!''- மெல்லிய குரலில் நிதானமாகப் பேசுகிறார் இயக்குநர் தனபால் பத்மநாபன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆலைக்காரி... பஞ்சாலைக்காரி!

''இவ்வளவு மென்மையா கதை சொல்ற அளவுக்கு, இப்போ தமிழ் சினிமா இருக்குதா?''

''பெரிய கமர்ஷியல் படங்கள் சரி இல்லைன்னா, ஜனங்க புறக்கணிக்கிறார்கள்.  கிட்டத்தட்ட எல்லாக் கதைகளையும் சொல்லி யாச்சு. இனிமே, புதுப் பின்னணிதான் கவனிக்கப்படும். வேலை பார்க்கும் ஸ்டைல், ஒழுங்கு, பல தொழிலாளிகள் ஒன்று கூடுகிற கேன்டீன்னு பஞ்சாலை ஒரு சுவாரஸ்யமான உலகம். அப்படி ஒரு இடத்தில் உருவாகிற காதலின் கதை இது. 1957-1987 வரை நடந்த ஒரு வாழ்க்கையை இன்றைய இளைஞர்கள் யாரும் பார்த்திருக்க வாய்ப்பு இல்லை. அதை தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்கிறேன்!''

''புதுப் பின்னணியில் உருவாகிற கதைக்கு புது நடிகர்கள் உதவுவார்களா?''

''புதுமுகங்களின் படையெடுப்பே இதில் நடந்திருக்கிறது. புதிய களத்தில் சொல்கிற கதைக்கு புதுமுகங்கள்தான் சரியாக இருப் பார்கள். புதுமுகங்களுக்காக, சண்முகராஜனை Casting Director-ராக நியமித்து, நடிகர் களுக்குப் பயிற்சி கொடுத்தோம். இதனால் ஷூட்டிங் எளிதாக முடிந்துவிட்டது. ஹீரோ வாக ஹேமச்சந்திரனும், ஹீரோயினாக நந்தனாவும் நடித்திருக்கிறார்கள். எழுத்தாளர் அஜயன்பாலா ஆலையின் யூனியன் தலைவராக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துஇருக்கிறார். யதார்த்த சினிமாதான். ஆனால், அழகான... சுவாரஸ்யமான கதைக் களம்!''

ஆலைக்காரி... பஞ்சாலைக்காரி!

''இந்த கமர்ஷியல் சூழலில் மாறுபட்ட படத்தை எடுக்கிற துணிச்சல் எப்படி வந்தது?''

''இப்போது இருக்கிற தமிழ் சினிமாவின் சூழ்நிலைதான் காரணம். புது முயற்சிகளுக்கு மக்கள் கை தட்டி ஆதரவு கொடுக்கிறார்கள். சரியாக இல்லை என்றால், பெரிய ஸ்டார்களை நிராகரிக்கவும் செய்கிறார்கள். கவிப்பேரரசு வைரமுத்து அதிக கவனத்தோடு பாடல்களை எழுதியிருக்கிறார். 'ஆலைக்காரி பஞ்சாலைக்காரி... கல்லில் உள்ள சிலைகள் எல்லாம் உங்க சாமி... நூல் மில்லில் உள்ள எந்திரம் எல்லாம் எங்க சாமி’ன்னு வரிகள் எல்லாமே வசீகரிக்கும்.

தென் மேற்குப் பருவக் காற்று’ இசையமைப்பாளர் ரஹ்நந்தன் எங்கள் படத்தில் அறிமுகம் ஆக வேண்டி யவர். கொஞ்சம் முந்திவிட்டார். பாலுமகேந்திராவின் உதவியாளர் சுரேஷ் பார்கவ் ஒளிப்பதிவு செய்கிறார். எல்லாமே நல்லபடியா கூடி வருது. தமிழ் சினிமாவின் புதிய முயற்சிக்கு நல்ல மரியாதை கிடைக்கும்னு நம்பிக்கையோடு பஞ்சாலையைத் திறக்கப்போறோம்!''- நம்பிக்கையாகக் கை கொடுக்கிறார் தனபால் பத்மநாபன்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism