Published:Updated:

''நான் அமீரை முழுசா நம்புறேன்!''

இர.ப்ரீத்திபடம் : கே.கார்த்திகேயன்

''நான் அமீரை முழுசா நம்புறேன்!''

இர.ப்ரீத்திபடம் : கே.கார்த்திகேயன்

Published:Updated:
##~##
ன்னித் தீவு பொண்ணு நீத்து சந்திரா, ஜிம்மில் அதிர அதிர ட்ரெட்மில்லில் ஓடிக்கொண்டு இருந்தார். ''ஒரு ஜூஸ் குடிச்சுக்கிட்டே பேசலாமா?''- வியர்வையை ஒற்றியபடி வந்து அமர்கிறார் நீத்து.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'' 'ஆதி பகவன்’ படத்தில் உங்க கேரக்டர் என்ன?''

''நான் அமீரை முழுசா நம்புறேன்!''

''அது ரகசியம். நான் அமீரை முழுசா நம்புறேன். அவர்கிட்ட என்னை முழுசா ஒப்படைச்சிட்டேன். அவர் கதைக்குத் தேவையான மாதிரி என்னைச் செதுக்கிட்டு இருக்கார். இதுக்கு மேல ஒரு வார்த்தைகூடப் பேச மாட்டேன். படம் வந்ததும் பார்த்துட்டுச் சொல்லுங்க!''

''அமீரோட காதல்னு கிசுகிசு கிளம்ப ஆரம்பிச்சிருச்சே... என்ன ஆச்சு?''

''நான் இதுக்கு முன்னாடி நடிச்ச மாதவன், விஷால் ரெண்டு பேரும் பக்கா புரொஃபஷனல்ஸ். அவங்ககிட்ட என்னால ஃப்ரெண்ட்லியாப் பழக முடியாது. ஆனா, அமீர் அப்படி இல்லை. அவர் என் நண்பர். என் நலம் விரும்பி. நான் ரொம்ப ஃப்ரெண்ட்லி. பத்து நிமிஷம் பேசினாலே, பச்சக்னு ஒட்டிப்பேன். அது மத்தவங்க கண்ணுக்குத் தப்பாத் தெரிஞ்சா, அதுக்கு நான் எப்படிப் பொறுப்பாக முடியும்? எனக்குத் தினமும் மதிய சாப்பாடு கொடுத்துவிடுறது அமீர் சாரோட மனைவிதான். அமீர் அளவுக்கு அவங்களும் எனக்கு நல்ல ஃப்ரெண்ட். விமர்சனத்துக்குப் பயந்தா, சந்தோஷமா வாழ முடியாது!''

''லெஸ்பியன் போட்டோ ஷூட்டில் தைரியமா போஸ் கொடுத்திருந்தீங்க?''

''நம்ம மக்கள் அஜந்தா, எல்லோரா ஓவியங்களைப் பார்க்குறாங்க. ஆனா, அதே சமயம் ஒரு நடிகை தன்னுடைய தொழிலை செஞ்சா மட்டும், ஏன் ஏத்துக்க மாட்டேங்குறாங்கன்னு தெரியலை. போட்டோகிராபர் சொன்ன மாதிரி போஸ் கொடுத் தேன். இதில் என்ன தப்புன்னு எனக்குப் புரியலை!''

''நல்லாத் தமிழ் பேசுறீங்களே?''

''நன்றி! (சிரிக்கிறார்). தினமும் சுப்ரமணியன்னு தமிழ் வாத்தியார்கிட்ட டியூஷன் போறேன். எனக்கு இந்தி, இங்கிலீஷ், போஜ்புரி, பஞ்சாபி, குஜராத்தினு நாலஞ்சு மொழிகள் தெரியும். எங்கே போறேனோ, அந்த மொழியை உடனே கத்துக்க ஆரம்பிச்சிருவேன். தமிழில் நடிக்க வந்த பின்னாடி, தமிழ் கத்துக் கலைன்னா எப்படி? அடுத்த இன்டர்வியூவில் உங்களுக்கு ஆனந்த விகடனை வாசிச்சுக் காண்பிக்கிறேன்!''

''நான் அமீரை முழுசா நம்புறேன்!''

''உங்க குடும்பம் பத்திச் சொல்லுங்க?''

''நான் அமீரை முழுசா நம்புறேன்!''

''நாங்க பீகார் பிசினஸ் குடும்பம். அப்பா, கேன்சரால் பாதிக்கப்பட்டு போன வருஷம்தான் இறந்தார். அந்த சோகத்தில் இருந்து அம்மாவை வெளியே கொண்டுவர ரொம்பக் கஷ்டப்பட்டேன். இப்போ, என்கூடவே மும்பையில் தங்கவெச்சிருக்கேன். என் அண்ணா ரொம்பக் கஷ்டப்பட்டு, இப்போதான் ஒரு படம் டைரக்ட் பண்ணியிருக்கான். படம் பேர் 'தேஸ்வா’. வர்ற மே மாதம் ரிலீஸ். படத்தோட புரொடியூஸர் உங்க எல்லாருக்கும் நல்லாத் தெரிஞ்ச ஒருத்தர்தான். அவர் ரொம்ப அழகா இருப்பார். அவர் பேர்... நீத்து சந்திரா!''

''நீத்துன்னா என்ன அர்த்தம்?''

'' 'எல்லா நாளும் புதிய நாள்’னு அர்த்தம்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism