என் விகடன் - திருச்சி
ஸ்பெஷல் -1
Published:Updated:

'பொண்ணு கண்ணு சூப்பர்!'

ரஜினியின் வாழ்த்துநா.கதிர்வேலன்

##~##
ரா
தாவின் மாடர்ன் ஆர்ட் போல இருக்கிறார் கார்த்திகா. இதழ்களைக் காட்டிலும், இமைகளுக்குள் சுழலும் கண்கள் பேசுவது அதிகம்! சின்ன உதட்டுச் சுழிப்பில், பல் தெரியும் சிரிப்பில், புருவ நெரிப்பில் கவனம் கலைத்துக்கொண்டே இருக்கிறார் கார்த்திகா.  

'' 'கோ’ ரிலீஸ் ஆகப்போகுது. அதில் உங்க பங்கு என்ன?''

''கே.வி.ஆனந்த் சார் என்னை முதல் முறை சந்திச்சப்போ, 'பரபரன்னு திரியுற ஒரு ஜர்னலிஸ்ட் கேரக்டர். பார்க்கும்போதே 'இவ எதுவும் பண்ணுவா!’னு ஆடியன்ஸ் நினைக்கணும்’னு சொன்னார். வழக்கமா தமிழ்ப் படங்களில் ஹீரோ பில்டப்தான் அதிகம் இருக்கும். ஆனா, இதில் எனக்குத் தான் பில்ட்-அப் ஜாஸ்தி. 'சொன்னதும் பளிச்னு புரிஞ்சுக்கிறாங்க’னு அப்பப்ப ஷூட்டிங் ஸ்பாட்ல கே.வி சார் என்னைப் பாராட்டும்போது எல்லாம், முறைச்சுப் பார்ப்பார் ஜீவா.

'பொண்ணு கண்ணு சூப்பர்!'

எனக்கு ஒரே டார்கெட்தான். நான் சினிமாவுக்கு வந்தது பணம் சேர்க்கணும்னு இல்லை. பெஸ்ட் பெர்ஃபார்மர்னு பேர் வாங்கணும். அதைச் சீக்கிரமே வாங்கணும். அவ்வளவுதான்!''

''ஜீவா என்ன சொன்னார்?''

''நிறைய ஹெல்ப் பண்ணினார். படத்துல அவர் போட்டோ ஜர்னலிஸ்ட். அதனால, எப்பவும் கேமராவும் கையுமாதான் இருப்பார். கேமராவில் விளையாட்டா ஸ்டில்ஸ் எடுத்துட்டு இருந்தவர், படம் முடியும்போது புரொஃபஷனல் போட்டோகிராபர் ஆகிட்டார். என்னை வித விதமா, அழகழகா போட்டோக்கள் எடுத்துக் கொடுத்தார். விகடன்ல போட்டோகிராபர் ஜாப் எதுவும் காலியா இருந்தா, ஜீவா நல்ல சாய்ஸ்!''

''தமிழில் கார்த்திக்கின் பையன் கௌதமுடன் மணிரத்னம் படத்தில் அறிமுகம் ஆகப்போறீங்கனு நியூஸ் வந்ததே?''

''ஆங்... நானும் கேள்விப்பட்டேன். ஆனா, அது உண்மை இல்லை. நான் கௌதமைப் பார்த்ததே இல்லை. அதனால என்ன... சான்ஸ் கிடைச்சா அவர்கூடவும் ஒரு படம் நடிச்சிரலாம். எனக்கு இவர், அவர்னு இல்லை. இப்போ இண்டஸ்ட்ரியில் மாஸா, க்ளாஸா யார் எல்லாம் இருக்காங்களோ, அவங்க எல்லோ ருடனும் நடிக்கணும்!''

'பொண்ணு கண்ணு சூப்பர்!'

''விட்டா... ரஜினி கூட நடிக்கணும்னு சொல்வீங்க போல?''

''ஏன், நான் நடிக்கக் கூடாதா? எய்ட்டீஸ் ஹீரோ - ஹீரோயின்கள் கெட் டு கெதரின்போது என் அம்மாகிட்ட ரஜினி அங்கிள், 'உன் பொண்ணு படத்தை பத்திரிகையில் பார்த்தேன். அவ கண்ணு சூப்பரா இருக்கு. கே.வி நல்லாப் படம் பண்ணுவார். உன் பொண்ணுக்கு நல்ல என்ட்ரி கிடைக்கும்’னு வாழ்த்தினாராம். அம்மா சொன்னதும் அவ்வளவு ஹேப்பியா இருந்தது. அடுத்த தடவை சென்னை வரும்போது எப்படியும் ரஜினி அங்கிளைச் சந்திக்கணும்!''