என் விகடன் - திருச்சி
ஸ்பெஷல் -1
Published:Updated:

''தமிழில் முதல் இன்னிங்ஸ் இது!''

ம.கா.செந்தில்குமார்

##~##

''சந்தோஷம், துக்கம் எதுவா இருந்தாலும் நான் முதலில் ஷேர் பண்ணிக்கொள்ளும் இரண்டு நபர்கள்... பி.சி.ஸ்ரீராம், ஜெயேந்திரா. 500-க்கும் மேல விளம்பரப் படங்கள் இயக்கியவர் ஜெயேந்திரா. 30 செகண்ட்ல விளம்பரங்களில் மேஜிக் பண்ணிட்டு இருந்தவர், '180’னு ஒரு முழு நீள சினிமாவுக்கான கதையைச் சொன்னார். புதுசா இருந்தது. உடனே ஓ.கே. சொல்லிட்டேன்!'' - அழகாகச் சிரிக்கிறார் சித்தார்த்.

''தமிழ்நாட்டுப் பக்கம் வரக் கூடாதுன்னு ஏதாவது வேண்டுதலா?''

''இல்லை தலைவா... தெலுங்கு ஃபீல்டுல எனக்குன்னு பெரிய மார்க்கெட் இருக்கு. இந்தியிலும் ரெண்டு படங்கள் முடிச்சுட் டேன். இப்போதான் தமிழ்ப் பக்கம் திரும்ப நேரம் கிடைச்சது. இது தமிழில் எனக்கு செகண்ட் இன்னிங்ஸ்னு சொல்றதைவிட, முதல் இன்னிங்ஸ்னே சொல்லலாம். புதுப் பையன் மாதிரிதான் நடிச்சிருக்கேன்!

''தமிழில் முதல் இன்னிங்ஸ் இது!''

'180’ ரொம்ப ஜாலியான படம். பாதி படம் அமெரிக்காவிலும், மீதி படம் இந்தியாவிலும் நடக்கும். சமீபத்தில் இவ்வளவு ரசனையான, கொண்டாட்டமான சிட்டி சப்ஜெக்ட் கதை தமிழ் சினிமாவில் வரலைன்னு நினைக்கிறேன். செம சினிமா!''

''இப்போலாம் ஒரு 'சினிமா ஹீரோ’ என்பவர் ஒரு பிராண்ட். உங்க பிராண்ட் இமேஜை எப்படி வளர்த்துக்கப் போறீங்க?''

''உதவி இயக்குநர், ஸ்கிரிப்ட் ரைட்டர், நடிகர், பாடகர்னு வித்தியாசமான பிளாட்ஃபார்மில் இயங்கிட்டு இருக்கேன். சினிமாவின் அத்தனை தளங்களிலும் கால் பதிச்சு, ஸ்கோர் பண்ண ஆசை. சுருக்கமா, கடைசி வரை சினிமாவில் மட்டுமே இருக்கணும்!''

''தமிழ் சினிமா டிரெண்ட் கவனிக்கிறீங்களா?''

''மினிமம் பட்ஜெட்... மேக்ஸிமம் திருப்திதான் இப்போ தமிழ் சினிமா டிரெண்ட். 'களவாணி’, 'மைனா’ 'யுத்தம் செய்’னு அடுத்தடுத்து நிறையத் தமிழ்ப் படங்கள் எனக்குப் பிடிச்சிருக்கு!''