Published:Updated:

சீக்கிரமே வருவேன்... நல்லதே நடக்கும்! : ரசிகனிடம் ரஜினி சத்தியம்

சீக்கிரமே வருவேன்... நல்லதே நடக்கும்! : ரசிகனிடம் ரஜினி சத்தியம்

சீக்கிரமே வருவேன்... நல்லதே நடக்கும்! : ரசிகனிடம் ரஜினி சத்தியம்

சீக்கிரமே வருவேன்... நல்லதே நடக்கும்! : ரசிகனிடம் ரஜினி சத்தியம்

Published:Updated:
##~##
வ்வொரு வருடமும் 'டிசம்பர் 12’ தமிழக காலண்டரில் சிறப்புத் தினம். அது ரஜினியின் பிறந்த நாள்!

'ரஜினி அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா?’ என்கிற பட்டிமன்றம்தொடங்கி, அடுத்த பட எதிர்பார்ப்பு வரை 'பாட்ஷா’வுக் குப் பிறகான அனைத்து ரஜினி பிறந்த நாட்களுமே சென்சேஷன்தான். இந்த முறை ஒரு தந்தையாகத் தன் குடும்பக் கடமைகள் நிறைவேற்றிய திருப்தி, 'எந்திரன்’ வெற்றி என உச்சக்கட்ட உற்சாகச் சூழல் ரஜினியைச் சுற்றி. ஆனால், சௌந்தர்யா திருமணத்துக்கு 'ரசிகர்கள் வர வேண்டாம்’ என்று ரஜினி அறிவித்ததும், அதைத் தொடர்ந்த சர்ச்சைகளும் திருஷ்டி. திருமணத்துக்கு என்று இல்லை, பல வருடங்களாகவே ரஜினி தன் ரசிகர்களைச் சந்திப்பது இல்லை என்பதுதான் ரசிகர்களுக்கு அவர் மீதான ஆகப் பெரிய அதிருப்தி.

சீக்கிரமே வருவேன்... நல்லதே நடக்கும்! : ரசிகனிடம் ரஜினி சத்தியம்

இந்தச் சூழலில் ரஜினியைத் தனியே சந்திக்கும் வாய்ப்பு ஒரு ரசிகனுக்குக் கிடைத்தால்? சந்தித்து, ரஜினியிடம் வகைதொகை இல்லாமல் கேள்விகளும் கேட்டுத் திரும்பி இருக்கிறார், பழனி பாட்ஷா என்கிற ரஜினி ரசிகர்.

சமீபத்தில், துரை தயாநிதியின் திருமணத்துக்காக மதுரைக்குச்சென்ற ரஜினியை கும்பலாகச் சூழ்ந்து கொண்டார்கள் ரசிகர்கள். ரஜினியின் கார் வேகம் எடுக்க, பின்னாலேயே தொடர்ந்து ஓடி வந்த கார்த்திகேயன் என்ற வாலிபர் விபத்தில் பலியானார். அந்த இளைஞரின் குடும்பத்தை ரஜினி சந்திக்க விரும்ப... அவர்களை அழைத்து வரும் பொறுப்பு மன்றத் தலைவர் சுதாகரால், பழனி பாட்ஷா விடம் ஒப்படைக்கப்பட்டது.

கடந்த 4-ம் தேதி காலை 11 மணிக்கு கார்த்திகேயனின் குடும்பத்தினரை அழைத்துக்கொண்டு ராகவேந்திரா மண்டபத்தில் ஆஜரான பழனி பாட்ஷா, ஒட்டுமொத்த ரசிகர் களின் ஆதங்கத்தையும் அங்கே ஒலித்து இருக்கிறார். பழனி பாட்ஷாவைச் சந்தித்தேன்.

சீக்கிரமே வருவேன்... நல்லதே நடக்கும்! : ரசிகனிடம் ரஜினி சத்தியம்

''கார்த்திகேயனின் குடும்பத்தி னரைப் பார்த்ததுமே தலைவருக்குக் கண்கள் கலங்கிவிட்டன. கார்த்தி கேயனின் இளைய சகோதரியைப் பார்த்து, 'நீ என்னம்மா படிக்கிற?’ன்னு கேட்டார். 'பி.எஸ்ஸி-யோட நான் படிப்பை நிறுத்திட்டேன் சார். இப்போ வீட்ல வரன் பார்த்துக்கிட்டு இருக்காங்க’ன்னு அந்தப் பொண்ணு சொல்ல, 'வெரிகுட்... வெரிகுட்... நல்ல வரனாப் பாருங்க. சொந்தத்துலயா... இல்லை, வெளியிலேயா?’ன்னு விசாரிச்சு, சட்டுனு உற்சாகமாகிட்டார். அந்தப் பொண்ணுக்கு வயது 28-ன்னு தெரிஞ்சுக்கிட்டதும், 'சீக்கிரமே கல்யாணத்தை முடிச்சுடுங்க... வரன் பார்த்த உடனே சொல்லுங்க... என்ன உதவின்னாலும் நான் செய்றேன்’னு தைரியம் கொடுத்தார். கார்த்திகேயன் குடும்பத்தோடு குரூப் போட்டோ எடுத்துக்கிட்டவர், நாலு லட்ச ரூபாய் பணத்தை அவங்ககிட்ட கொடுத்தார். கார்த்திகேயனோட அம்மா கதறி அழ ஆரம்பிச்சிட்டாங்க. தலைவர் அந்தம்மாவைத் தேத்தினப்ப, 'உங்ககூட சேர்ந்து படம் எடுத்துக்கணும்கிறதுதான் என் பையனோட ஆசை. அதுகூட நிறைவேறாமப் போச்சு. இன்னிக்கு நாங்க எல்லோரும் உங்ககூட படம் எடுத்துக்கிறோம். அதைப் பார்க்கக்கூட அவன் இல்லாமப் போயிட்டானே’ன்னு அழுதாங்க. உடனே, கார்த்திகேயனோட போட்டோவை வாங்கின தலைவர், அதைக் கையில் வெச்சுக்கிட்டு போஸ் கொடுத்தார். 'கவலைப்படாதீங்கம்மா... கார்த்தியும் நானும் சேர்ந்து எடுத்துக்கிட்ட படமா நினைச்சு, இதை வெச்சுக்கங்க’ன்னு சொன்னார். அந்த வார்த்தையில சுத்தி நின்ன எல்லோருமே கலங்கிட்டோம் சார்!'' என விவரித்த பழனி பாட்ஷா, ஒரு ரசிகனாக ரஜினியோடு உரையாடிய நிமிடங்களையும் பகிர்ந்து கொண்டார்.

சீக்கிரமே வருவேன்... நல்லதே நடக்கும்! : ரசிகனிடம் ரஜினி சத்தியம்

''தலைவர் தன்னோட ரசிகர்களைப் பார்க்கிறது இல்லை... பேசுறது இல்லைன்னு பெரிய குமுறலே இருக்கு. ஆனா, தலைவர்கிட்ட அதை யாரும் சொல்றது இல்லை. கார்த்திகேயனின் குடும்ப சந்திப்பு முடிந்ததுமே, தலைவர்கிட்ட சில நிமிஷங்கள் பேச எனக்கு நேரம் கிடைச்சது. அஞ்சு நிமிஷம் பேசினாலும், அத்தனை ரசிகர்களோட உணர்வு களையும் எதிர்பார்ப்புகளையும் அவர்கிட்ட கொட்டிடணும்னு நினைச்சுதான் நான் சென்னைக்கே கிளம்பினேன். அதனால், ரசிகர்கள் தலைவருக்காக ரெடி பண்ணிய விளம்பர நகல்களையும், பத்திரிகை செய்திகளையும் புகைப்படங்களாக்கி, கூடவே எடுத்துட்டுப் போய்இருந்தேன். 'சார், உங்ககிட்ட சில விஷயங்கள் பேசணும்’னு நான் கேட்டதும், 'அந்தக் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்லும் இந்த நேரத்துல மன்றம் குறித்துப் பேசணுமா?’ன்னு கேட்டார். 'அவசியம் பேசணும் தலைவா!’னு நான் சொன்னதும் சிரிச்சுட்டார். 'நீங்க அரசியலுக்கு வருவீங்கன்னு நம்பி, நாங்க அடிச்ச ஃப்ளெக்ஸ், பேனர், போஸ்டர்களை எல்லாம் பாருங்க தலைவரே’ன்னு சொல்லி, அத்தனை புகைப்படங்களையும் காட்டினேன்.

ஒவ்வொண்ணாப் பார்த்தவர், 'இந்த மாதிரில்லாம் செலவு பண்ணாதீங்க. முதல்ல குடும்பத்தைப் பாருங்க’ன்னு சொன்னார்!'' என விவரித்த பழனி பாட்ஷா, மேற்கொண்டு நடந்ததை உரையாடல் வடிவிலேயே சொன்னார்.

''சமீப காலமா நீங்க ரசிகர்களைச் சந்திக்கிறது இல்லை. ரசிகர் மன்ற மாநாடும் போடுறது இல்லை?''

''சீக்கிரமே எல்லாம் சரியா கிடும். உங்க எல்லோரையும் பார்க்கணும்னு எனக்கு மட்டும் ஆசை இல்லையா கண்ணா? நேரம் கை கூடட்டும். நிச்சயம் சந்திக்கிறேன். அதுவரைக்கும் நீங்க உங்க நேரத்தை குடும்பத் துக்காகச் செலவிடுங்க!''

'' 'சட்டமன்ற நாயகனே’, 'நாளைய ஆட்சியே’ன்னு நாங்க அடிக்கிற போஸ்டர்களைப் பார்க்கிறப்ப, என்ன நினைப் பீங்க தலைவரே?''

''நான் எல்லாத்தையும் பார்த்துக்கிட்டுதான் இருக்கேன். ரசிகர்கள் எனக்காக ஏன் இப்படிச் செலவு பண்றாங்கன்னு தெரியலை. சீக்கிரமே இது சம்பந்தமாப் பேசிடலாம்! நான் மதுரைக்கு வந்தப்ப, யாருக்குமே தெரியாதுன்னு நினைச்சேன். ஆனா, அங்கேகூட அவ்வளவு ரசிகர்கள் திரண்டு வந்துட்டாங்க. அதுல துரதிஷ்டவசமா ஒரு விபத்தும் நடந்துடுச்சு. அதனாலதான் எல்லாத்துக்குமே தயங்க வேண்டி இருக்கு!''

''தலைவரே... ரஜினிங்கிற வார்த்தையோட சக்தி உங்க ளுக்குத் தெரியலை. நீங்க வரு வீங்களான்னு தெரியாதப்பவே இத்தனை ரசிகர்கள் வந்தாங்க. நீங்க வருவீங்கன்னு தெரிஞ்சி ருந்தா, ஏர்போர்ட்லயே ஆயிரக்கணக்கில் குவிஞ்சு இருப்பாங்க தலைவரே!''

''வேணாம் கண்ணா... அப்படி எல்லாம் கூட்டம் சேர்க்க வேண்டாம்!''

''நீங்க அரசியலுக்கு வரணும்கிறதுதான் எங்க எல்லோருடைய ஆசையும். ஆனா, நீங்க அரசியல் சம்பந்தமா எதுவுமே சொல்ல மாட்டேங்குறீங்க. நீங்க அரசியலுக்கு வருவீங்களா... மாட்டீங்களா?''

(ரஜினியிடம் ஹா... ஹா... சிரிப்பு)

சீக்கிரமே வருவேன்... நல்லதே நடக்கும்! : ரசிகனிடம் ரஜினி சத்தியம்

''இந்தக் கேள்விக்கு நீங்க நிச்சயமா சிரிப்பீங்கன்னு தெரியும் தலைவா... தயவுபண்ணி வெளிப்படையா சொல்லுங்க?''

''எல்லோருடைய நம்பிக்கையையும் மதிக்கிறவன் நான். எந்த முடிவையும் எடுத்தோம், கவிழ்த்தோம்னு எடுத்துட முடியாது கண்ணா. நமக்கு மேல இருக் கிறவன் சரியான நேரத்தில், சரியா நம்மளை வழி நடத்துவான். இத்தனை வருஷம், எல்லா விஷயங் களிலும் என்னைச் சரியா வழி நடத்தியவன், அரசி யலிலும் நாம என்ன செய்யணும்கிறதை நிச்சயம் அடையாளம் காட்டுவான்!''

''இந்த சந்திப்பில் நீங்க என்ன சொன்னதா ரசிகர்கள்கிட்ட நான் சொல்றது?''

''எல்லாம் நல்லபடி நடக்கும்னு சொல்லுங்க. சீக்கிரமே சந்திக்க வருவேன். உட்கார்ந்து பேசுவோம். அப்புறம், நல்ல முடிவை எடுப்போம்!''

ரஜினி சந்திப்பு முடிந்து திரும்பியதும் பழனி பாட்ஷாவுக்கு தமிழகத்தின் பல திசைகளில் இருந் தும் தொலைபேசி அழைப்புகள்...

'தலைவர் என்ன சொன்னார்?’ என ஆர்வம் அடங்காமல் கேட்கும் ரசிகர்களுக்கு, 'அதெல்லாம் மேல இருக்கிறவனுக்குத்தாம்பா தெரியும்!’ என ரஜினி பாணியிலேயே சொல்லிச் சிரிக்கிறார் பழனி பாட்ஷா!

சீக்கிரமே வருவேன்... நல்லதே நடக்கும்! : ரசிகனிடம் ரஜினி சத்தியம்
சீக்கிரமே வருவேன்... நல்லதே நடக்கும்! : ரசிகனிடம் ரஜினி சத்தியம்
சீக்கிரமே வருவேன்... நல்லதே நடக்கும்! : ரசிகனிடம் ரஜினி சத்தியம்
சீக்கிரமே வருவேன்... நல்லதே நடக்கும்! : ரசிகனிடம் ரஜினி சத்தியம்
சீக்கிரமே வருவேன்... நல்லதே நடக்கும்! : ரசிகனிடம் ரஜினி சத்தியம்
சீக்கிரமே வருவேன்... நல்லதே நடக்கும்! : ரசிகனிடம் ரஜினி சத்தியம்
சீக்கிரமே வருவேன்... நல்லதே நடக்கும்! : ரசிகனிடம் ரஜினி சத்தியம்
சீக்கிரமே வருவேன்... நல்லதே நடக்கும்! : ரசிகனிடம் ரஜினி சத்தியம்
சீக்கிரமே வருவேன்... நல்லதே நடக்கும்! : ரசிகனிடம் ரஜினி சத்தியம்