'அவன்-இவன்’ படத்தின் அவள் - இவள்... மதுஷாலினி மற்றும் ஜனனி அய்யர். ''நாங்க ரெண்டு பேரும் டப்பிங் ஸ்டுடியோவில் இருக்கோம்'' - தெலுங்கு மிக்ஸ் தமிழ் செப்புகிறார் மதுஷாலினி. கிளிகள் அழைக்கும்போது, கிளம்புவதுதானே நியாயம்!

ஏவி.எம் கார்டனில், ''நான்தான் மது!''-முன்னால் வந்து நிற்கிறார் மதுஷாலினி. ''என் அப்பா பிசினஸ்மேன், அம்மா ஒரு வக்கீல். ஒரே ஒரு அண்ணா. ஒரே ஒரு தம்பி. என் ஊர் ஹைதராபாத். எனக்கு 21 வயசு. பி.ஏ. ஹிஸ்ட்ரி முடிச்சிருக்கேன். நான் ஒரு கிளாஸிக்கல் டான்ஸர். 'மிஸ். ஆந்திரா’ன்னு பட்டம் வாங்கினேன். நிறைய விளம்பரப் படங்களில் நடிச்ச அனுபவம் இருந்தது. சினிமா ஐடியாவே இல்லை. 'கீதகீதலு’ன்னு ஒரு சினிமாவில் நடிக்கக் கேட்டாங்க. அப்படியே

தெலுங்கில் நாலைந்து படங்கள். தமிழ் சினிமா மேல் ஆசை இருந்தது.

பாலா சார் கூப்பிட்டப்போ, என்னால் நம்பவே முடியலை. பாலா சார் படத்தில் நடிக்கிறது எவ்வளவு பெரிய மரியாதைன்னு, வெளியே ரெஸ்பான்ஸ் பார்த்தால்... புரியுது. அவர்கிட்ட ஒரு முறைகூட நான் திட்டு வாங்கலை தெரியுமா?''

''ஆர்யா எப்படி?''

''நான் தமிழில் ஒரு படம்தான் நடிச்சிருக்கேன். ஆர்யா, இப்போ தமிழ் சினிமாவில் பெரிய ஹீரோ. ஆனாலும், ரொம்ப ஹெல்ப் பண்ணுவார். எங்க காம்பினேஷன் பேசப் படும். நான் காலேஜ் பொண்ணா வர்றேன். ஆர்யா அடிக்கிற லூட்டியை நீங்க திரையில் பார்த்து நிச்சயம் ரசிப்பீங்க. விஷால் எனக்கு நல்ல டிப்ஸ் கொடுத்தார். என் னோட தமிழ் சினிமா என்ட்ரிக்கு அவங்க ரெண்டு பேரும் உதவி இருக்காங்கன்னு சொல்லணும். விஷாலும் ஆர்யாவும் எப்பவும் என்னைக் கிண்டல் பண்ணிட்டே இருப்பாங்க. ஒண்ணு தெரியுமா? நானும் ஜனனியும் இப்போ திக் ஃப்ரெண்ட்ஸ்'' என்கிறார் அழகாக!

அடுத்தது... நம்ம ஜனனி. ''எனக்கு சென்னைதான். இன்ஜினீயரிங் முடிச்சு ரெண்டு வருஷம் ஆச்சு. ப்ளஸ் டூ முடிச்சதும், மாடலிங் பண்ண ஆரம்பிச்சேன். நிறைய விளம்பரங்களில் நடிச்சாச்சு. 'சினிமா பண்ணலாமே’ன்னு நிறையப் பேர் சொன்னாங்க. எனக்கும் எண்ணம் இருந்தது. ஆனா, ஏதோ ஒரு படத்தில் நடிக்கிறதை விட, எல்லோரும் விரும்புற ஒரு படத்தில் அறிமுகம் ஆகணும்னு நினைச்சேன். அப்பதான் பாலா சார் ஆபீஸில் இருந்து போன். எல்லா சாமியையும் கும்பிட்டுட்டுப் போனேன். பாலா சார் என்னை செலெக்ட் பண்ணினதும், ஆஸ்திரேலியாவுக்கு மேற்படிப்புக்குப் போகலாம்னு டிக்கெட் எடுத்துவெச்சதை, கேன்சல் பண்ணினேன். குற்றாலத்தில் ஷூட்டிங். ஆர்யா ஏற்கெனவே மூணு வருஷமா பாலா சார்கூட வொர்க் பண்ணினதால், பதற்றம் இல்லாமல் இருந்தார். 'அவர் சொல்ற மாதிரி அப்படியே நடி... சிம்பிள்’ என்றார். அப்படியே செய்தேன். என்னுடைய கேரியர் ஒரு மிகச் சிறந்த படத்தில் ஆரம்பிக்கிறது பெரிய ப்ளஸ்.

என்னை ஒரு நல்ல நடிகையாக மாற்றியதில், விஷாலுக்குப் பெரிய பங்கு இருக்கு. என் வசனத்தை அவரும்மனப்பாடம் பண்ணி, நான் விட்டுட் டேன்னா சொல்லிக் கொடுப்பார். படத்தில் விஷாலின் கேரக்டர்போல இந்திய சினிமாவில் இதுவரை வந்தது இல்லைன்னு சொல்றாங்க. நான் தமிழ் சினிமாவுக்கே புதுசு. ஆனாலும் என்னையே டப்பிங் பேச அனுமதிச்சார் பாலா சார். ஹைய்யோ... சிரிச்சுட்டுக்கிட்டே இருந்தோம். அவ்ளோ ஜாலியான படம். படம் வரட்டும் பாருங்க... நான்தான் தமிழ் சினிமாவின் புது லூஸுப் பொண்ணு!'' -முகத்தைப் பொத்திக்கொண்டு சிரிக்குது பொண்ணு!