வித்தியாசமான வாழ்க்கைச் சூழலில் சிக்கித் தவிக்கும் ஐவர் ஒரு வானத்தின் கீழ் சந்திக்கும் கதை!

40 ஆயிரம் ரூபாய் திருட முற்படும் 'கேபிள் ராஜா’ சிம்பு, கிட்னி விற்க வந்த சரண்யா, 'முஸ்லிம் தீவிரவாதி’ என்ற சந்தேக முத்திரை சுமக்கும் அப்பாவி பிரகாஷ்ராஜ், ஃப்ரீக்கி இளைஞன் பரத், பாலியல் தொழிலாளி அனுஷ்கா என இந்த ஐந்து பேரும் ஓர் இடத்தில் இணை யும்போது நடக்கும் சம்பவங்கள்தான் க்ளைமாக்ஸ் முடிச்சு!

ஐந்து கதைகளை, அதன் அடர்த்தி குறையாமல், விறுவிறுப்பான காட்சி அமைப்புகளால் நகர்த்தி இருக்கும் வகையில் அறிமுக (தமிழில்) இயக்குநர் க்ரீஷ் அசரடிக்கிறார்.

ஒவ்வொரு கணமும் சந்தேகப் பார்வையை எதிர்கொள்ளும் முஸ்லிம் களின் சங்கட மனநிலை, ஒவ்வொரு நாளையும் அவமானத்தோடும் அவஸ்தை யோடும் நகர்த்தும் திருநங்கை மற்றும் பாலியல் தொழிலாளிகளின் வாழ்க்கை, 'கலாசாரக் காவலர்’களான மத அடிப்படைவாதிகளால் பாதிக்கப்படும் காதலர் கள், ஏழை விவசாயக் குடும்பம் சந்திக்கும் பண நெருக்கடிகள் எனச் சமூகத்தின் பல அடுக்குப் பிரச்னைகளை கமர்ஷியல் சினிமாவின் சுவை குன்றாமல் இயக்குநர் கையாண்டிருக்கும் விதம்... தமிழுக்குப் புதுசு!

ஏழை அடையாளம் மறைத்து, பந்தா ஸீன் போட்டுத் திரியும் சேரி இளைஞன் கேபிள் ராஜாவாக சிம்பு. முதல் பாதியில் டி.ஆரை இமிடேட் செய்து அடுக்கு மொழியில் கலகலக்கவைப்பவர், இரண்டாம் பாதியில் நடிப்பில் கலங்கடித்துவிடுகிறார். மனசாட்சி உறுத்த, தப்பை உணர்ந்து அழும் இடத்திலும், 'என்ன வாழ்க்கைடா இது’ என்று அலுத்துக்கொள்ளும் இடங் களிலும் அநாயாச நடிப்பு. போலீஸிடமும் புரோக்கரிடமும் மாட்டிக்கொண்டதும் 50-50 ஷேர் பேசுவதும், ட்ரீட்மென்ட் கொடுக்கும் டாக்டரிடம் தன்னையே விலை பேசுவதுமாக, கவர்ச்சியை மீறிய நெகிழ்ச்சியில் ஆச்சர்யப்படுத்துகிறார் அனுஷ்கா. திருநங்கையாக நடித்து இருக்கும் நிக்கி, பிரமாதப்படுத்துகிறார். 'ரேடியாவைச் சரியா டியூன் பண்ணாத மாதிரி ஒரு வாய்ஸ் வெச்சிருப்பானே, அவனா?’ என்று கலாய்க்கிற சந்தானத்தின் காமெடி கதையோட்டத்துக்கு ஜாலி லிஃப்ட் கொடுக்கிறது.

நீரவ் ஷா - ஞானசேகரின் ஒளிப்பதிவு, ஐந்து கதைகளுக்குமான ஐந்து நிலப் பகுதிகளைப் பிரமாதமாகப் பிரதிபலிக்கிறது. யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் 'எவன்டி உன்னைப் பெத்தான்’, 'நோ மணி’ பாடல்கள் முணுமுணுப்பு ரகம்.

'மத்த தொழில்ல எக்ஸ்பீரியன்ஸ் இருந்தாத்தான் மதிப்பாங்க. ஆனா, விபசாரத்துல எக்ஸ்பீரியன்ஸ் குறைவா இருந்தாதான் மதிப்பாங்க’, 'என்கிட்டே உனக்கு என்ன பிடிக்கும்? நீ பாடுறது!’, 'என்கிட்டே உனக்கு என்ன பிடிக்காது? நீ பாடுறதுதான்!’ போன்ற ஞானகிரி - குபேந்திரனின் வசனங்களில் பளிச் ஃப்ளாஷ்.

சினிமாத்தனமான, எதிர்பார்க்கக்கூடிய க்ளை மாக்ஸ்தான் பலவீனப் பட்டியலில் பலமாக இடம் பிடிக்கிறது. இன்றைய இளைஞர்களிடம் இருக்க வேண்டிய சக மனிதர்களின் மீதான அக்கறை, ஏழைகளுக்குக் கல்வியின் மீது இருக்க வேண்டிய கவனம், அரசு அலுவலர்களுக்கு இருக்க வேண்டிய மதச் சார்பின்மை, திருநங்கைகளின் அடையாளத்தை அங்கீகரிக்க வேண்டிய அவசியம் என வாழ்வியல் மதிப்பீடுகளை அழகாகச் சொன்ன விதத்தில் இந்த வானம்... தமிழ் சினிமா ரசிகர்கள் வரவேற்க வேண்டிய வண்ண வாணம்!