Published:Updated:

''ஆபரேஷன் விஜய்!''

ஹிட் ஹீரோக்களின் ஜாலி மீட்டிங்நா.கதிர்வேலன், ம.கா.செந்தில்குமார்படம் : கே.ராஜசேகரன்

''ஆபரேஷன் விஜய்!''

ஹிட் ஹீரோக்களின் ஜாலி மீட்டிங்நா.கதிர்வேலன், ம.கா.செந்தில்குமார்படம் : கே.ராஜசேகரன்

Published:Updated:
##~##

ஜீவா, 'ஜெயம்’ ரவி, ஆர்யா... கோடம்பாக்கத்தின் சென்சேஷன் ஹீரோக்கள். பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷனோ, பட செலெக்ஷனோ, எல்லாம் பகிர்ந்துகொள்ளும் 'நண்பேன்டா’ நண்பர்கள்.  ''நாங்க மூணு பேரும் சும்மா சும்மாவே மீட் பண்ணுவோம். இப்போ அதுக்கு ஒரு ஸ்பெஷல் காரணம் இருந்தா... மிஸ் பண்ணுவோமா?'' என்று 'சிட்சாட்’டுக்குக் கூடிய இடம் நுங்கம் பாக்கம் ஃபோர் ஃப்ரேம்ஸ் ப்ரிவியூ தியேட்டர்!  

 ''ஆர்யா, ஜீவா ரெண்டு பேரையும் சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடியே எனக்குத் தெரியும். நான் பாண்டியன் மாஸ்டர்கிட்ட ஸ்டன்ட் கிளாஸ் போகும்போது, அங்கே இவங்களைப் பார்த்திருக்கேன்!'' என்று 'ஜெயம்’ ரவி ஆரம்பித்து வைத்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''ஆபரேஷன் விஜய்!''

''இவனுங்களை ரொம்ப நாளாத் தெரியும். ஆனா, மாமா, மச்சினு க்ளோஸ் ஆனது ஸ்டார் கிரிக்கெட் டைம்லதான்!'' என்றார் ஆர்யா. ''கரெக்ட் மச்சி... ஒரு கேம் மாதிரி எல்லாரையும் ஒண்ணு சேர்க்கிற விஷயம் வேற எதுவும் இல்லை!'' என்று ஜீவா ஃபீலிங்ஸ் டீலிங்ஸ் ஆரம்பிக்க, ''ஆமாமா... 'ஜீவா அவுட் ஆகணும்’னு நான் மனப்பூர்வமா வேண்டிப்பேன். 'நான் அவுட் ஆகணும்’னு ரவி காவடியே எடுப்பான்!''

''ஆபரேஷன் விஜய்!''

என்று கலாய்த்தார் ஆர்யா. ''இதுதான் இவன்கிட்ட உள்ள ஒரு கெட்ட்ட்ட்ட பழக்கம். கலாய்ச்சு ஸ்கோர் பண்ற வெறியில, எல்லார் முன்னாடியும் நம்மளைக் காலி பண்ணிருவான். அதுவும் நாலு கேர்ள்ஸ் சேர்ந்து வந்துட்டாப் போதும்... 'பாய்ஸ்... நீங்கள்லாம் யாரு. ஏன் கிரவுட் சேர்க்கிறீங்க?’ன்னு எங்களைத் துரத்தாத குறையா விரட்டிவிட்ருவான்!'' என்று ஆர்யா தலையில்தட்டு கிறார் ரவி.

''நான் ரவியை முதல்முறையா 'தித்திக்குதே’ ஷூட்டிங்லதான் பார்த் தேன். அப்போ அவன் 'ஜெயம்’ பட ஷூட்டிங்கில் இருந்தான். அப்போ, ரவி வாய்ஸ் ரொம்ப மென்மையா இருக்கும். பத்து நாள் பட்டினிகிடந்தவன் மாதிரியே பேசினான். அப்படிப் பதுங்கினவன், இப்போ என்னமா பாயுறான்?'' என்று ஜீவா பாராட்ட, ரவியின் கண்களில் சின்ன மின்னல்.

''பாய்ஸ்... உங்க கேலண்டர்ல இந்த நாளைக் குறிச்சுவெச்சுக்கங்க. நாம அடுத்த வருஷமும் இதே நாள்ல விகடனுக்காக மீட் பண்ணலாம்!'' என்று ஜீவா சொல்ல, ''அப்போ, நான் கல்யாணமாகி கையில ரெண்டு குழந்தைங்களோடு வருவேன்!'' என்றார் ஆர்யா. ''ஒரு வருஷத்துல எப்படிடா ரெண்டு குழந்தை பெத்துக்குவ?'' என்று ஜீவா அதிர்ச்சியோடு கேட்க, ''ரெண்டு குழந்தைகளோட வர்றது தப்பு இல்லை... ரெண்டு வொய் ஃபோடதான் வரக் கூடாது!'' என்று ஆர்யா கண் சிமிட்டினார். ''இவனுக்குச் சீக்கிரம் கல்யாணம் பண்ணிவைக்கணும். அப்போதான் நம்ம கஷ்டம் என்னன்னு தெரியும்!'' என்ற ரவியின் கமென்ட்டுக்கு ஜீவாவிடம் விசில்.  

''ஆபரேஷன் விஜய்!''

''நான் முதன்முதலா ஆர்யாவைப் பார்த்தப்போ, 'உள்ளம் கேட்குமே’ பண்ணிட்டு இருந்தான். அந்தப் படம் நாலு வருஷ புராஜெக்ட். கிட்டத்தட்ட இவனோட எல்லாப் படமுமே குறைஞ்சது மூணு, நாலு வருஷ புராஜெக்ட்டா தான் இருக்கும். ஆர்யாகிட்ட நேத்து ஒரு பேச்சு, இன்னிக்கு ஒரு பேச்சு இருக்காது. எப்போ கேட்டாலும், 'நான் கடவுள்’ல நடிச்சிட்டு இருக்கேன்’னு சொல்லிட்டே இருந்தான்!'' என்று ரவி சிரிக்க, ''கரெக்டா சொன்னடா... பத்து மார்க் உனக்கு!'' என்று அதற்கும் அசரவில்லை ஆர்யா. ''தேனி மக்கள் இப்போஎன் மேல எவ்வளவு பாசமா இருக் காங்க தெரியுமா? 'எங்க ஊரு எம்.எல்.ஏ-வைவிட நீங்கதான்தம்பி இங்கயே கெடையாக் கெடக் கீங்க’ன்னு உருகிப் பேசுவாங்க. பேசாம, பாலிடிக்ஸ்ல இறங்கிரலாம்னு பார்க்கிறேன்!'' என்று வெடித்துச் சிரிக்கிறார் ஆர்யா.

''சாருக்கு மொபைல் மெமரி கொள்ளாத அளவுக்கு கேர்ள் ஃப்ரெண்ட்ஸ். எல்லாப் பொண்ணுங்க நம்பரையும் சுத்தமான தமிழ்ப் பெயரில் ஸ்டோர் பண்ணி இருப்பான்.போன் வந்தா அது பையனா, பொண்ணான்னுகூடக் கண்டுபிடிக்க முடியாது. அடிக்கடி ஓரம் ஒதுங்கிப் போய், போன் பேசிட்டு வருவான். கேட்டா, 'அம்மா’ன்னு சொல்லுவான். எல்லாம் சும்மா!'' என்று ஜீவா சொல்ல, ''கம்பெனி ரகசியத்தை வெளியில் சொல்லாதீங்கப்பா!'' என்று கை கூப்புகிறார் ஆர்யா.

''ஆபரேஷன் விஜய்!''

''இடியட் நம்பர் டூ... எப்படிப் போகுது ஷூட்டிங்?'' என்று ஜீவாவிடம் 'நண்பன்’ பட நிலவரம் கேட்டார் ரவி. ''ஷங்கர் சார் மிரளவைக்கிறார். எப்படி நடிக்கணும்னு அவர் நடிச்சுக் காட்டுறப்ப, அதை பீட் பண்ணணும்னு நமக்கே வெறி வந்திரும். சும்மா பின்னி எடுக்குறார்!'' என்று ஜீவா சொல்ல, ரவி தன் அனுபவம் பகிர்கிறார். ''தம் அடிக்கிறப்ப எப்படிப் புகை விடணும்னு அமீர் சார் பெர்ஃபெக்டா சொல்லிக் கொடுப்பார். அவர் சொல்றதைக் கேட்டா, நம்ம கேரக்டர்... நாமளே எதிர்பார்க்காத ரேஞ்சுக்குப் போயிரும்!'' இவர்களின் ஃபீலிங்ஸைப் பார்த்துவிட்டு நமட்டுச் சிரிப்புடன் தன் கதை சொன்னார் ஆர்யா. ''பாலா சார், நமக்கு மூடு இருந்தாதான் நடிக்கவே சொல்வார். 'ஷாட் ரெடி... டேக்’னு அவசரமே கிடையாது. 'ரெடியா’ன்னு கேட்பார். 'இன்னிக்கு மூடு சரியில்லை’ன்னு சொன்னா, 'ஓ.கே. அப்புறமா எடுத்துக்கலாம்’னு ஃப்ரீயா விட்டுருவார். நாம மூடு செட் ஆகி பரபரன்னு ரிகர்சல் முடிச்சு வந்தா, அவர் பாட்டுக்கு ஒரு கயித்துக் கட்டில்ல படுத்துத் தூங்கிட்டு இருப்பார். எங்களால அவரும், அவரால நாங்களும்னு, ரெஸ்ட் எடுத்து ரெஸ்ட் எடுத்தே டயர்டான அனுபவங்கள் நிறைய!'' என்று ஆர்யா நிறுத்த, ''நம்ம கேங்க்ல சீனியர் ஹீரோ ஒருத்தரைச் சேர்த்துக்கணும். செம கலாட்டாவா இருக் கும்!'' என்று புது ப்ளான் சொல்கிறார் ரவி.

''ஆபரேஷன் விஜய்!''

''விஜய் சாரை டார்கெட் பண்ணலாம். ரொம்ப சிம்பிளா இருப்பார். 'நண்பன்’ ஷூட்டிங்ல நான் செம அரட்டை அடிச்சுட்டு இருப்பேன். அதை அமைதியா ரசிச்சுட்டு இருப்பார். எங்கே கூப்பிட்டாலும் கேஷ§வலா வருவார். என்ன... இன்னும் அவரை மாம்ஸ், மச்சின்னுதான் கூப்பிடலை. அவர் இப்ப எனக்கு செம தோஸ்த்!'' என்று ஜீவா சொல்ல, ''ஓ.கே. டன்... நீ அவரை நைஸா ஏமாத்திக் கூட்டிட்டு வர்ற. நாங்க 'ட்ரீட் கொடுங்ணா’ன்னு அன்பாக் கேட்டு, காரியம் சாதிப்போம். இந்த ப்ளானுக்குப் பேர், 'ஆபரேஷன் விஜய்’. இது நமக்குள்ள மட்டும் இருக்கட்டும்!'' என்று ஆர்யா 'உஷ்ஷ்ஷ்ஷ்’ சொல்ல, அழகாகத் தலை ஆட்டுகிறார்கள் ஜீவாவும் ரவியும்!    

ண்ணா... உஷாருங்ணா!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism