என் விகடன் - சென்னை
என் விகடன் - திருச்சி
என் விகடன் - புதுச்சேரி
Published:Updated:

'உங்க கையெழுத்தை ஆட்டோகிராஃபா மாத்துங்க!'

எஸ். கலீல்ராஜா

##~##
''இ
ன்னிக்கு டி.வி-தான் எல்லாரையும் மயக்கும் மகுடி. தன்னை 'அழகன்’னு நினைக்கிற ஒவ்வொரு ஆணும், தன்னை 'அழகி’ன்னு நினைக்கிற ஒவ்வொரு பெண்ணும் ஒரு பிரபல டி.வி. நடத்துற கேம் ஷோவில் கலந்துக்கிறாங்க. நிகழ்ச்சியைப் பிரபலப்படுத்த கடைக்கோடி கிராமங் களுக்குத் தங்கள் டீமை அனுப்புறாங்க அந்த சேனல் ஆட்கள். அது எப்படி தமிழ்நாட்டு மக்களின்
'உங்க கையெழுத்தை ஆட்டோகிராஃபா மாத்துங்க!'
வாழ்க்கை முறையை மாத்தி அமைக்குதுங் கிறதுதான் கதை!'' - தாடி தடவியபடி சிரிக்கிறார் இயக்குநர் நந்தா பெரியசாமி.

''டி.வி. நிகழ்ச்சிகள்தான், மக்கள் ரசனையை மழுங்கடிக்கிறதுன்னும் ஒரு விமர்சனம் இருக்கு. அதை நீங்களும் ஆதரிக்கிறீங்களா?''

''இல்லை... டி.வி. நமக்கு நல்லது பண்ணுதா கெட்டது பண்ணுதான்னு பார்க்க, மக்கள் ரெடியா இல்லை. அவங்களுக்கு டி.வி. பார்க்கணும். டி.வி -யில் வரணும். அந்த நிகழ்ச்சிக்கு மக்கள் எப்படித் தயாராகிறாங்கன்னு மட்டும்தான் சொல்லப்போறேன். ஒரு வெளிநாட்டுக்காரர் இந்தப் படத்தைப் பார்த்தா, இன்னிய தமிழ்நாட்டின் ட்ரெண்ட் புரிஞ்சுக்கலாம்!''

''அறிமுக ஹீரோ-ஹீரோயினுடன் கதையை மட்டும் நம்பிக் களம் இறங்கிட்டீங்களா?''

''மலையாளத்தில் இருந்து ஜோ, கன்னடத்தில் இருந்து ஆருஷி... இங்கே அறிமுகம் ஆகுறாங்க. 'ஒரே நாளில் அம்பானி ஆக முடியாது. சானியா மிர்சா ஆக முடியாது. டோனி ஆக முடியாது. ஆனா, ஒரே நாளில் டி.வி. ஸ்டார் ஆகலாம். உங்க கையெழுத்தை ஆட்டோகிராஃபா மாத்துங்க’ன்னு பேசிப் பேசியே மக்களை வசியப்படுத்தும் ஹீரோ கேரக்டர். செட்டியார் வீட்டில் வேலை பார்க்கும் வேலைக்காரப் பொண்ணு ஹீரோயின். சின்ட்ரெல்லா மாதிரி ஒவ்வொரு ராத்திரியும் ரகசியமா அழகிப் போட்டிக்குத் தயார் ஆவாங்க. அவங்களை ஹீரோதான் ரெடி பண்ணுவார். ஹீரோயின் அழகி ஆனாங்களா... ஹீரோவின் பின்னணி என்னங் கிறதுதான் கதையின் சுவாரஸ்யம். இந்தக் கதையில் நீங்க, நான், நாம்... எல்லாருமே இருக்கோம்!''

'உங்க கையெழுத்தை ஆட்டோகிராஃபா மாத்துங்க!'