Published:Updated:

அஞ்சலியின் ஏழு கிலோ ரிஸ்க்!

நா.கதிர்வேலன்

அஞ்சலியின் ஏழு கிலோ ரிஸ்க்!

நா.கதிர்வேலன்

Published:Updated:
##~##

''வழக்கமாக விக்ரம், சூர்யா போன்ற ஹீரோக்கள் தங்கள் கேரக்டர்களுக்காக வெயிட் குறைத்து, சிக்ஸ்பேக் வைத்து மிரட்டுவார்கள். ஆனால், எங்க படத்தில் ஹீரோயின் அஞ்சலி அப்படி வெரைட்டி விருந்து வெச்சிருக்காங்க. புது மணப் பெண்ணா ஸ்லிம் அழகில் வலம் வந்தவங்க, கல்யாணம் முடிஞ்ச பிறகு, பூசுனாப்ல தோற்றம் வேணும்னு ஏழு கிலோ வெயிட் அதிகரிச்சுசுட்டு வந்தாங்க. ஒரு ஹீரோயின் தன் கேரியரின் உச்சத்தில் இருக்கிறப்போ, வெயிட்டைக் கூட்டி ரிஸ்க் எடுத்துக்க மாட்டாங்க. 'கருங்காலி’ படம் மேல் அஞ்சலிக்கு இருந்த நம்பிக்கை அதை சாதிக்கவெச்சது!'' - உற்சாகமாக ஆரம்பிக்கிறார் இயக்குநர் மு.களஞ்சியம்.

அஞ்சலியின் ஏழு கிலோ ரிஸ்க்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 ''உங்களை ரொம்ப நாளா ஆளையே காணோமே?''

''இந்தக் கேள்விக்கு 'கருங்காலி’ படம் மூலமா விடை சொல்ல விரும்புறேன். படித்த இளைஞர்களுக்கு என்ன பிரச்னைனு ஸ்டடி பண்றதுக்கு இந்த இடைவெளி எனக்கு உதவியது. செல்போன், இணைய தளங்கள் மூலம் கணவன்-மனைவி இடையிலான அந்தரங்கம் உடைபடும் விபரீதங்கள்தான் கதைக் களம். உறவுகளைப் பயன்படுத்தி மிரட்டுகிற, துரோகத்துக்கு வழிவகுக்கும் ஒரு பாத்திரத்தில் நானே நடிக்கிறேன்!''

''நடிக்கிறது அவ்வளவு ஈஸியா என்ன?''

''இந்த சினிமா எனக்கு செட் ஆகும் என்பதால் மட்டுமே, அந்தப் பொறுப்பை ஏத்துக்கிட்டேன். என்னைத் தவிர, படத்தில் எல்லோரும் நல்லா நடிச்சிருக்காங்க. என் நடிப்பை நானே அளவிட முடியலை. நீங்கதான் எனக்கு மார்க் போடணும்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism