Published:Updated:

''சினைகொண்ட சிங்கங்க நாங்க!''

எஸ். கலீல்ராஜாபடம் : பொன்.காசிராஜன்

''சினைகொண்ட சிங்கங்க நாங்க!''

எஸ். கலீல்ராஜாபடம் : பொன்.காசிராஜன்

Published:Updated:
##~##

''எல்லாருக்கும் சினிமா கனவு இருக்கும். எங்களுக்கு சினிமாதான் உலகம். நாங்க எல்லாருமே சினிமாக்காரங்களோட வாரிசுகள். நான் முனீஸ் - தெலுங்கு இசையமைப்பாளர் வாசு ராவ் பையன். உதய் - மலை யாளப் பட ஃபைனான்ஸியர் ராஜகோபால் சாரோட பையன். சஞ்சய் - நடிகர் சந்தான பாரதியின் மகன். அப்புறம் சொல்லிக்கிற மாதிரி யாரும் இல்லை'' என்று முனீஸ் கண்ணடிக்க, ''ஓய்ய்ய்ய்... நாங்கதான் 'நாங்க’... நீங்கலாம் போங்கு!'' என்று அவர் முதுகில் தட்டுகிறார் வினோத். ''நான் தேவர் ஃபிலிம்ஸ் புரொடக்ஷன்ல இருந்த குருசாமியின் மகன். முன்னாள் நடிகர் ஆதித்தனின் மகன் நிவாஸ். ஷாகீர் - பின்னணிப் பாடகர் மனோவின் மகன்!'' என்று அறிமுகம் கொடுக்கிறார் வினோத். ''சூரியன், சந்திரன், செவ்வாய் கிரகத்துக்கு எதுக்கு விசிட்டிங் கார்டுன்னுதான் வினோத் அறிமுகப்படுத்தலை'' என்று உதய் உதார் ஸ்டேட்மென்ட் விட, ''இவனுங்க பேச ஆரம்பிச்சா, செட்டையே சிதைக்க ஆரம்பிச்சிருவாங்க... எல்லாரும் சினைகொண்ட சிங்கங்க!'' என்று சஞ்சய் கவுன்ட்டர் கொடுக்க, ''அடப்பாவி! அது சினம்டா!'' என்று மொத்தப் பேருமாக சஞ்சய் மேல் விழுந்து சிரிக்கிறார்கள் 'நாங்க’ பாய்ஸ். இவர்களின் கலாட்டா சேட்டையைத் தூரத்தில் இருந்து பார்த்து ரசித்துக்கொண்டு இருக்கிறார் 'நாங்க’ படத்தின் இயக்குநர் செல்வா.

''சினைகொண்ட சிங்கங்க நாங்க!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 ''பட புரொமோஷனுக்காக ரஜினி சாரைப் பார்க்கப் போயிருந்தோம். 'இது 80-களில் நடக்கும் கதை. அப்போ காலேஜ் படிச்சுட்டு இருந்த பசங்க, 2011-ல் மீண்டும் சந்திச்சா எப்படி இருக்கும்?’னு சொன்னதும், 'ஓ... வெரி நைஸ்... எனக்கு இப்பவே படம் பார்க்கணும்போல இருக்கு’ன்னு ஆர்வமா எங்களோடு பேசிட்டு இருந்தார். ‘We don’t remember the days... We remember the moments’ என்ற படத்தின் கேப்ஷனைப் படிச்சுட்டு 'உண்மைதான்... எனக்கு இதைப் படிச்சதுமே என்னோட இளமைப் பருவ வாழ்க்கை ஞாபகத்துக்கு வருது’ன்னு ஆழ்ந்த சிந்தனைக்குப் போயிட்டார்!'' என்று சிலாகிக்கிறார் செல்வா.

''2011-ல் உள்ள கேரக்டர்களைப் பார்த்ததுமே 'இதெல்லாம் வேற ஆட்கள் பண்ணினாங்களா?’ன்னு கேட்டார் ரஜினி சார். 'நாங்கதான் சார் அது’ன்னு சொன்னதும் ஆச்சர்யமாகிட்டார். 'கண்டுபிடிக்கவே முடியலை... அப்படியே வயசான ஆட்கள் மாதிரியே இருக்கீங்க. மேக்கப்புக்கு நிறையக் கஷ்டப்பட்டு இருக்கீங்க போல’ன்னு ஒவ்வொருத்தர் கை பிடிச்சும் பாராட்டினார்!'' என்று முனீஸ் சொல்ல, கை தட்டி தங்களைத் தாங்களே உற்சாகப்படுத்திக் கொள்கிறார்கள் அனைவரும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism