என் விகடன் - மதுரை
என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - திருச்சி
Published:Updated:

இன்னொரு 'நாயகன்' உருவாகிறான்!

எம்.குணா

##~##

''பாஸ் ரெடி!'' - பரபரப்பாகிறது  யூனிட். ஆயிரம் வாட்ஸ்களில் பளீர் ஒளி உமிழும் விளக்குகள் முன், துப்பாக்கி, கிடார், பைக், கூலிங் கிளாஸ் என விதவிதமான 'காம்போ’க்களோடு போஸ் கொடுக்கிறார் பாஸ் என்கிற பாஸ்கரன்!

கடந்த ஆட்சியில் திரைத் துறையில் சுழன்றடித்த 'நிதி’ப் புயல்களுக்கு, புதிய அ.தி.மு.க. ஆட்சியின் கவுன்ட்டர் அட்டாக்... பாஸ்கரன்! சார் யார்னு தெரியுதா... சசிகலாவின் அக்கா வனிதாவின் வாரிசு. டி.டி.வி. தினகரனின் தம்பி. ஜெயலலிதாவின் முன்னாள் 'வளர்ப்பு மகன்’, இந்நாள் 'சின்ன எம்.ஜி.ஆர்’ சுதாகரனின் அண்ணன். 'பழைய ஜெ.ஜெ. டி.வி. பாஸ்கரனேதான்!

படத்தின் பெயர்... 'தலைவன்!’

இன்னொரு 'நாயகன்' உருவாகிறான்!

''என்ன திடீர்னு சினிமா ஆசை?''

''அண்ணாமலை யுனிவர்சிட்டியில் படிக்கிற காலத்தில் இருந்தே சினிமான்னா எனக்கு உயிர். நல்ல படங்களைத் தேடித் தேடிப் பார்ப்பேன். முதலில் நான் ஒரு ரசனையுள்ள ரசிகன். இப்போ... நடிகன்!''

இன்னொரு 'நாயகன்' உருவாகிறான்!

''கூட்டம் கூட்டமாக் கிளம்பிட்டீங்க... என்ன பிளான்... ஆக்ஷன் ஹீரோவா இல்லை... பெர்ஃபாமன்ஸ் ஆக்டரா?''

''நான் தலைவர் எம்.ஜி.ஆரோட தீவிர ரசிகன். அவரோட அலட்டல் இல்லாத நடிப்பு எனக்குப் பிடிக்கும். 'அன்பே வா’ படத்தில் ஒரு காட்சியில ஆஜானுபாகுவான மல்யுத்த வீரனைத் தலைக்கு மேல தூக்கி நாலு சுத்துச் சுத்தி வீசுவார். தலைவர் நினைச்சிருந்தா, அந்த ஸீன்ல தாராளமா டூப்பைப் பயன்படுத்தி இருக்கலாம். ஆனா, தலைவர் அப்படிச் செய்யலை. ஒரு வாரம் கடுமையா உடற்பயிற்சி செஞ்சு, நிஜமாவே அந்தப் பயில்வானைத் தூக்கி வீசினார். அது மாதிரி கம்பீரமான ஆக்ஷன் ஹீரோவா ஆகணும். அதுதான் என் ஆசை!''

''பூரிப்பா... செம கனமா இருந்தீங்க. இப்போ ஆளே அடையாளம் தெரியாம மாறிட்டீங்க... 'அம்மா’ ஆட்சிக்கு வந்த வேகத்துல எப்படி இப்படி?''

''ஹைய்யோ.... ஸ்லிம்மா இருக்கேனா! தேங்க்ஸ் தலைவா! ஆனா, ஆட்சி மாற்றத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. சினிமாவுல நடிகன் ஆகணும்னா, ரிஸ்க் எடுக்கணும்னு எனக்குத் தெரியும். ரெண்டு வருஷம் போராடி உடம்பைக் குறைச்சிருக்கேன். தினமும் நாலு மணி நேரம் எக்சர்சைஸ் பண்ணினேன். கடுமையான டயட். நம்புவீங்களா... 20 கிலோ எடை குறைச்சிருக்கேன். முன்னாடி பார்த்தவங்க, 'என்னப்பா ஆளே இளைச்சுத் துரும்பாப் போயிட்டே’னு கேட்டாலும், புதுசா பார்க்கிறவங்களுக்கு ஜம்முனு தெரிவேன்ல!''

இன்னொரு 'நாயகன்' உருவாகிறான்!

'' 'தலைவன்’கிற பேர்ல ஏற்கெனவே எம்.ஜி.ஆர். படம் வந்திருக்கே?''

''அதனால என்ன? என் மானசீக குரு, ஒரே தலைவன் எம்.ஜி.ஆர்தான். நான் நடிக்கிற முதல் படத்தோட டைட்டில் அவர் படப் பேர்ல அமைஞ்சு இருக்கு. இது அவரே எனக்கு ஆசீர்வாதம் வழங்குற மாதிரி!''

''டைரக்டர் யாரு?''

''ஏகப்பட்ட டைரக்டர்கள் நிறையக் கதைகள் சொன்னாங்க. அதிலே எனக்குப் பிடிச்சது 'தலைவன்’தான். படம் முழுக்கத் திகீர் திருப்பங்களும் அதிரடி ஆக்ஷனும் நிறைஞ்சு இருக்கும். படத்தை எல்லோருக்கும் தெரிந்த பிரபல டைரக்டர் ஒருத்தர்தான் இயக்குவார். யார்னு இப்போ சொல்ல மாட்டேன்... சஸ்பென்ஸ்!''

'' 'தி.மு.க. தலைமைக் குடும்ப உறுப்பினர்கள் கூட்டம் கூட்டமா சினிமாவுக்கு வந்து ஆக்ரமிப்பு பண்ணிட்டாங்க’ன்னு கடும் விமர்சனம் வந்தது. அதை இப்போ நீங்க அ.தி.மு.க. சார்பில் ஆரம்பிச்சுவைக்கிறீங்களே?''  

''இல்லவே இல்லைங்க! ஒண்ணு உறுதியாச் சொல்றேன். என் திறமை மூலம் மட்டுமே நான்

இன்னொரு 'நாயகன்' உருவாகிறான்!

ஜெயிப்பேன். எங்கேயும் எப்பவும் தலையீடு இருக்காது. சிங்கம் மட்டுமே வாழ்வது காடாகாது. மான், முயல், எருது, யானைன்னு எல்லாமும் நல்லபடியா வாழணும். சினிமாவும் அது மாதிரிதான். தயாரிப்பாளரில் இருந்து லைட்பாய் வரை எல்லாரும் வாழணும். நான் வாழறதுக்காக மத்தவங்க வாழ்க்கையை அழிக்க மாட்டேன். அது தி.மு.க. ஆட்களுக்குத்தான் வரும். எனக்கு வராது!''  

''உங்க சினிமா பிரவேசத்துக்கு ஜெயலலிதா, சசிகலாவிடம் ஆசீர்வாதம் வாங்குனீங்களா?''

''அவங்க ஆசீர்வாதம் எனக்கு எப்பவும் உண்டு!''