ஸ்பெஷல் -1
Published:Updated:

நல்லவங்க நயன்தாரா... அண்ணன் பிரபுதேவா!

நல்லவங்க நயன்தாரா... அண்ணன் பிரபுதேவா!

##~##
ன்சிகா மோட்வானி... அம்மணி நடித்து இன்னும் தமிழில் ஒரு படம்கூட வெளிவரவில்லை. ஆனால், அதற்குள் மின்மினு பப்ளிசிட்டி!

   'பிரபுதேவாவை நயன்தாராவிடம் இருந்து பிரித்துவிட்டார்’, 'ஏகப்பட்ட வெயிட் போட்டு விட்டதால் பிரபுதேவா கடிந்துகொண்டார்’, 'விஜய் வேண்டி விரும்பி தனது அடுத்த படத் துக்கு ஹன்சிகாவை டிக் செய்தார்’ என்று திக்கொன்றுக்கு திடுக் தகவல். ஹன்சிகாவிடமே விசாரித்தேன்...    

நல்லவங்க நயன்தாரா... அண்ணன் பிரபுதேவா!

''எக்கச்சக்க வெயிட் போட்டதால், பிரபுதேவா உங்க கிட்ட கோபிச்சுக்கிட்டாராமே!''

''எனக்கு 19 வயசுதான் ஆகுது. எல்லாத் தையும் சாப்பிடுற வயசுன்னு அம்மா எதை யாவது செஞ்சு கொடுத்துட்டே இருப்பாங்க. அதனால், சில நேரம் டயட் மீறி வெயிட் போட்ருவேன். சில பெர்சனல் காரணங்களால், 'எங்கேயும் காதல்’ ஷூட்டிங்குக்கு பிரேக் விட்டிருந்தாங்க. நான் வழக்கம்போல டயட் கன்ட்ரோல் இல்லாம வெயிட் போட்டுட்டேன். ஷூட்டிங் ஆரம்பிச்சப்போ என்னைப் பார்த்த பிரபுதேவா சார், 'ஏன் இவ்ளோ வெயிட்? நாலே நாள் டைம்... வெயிட் குறைஞ்சிருக்கணும்’னு திட்டிட்டார். நான் ரொம்ப பயந்துட்டேன். இப்போ நான் டயட்ல ரொம்ப ஸ்ட்ரிக்ட்!''

''உங்களுக்கும் பிரபுதேவாவுக்கும் லவ்ஸ்... கோபத்துல நயன்தாரா உங்களை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்து கன்னத்தில் அறைஞ்சாங்களாமே?''

''அதெல்லாம் அண்ணாவுக்கு இருக்கிற மரி யாதையைக் கெடுக்கிறதுக்காக பரப்பப்பட்ட வதந்தி. ('அண்ணாவா?!’) பிடிச்சவங்க மேல அன்பும் அக்கறையும் காட்டுற அற்புதமான மனுஷி நயன்தாரா. பிரபுதேவா - நயன் தாராவுக்கு நடுவில் என்னை ஏன் வம்புக்கு இழுத்து வேடிக்கை பார்க்கிறாங்கன்னு தெரி யலை. நான் இன்னும் ரொம்ப தூரம் போகணும். எனக்குத் தமிழ் தெரியாதுங்கிறதுனால, ஒவ்வொரு விஷயத்தையும் பொறுமையா சொல்லிக்கொடுத்தார் பிரபு அண்ணா. இப்போ எங்க குடும்பத்தில் இன்னொரு மகனாகவே மாறிட்டார். நான், என் அண்ணா, பிரபு அண்ணா சேர்த்து இப்ப எங்க அம்மாவுக்கு மூணு பிள்ளைங்க. இனிமே இப்படி எல்லாம் தப்பாப் பேசாதீங்க. ப்ளீஸ்.... காட் ப்ளஸ் யூ!''