Published:Updated:

''நம்புங்க... எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை!''

இர.ப்ரீத்தி

''நம்புங்க... எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை!''

இர.ப்ரீத்தி

Published:Updated:
##~##

'பாய்ஸ்’ படம் வெளி வந்து எட்டு ஆண்டுகள் ஆச்சு என்பதை நம்ப முடியவில்லை. அதே இளமை... அதே அழகு... அதே குறும்பு. 'வேலாயுதம்’ படப்பிடிப்பின் பரபரப்பில் இருந்தார் ஜெனிலியா.

''தமிழ்ல அப்பப்போ தலை காட்டிட்டு காணாமப் போயிடுறீங்க... என்னதான் பிரச்னை?''

''நத்திங்! அடுத்தடுத்து தமிழில் படம் பண்ணணும்னு ஆசைதான். ஆனா, இந்தி, தெலுங்குனு ஓடிட்டே இருக்கேன். நடுவில் சந்தோஷ் சிவனுக்காக ஒரு மலையாளப் படம். கிடைக்கிற நேரத்தில் ரொம்ப செலெக்டிவ்வான ஸ்க்ரிப்ட்டில் தானே நடிக்க முடியும். இதோ இப்போ 'வேலாயுதம்’ ஷூட்டிங் ஆறு மாசமா நடக்குது. ஆனாலும், காத்திருந்து நடிக்கிற அளவுக்கு பவர்ஃபுல் ரோல்.

''நம்புங்க... எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை!''

டைரக்டர் ராஜா கதை சொன்னப்போ, 'நம்மால் இதைப் பண்ண முடியுமா’ன்னு எனக்கு யோசனையா இருந்தது. ஆனா, ராஜாவுக்கு என் மேல் நம்பிக்கை. படத் தில் நான் ஒரு டி.வி. ஜர்னலிஸ்ட். விஜய்க்கு சமமான காட்சிகள் எனக்கு உண்டு. ஓவர் பில்ட்-அப்னு சிரிக்காதீங்க. படம் பார்த்தா உங்களுக்கே புரியும்!''  

''ஆனா, என்னதான் ஸ்கோப் உள்ள கேரக்டர்னாலும், கிளாமரில் ஹன்சிகா ஸ்கோர் பண்ணிருவாங்களே?''

''ஹன்சிகா, என் க்ளோஸ் ஃப்ரெண்ட். தமிழ் சினிமாவில் இப்போ அவங்கதான் கிளாமர்ல பின்றாங்களாமே? இந்தப் படத்தில் ஹன்சிகா அக்மார்க் கிராமத்துப் பொண்ணா வர்றாங்க. நான் சிட்டி பொண்ணு. எங்க ரெண்டு பேருக்கும் க்ளாஷ் ஆகுற மாதிரி எந்த ஸீனும் இல்லை!''  

''விஜய் என்ன சொல்றார்?''

'' 'சச்சின்’ படத்துக்கு அப்புறம் இப்ப தான் விஜய்யைப் பார்க்கிறேன். ஜாலியா அப்படியேதான் இருக்கார். இப்போ இன்னும் ஃப்ரெண்ட்லி ஆகிட்டார். மிசஸ் சங்கீதா விஜய், அவங்க வீட்டு டின்னருக்கு இன்வைட் பண்ணாங்க. அவ்ளோ அழகா இருக்காங்க சங்கீதா. அவங்க பையன் சஞ்சய், 'ஜெனி அக்கா’ன்னு கூடவே ஒட்டிக் கிட்டான். ஸ்வீட் ஃபேமிலி!''

''பாலிவுட்டில் 'அசினுக்கு நான் சீனியர்’னு நீங்க சொல்றீங்க. ஆனா, அவங்க அடுத்தடுத்து அமீர், சல்மான், ஷாரூக்னு பெரிய ஹீரோக்களுடன் நடிக்கிறாங்க. நீங்க இன்னும் சின்ன ஹீரோக்களுடன்தானே நடிச்சுட்டு இருக்கீங்க?''

'' 'அசினுக்கு நான் சீனியர்’னு எப்பவும் நான் சொன்னதே இல்லை. சொல்லப் போனா, நாங்க ரெண்டு பேரும் ஒரே நேரத்தில்தான் பாலிவுட்டில் நுழைஞ்சோம். அசின் எனக்கு நல்ல ஃப்ரெண்ட். அவங்களைச் சந்திச்சா, சினிமாவைத் தவிர நிறைய விஷயங்கள் பேசுவோம். அதே மாதிரி த்ரிஷாவும் எனக்கு நல்ல ஃப்ரெண்ட்!''

''நம்புங்க... எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை!''

''உங்களுக்கும் ரித்தேஷ் தேஷ்முக்குக்கும் கல்யாணம்னு செய்தி வந்தது. ஆனா, நீங்க எதுவும் சொல்லலையே?''

''என் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் பொறுப்பை நான் யாருக்கும் கொடுக் கலை. எப்படித்தான் இப்படி

''நம்புங்க... எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை!''

எல்லாம் பேசுறாங்கன்னு தெரியலை. காதல், கல்யாணம்னு யோசிக்கக்கூட எனக்கு நேரம் இல்லை. என் பார்ட்னரை நான் தேர்ந்தெடுத்தால், அதில் ரகசியம் என்ன இருக்கு?''  

'' 'பாய்ஸ்’ பசங்களோட இப்போ பேசுறது உண்டா?''

''சித்தார்த்தும் நானும் தெலுங்கில் அடிக்கடி பார்த்துப்போம், பேசிப்போம். பரத், தமன் டச்லதான் இருக்காங்க. அப்போ இருந்ததைவிட இப்போ எல்லாரிடமும் நல்ல மெச்சூரிட்டி. மணிகண்டன், நகுல் ரெண்டு பேருடனும் பேசவே இல்லை. இந்தப் பேட்டிக்குப் பிறகு, அவங்களும் ஹலோ சொல்வாங் கன்னு நினைக்கிறேன்!''