Published:Updated:

''அப்பா கண்ட்ரோலில் நான் இல்லை!''

நா.கதிர்வேலன்

''அப்பா கண்ட்ரோலில் நான் இல்லை!''

நா.கதிர்வேலன்

Published:Updated:
##~##

ம்மாவின் அழகு, அப்பாவின் கம்பீரம்... ஐஸ்க்ரீம் குதிரையாக வந்து அமர்கிறார் வரூ அலைஸ் வரலட்சுமி சரத்குமார்.

 ''இன்னும் ஒரே ஒரு ஷெட்யூல் பாக்கி. அடுத்த வாரம் ஸ்பெயின் போறோம். அவ்வளவுதான். 'போடா போடி’ ரெடி. தமிழ் சினிமாவில் எனக்கு அந்தப் படம் நல்ல ஓப்பனிங்கா இருக்கும். எந்தப் புதுமுகத்துக்கும் 'போடா போடி’ மாதிரி ஒரு படம் அமைஞ்சா, கேரியர் ரொம்பவே நல்லா இருக்கும். ஐ

''அப்பா கண்ட்ரோலில் நான் இல்லை!''

யம் லக்கி!''

''பொதுவா, சிம்புன்னா கொஞ்சம் பயம் இருக்கும். உங்களுக்கு எப்படி?''

''ஏன் எல்லோரும் இப்படியே கேட்கிறீங்க? எனக்குப் புரியவே இல்லை. சிம்பு செம ஸ்மார்ட். சினிமால எல்லா ஏரியாவும் தெரிஞ்சுவெச்சிருக்கார். மியூஸிக்ல ஆரம்பிச்சு கேமரா ஆங்கிள் வரைக்கும்... எல்லாம்னா எல்லாம்! 'கூலா இரு... பயப்படாதே’ன்னு ரொம்ப ஃப்ரெண்ட்லியா இருப்பார். எங்க ரெண்டு பேரோட இயல்பான கேரக்டர்கள்தான் படத்திலும் வந்திருக்கு. அதனால், பெர்ஃபெக்ட் ஃபிட்டா இருந்த துன்னு எல்லாரும் சொன்னாங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கேன். சிம்புகிட்ட எனக்கு எந்தப் புகாரும் இல்லை!''

''அப்பா சரத்குமார்தான் உங்க கால்ஷீட் பார்த்துக்கிறதா சொல்றாங்க?''

''அப்பாவுக்கு என் மேல எப்பவும் நிறைய அன்பு உண்டு. மத்தபடி, என்னை கன்ட்ரோல் பண்ணணும்னு ஒருபோதும் அவர் நினைச்சதே கிடையாது. கட்சித் தலைவர், நடிகர் சங்கத் தலைவர், இதோ இப்ப எம்.எல்.ஏ-ன்னு நாளுக்கு நாள் பிஸி ஆகிட்டே இருக்கார். இப்போ நான்தான் என் படங்களை முடிவு பண்றேன். அதில் சாயா அம்மா எனக்கு உதவுறாங்க. அப்பா ஆசீர்வாதம் எனக்கு எப்பவும் உண்டு. 'சரத் சார் பொண்ணு’னு என்கிட்ட பேசக்கூட நிறையப் பேர் பயப்படுறாங்க. 'நீயே உன் டேஸ்ட்படி படங்களை செலெக்ட் பண்ணிக்க!’னு அப்பா சொல்லிட்டார். இனி, முழுக்க முழுக்க சினிமாதான் என் ஏரியா!''  

''அப்பா கண்ட்ரோலில் நான் இல்லை!''

''உங்களைப்போல செலிபிரிட்டி வாரிசுகளான ஐஸ்வர்யா ரஜினி, ஸ்ருதி கமல் போன்றவர்களிடம் நல்ல டச் உண்டா?''

''எனக்கு அவங்க எல்லோருமே ஃப்ரெண்ட்ஸ். எங்கேயாவது பார்த்தா, கலகலன்னு நல்லா

''அப்பா கண்ட்ரோலில் நான் இல்லை!''

பேசிக்குவோம். அந்த இடத்துல எங்க பேச்சு தனியா கேட்கும். ஆனா, பெர்சனல் நெருக்கம் கிடையாது. நான் நாடகம், சினிமான்னு இருக்கேன். ஐஸ்வர்யா, சௌந்தர்யா அவங்க ஃபேமிலி வாழ்க்கையில் ரொம்ப பிஸி. ஸ்ருதியை பார்ட்டி, கல்யாணம், ஷாப்பிங் போன்ற இடங்களில் சந்தித்துப் பேசுவதோடு சரி!''

''சினிமாவில் என்ன லட்சியம் வெச்சிருக்கீங்க?''

''விஜய், விக்ரம், சூர்யான்னு ஆரம்பிச்சு எல்லா ஹீரோக்களுடனும் நடிச்சிடணும்னு ஆசை. இவங்க எல்லார்கூடவும் நடிச்சிட்டாலே, அது பெரிய ரவுண்ட்தானே!''