Published:Updated:

அண்ணனுக்கு சமீரா... தம்பிக்கு அமலா!

நா.கதிர்வேலன்

அண்ணனுக்கு சமீரா... தம்பிக்கு அமலா!

நா.கதிர்வேலன்

Published:Updated:
##~##

'' 'வேட்டை’யைப்பத்தி ரெண்டே வார்த்தையில் சொல்லணும்னா... இன்னொரு 'ஷோலே’! முழுக்கவே அந்த மூட்லதான் தினமும் ஸ்பாட்டுக்குப் போறேன்!'' - ஐ.பி.எல். மைதானம்போல எப்போதும் ஏக எனர்ஜியுடன் பேசுவது லிங்குசாமி ஸ்பெஷல். டைட்டில் தொடங்கி ஹீரோ - ஹீரோயின் ஜோடிப் பொருத்தம் வரை 'வேட்டை’யில் எக்கச்சக்கமாக லிங்கு டச்.

 ''ஆர்யா - மாதவன், சமீரா ரெட்டி - அமலா பால்னு காம்பினேஷனே அள்ளுதே! எப்படிப் பிடிச்சீங்க?''

''ஜிலுஜிலுனு... பரபரனு ஒரு அண்ணன் - தம்பி கதை. ஆர்யா... சூப்பர். துளி ஈகோவும் இல்லாத டைரக்டர்ஸ் ஆர்ட்டிஸ்ட். 'லிங்குன்னா கதை எல்லாம் கேக்காத... உடனே, ஓ.கே. சொல்லிடு. உன்னை அழகாத் தூக்கிட்டுப் போயிடுவார்’னு விஷால் சொல்லி அனுப்பி இருக்கார். தன்னை என்கிட்ட அப்படியே ஒப்படைச்சிட்டார் ஆர்யா. இதுவரைக்கும் அவர் பண்ணாத ஒரு மாஸ் ஏரியாவில் பின்னி எடுக்கிறோம். ஆரம்பத்தில் மாதவன்கிட்ட கேட்டதும், 'அண்ணன் கேரக்டர்னா எனக்கு என்ன சார் இருக்கும்?’னு தயங்கினார். 'கதை கேட்டுட்டு சொல்லுங்க’ன்னேன். கதையை முழுசாக் கேட்டுட்டு, 'ஐயையோ, மிஸ் பண்ணப் பார்த்தேனே சார்!’னு உடனே கையெழுத்து போட்டார். ஸ்பாட்ல பார்க்கும்போது 'ரன்’ல பார்த்த மேடியா இது?’ன்னு ஒவ்வொரு ஃப்ரேமிலும் ஆச்சர்யப்படுத்துறார். நிச்சயம் மாதவன் ஒரு 'குட்டி கமல்’. ஒரு ஸீன்ல வில்லன் குரூப்கிட்ட சிக்கிடுவாரு. தடதடன்னு அந்தப் பசங்க ஷட்டர்களை எல்லாம் க்ளோஸ் பண்ணுவாங்க. அப்போ 'எனக்கே ஷட்டரா?’ன்னு நக்கலும் திமிருமா மாதவன் அடிக்கிற ஒரு கமென்ட்டுக்கு, தியேட்டர்ல க்ளாப்ஸ் அள்ளும் பாருங்க... நிச்சயமா இது புது மாதவன்!

அண்ணனுக்கு சமீரா... தம்பிக்கு அமலா!

பொதுவா, என் படங்கள்ல லவ் டிராக் ஸ்பெஷலா இருக்கும்னு சொல்வீங்க... இதுல அது இன்னும் ஸ்பெஷல். இந்த நாலு பேருக்குள் நடக்கிற காதலும் அன்பும் கவிதை கலாட்டாவா இருக்கும். இது பில்ட்-அப்லாம் இல்லை. படம் பார்த்து உங்களுக்கு 10 வயசு குறையலைன்னா, என் மேல் கேஸ் போடலாம்!''

''சமீரா ரெட்டி - அமலா பால்... யார் பெஸ்ட்?''

அண்ணனுக்கு சமீரா... தம்பிக்கு அமலா!

''ஐயோ... அழகிங்க சார். என்னால் கண்டுபிடிக்க முடியலை. நீங்கதானே தேர்ட் அம்பயர். படம் பார்த்துட்டுச் சொல்லுங்க. அமலா பால் அவ்வளவு போட்டோஜெனிக். ஆர்யாவும் அமலாவும் சேர்ந்து அடிக்கிற லூட்டியில் யூனிட்டுக்கே காலேஜ் ஃபீல் வந்துரும். பொண்ணுக்கு பெரிய ரவுண்ட் இருக்கு. சமீராவை எனக்கு அறிமுகப்படுத்தியது கௌதம்மேனன். 'இன்ட்ரோ கொடுக்குறேன். ஆனா, நீங்க லவ் பண்ணிடக் கூடாது’ன்னு சத்தியம் வாங்கிட்டுதான் அறிமுகப்படுத்தினார். 'பண்ண மாட்டேன். எனக்குத்தான் அமலா பால் இருக்காங்களே!’னு நான் ஜாலியா கலாய்ச்சேன். ஆனா, இப்போ சமீராவைப் பக்கத்தில் பார்க்கும்போது... 'ஸாரி கௌதம்... கொடுத்த வாக்கைக் காப்பாத்த முடியாதுபோல’!''

அண்ணனுக்கு சமீரா... தம்பிக்கு அமலா!

''லிங்குசாமி - யுவன் கூட்டணி பெரிய ஹிட். இதில் என்ன வெச்சிருக்கீங்க?''

அண்ணனுக்கு சமீரா... தம்பிக்கு அமலா!

''பெரிய நெருக்கடியில் மாட்டிக்கிட்டு முழிக்கிறோம். 'பையா’வோட மியூஸிக்கல் ஹிட் ரெக்கார்ட் கண் முன்னாடி நின்னு பயம் காட்டுது. அதுக்காகவே இரண்டு மடங்கு வேலை பார்க்கிறோம். இன்னும்

அண்ணனுக்கு சமீரா... தம்பிக்கு அமலா!

பிரமாதமா வந்திருக்கு பாடல்கள். நீரவ் ஷா, ஆண்டனி, பிருந்தா சாரதி, ராஜீவன், நா.முத்துக்குமார்னு மனசுக்குப் பிடிச்ச டீம். தியேட்டர் மூடுக்கு செமத்தியா படம் பண்ணனும்னு எனக்கு அடங்காத ஆசை. கலகல... தபதபன்னு வேட்டையில் அந்தத் திருவிழாவை நடத்திட்டு இருக்கோம். அந்த ஃபீலுக்காக, எந்த லிமிட்டும் இல்லாமல் முழுமையா செயல்படுத்தணும்னு எங்க 'திருப்பதி பிரதர்ஸ்’ பேனர்லயே தயாரிக் கிறோம். படத்தைப்போலவே, நிஜத்திலும் 'தம்பியுடையான் படைக்கஞ்சான்’தான் என் ஃபார்முலா. என் தம்பி சந்திரபோஸ்தான் தயாரிப்பைத் தோள்ல தூக்கிச் சுமக்கிறான். ஆர்யாவுக்கு 'வேட்டை’ முடிச்சுட்டு, அடுத்து விஷாலோடு ஒரு படம் பண்றேன். ஆக... 'அவனுக்கு’ ஒரு படம், 'இவனுக்கு’ ஒரு படம். ஓ.கே-தானே!''