ஸ்பெஷல் -1
Published:Updated:

நான் தமிழ் சினிமாவை மறக்க மாட்டேன்!

நான் தமிழ் சினிமாவை மறக்க மாட்டேன்!

##~##
சூ
ப்ப்ப்ப்பர்ர்..!’ - உபேந்திரா நடித்து சமீபத்தில் வெளியான 'சூப்பர்’ கன்னடப் படத்தின்ரிசல்ட் விசாரித்தால், இதுதான் பதில்!

 10  வருடங்கள் கழித்து இயக்குநர்-கம்-நடிகர் உபேந்திராதான் இப்போது கர்நாடக சினிமாவின் சென்சேஷன். '2030-ல் கர்நாடகா எப்படி இருக்க வேண்டும்? அதற்கு இப்போது இருந்தே மக்கள் எவ்வளவு பொறுப்புடன் நடந்துகொள்ள வேண் டும்?’ என்பதுதான் படத்தின் ஒன்லைன். பட வெற்றியைத் தொடர்ந்து 'அரசியல் கட்சி துவங்கப்போகிறார்’ என்று செய்திகள் பரபரக்கும் வேளையில் பெங்களூரு கத்தரிகுப்பேயில் உள்ள வீட்டில் அவரைச் சந்தித்தேன்...

நான் தமிழ் சினிமாவை மறக்க மாட்டேன்!

''எந்த நம்பிக்கையில் படத்துக்கு 'சூப்பர்’னு பேர் வெச்சீங்க?''

''எப்பவும் அதீதத் தன்னம்பிக்கைதான் என் அடையாளம். 10 வருஷம் முன்னாடி வரை நான் இயக்கிய எல்லா படங்களுமே ஹிட். அப்புறம் தொடர்ந்து நடிக்க ஆரம்பிச்சுட்டேன். இந்த 'சூப்பர்’ கதையை எனக்குள்ளே ஊறப் போட்டு இருந்தேன். பக்காவான கதைக்குப் பரபரன்னு திரைக்கதை கிடைச் சதும் வேலையை ஆரம்பிச்சேன். படத்தின் ஒன்லைன் கேட்டதுமே தயாரிப்பாளரில் இருந்து  ஹீரோயின் நயன்தாரா வரைக்கும் சொன்ன வார்த்தை... 'சூப்பர்’. அதையே டைட்டிலா வெச்சுட்டேன்!''

''உங்க பட ஷூட்டிங் சமயத்தில்தான் நயன்தாராவுக்கு கோர்ட்டில் இருந்து சம்மன் வந்தது. எதுவும் சிக்கல் இருந்ததா?''  

''பெர்சனல் விஷயங்கள் ஒரு பக்கம் இருந் தாலும், ஷூட்டிங் ஸ்பாட்டில் நயன்தாரா ரொம்ப சின்சியரா இருந்தாங்க. என் கேரியர்ல நயன்தாரா மாதிரியான ஒரு நல்ல ஆர்ட்டிஸ்டை நான் பார்த்ததே இல்லை!''

நான் தமிழ் சினிமாவை மறக்க மாட்டேன்!

''தமிழில் 'சத்யம்’ படத்துக்கு அப்புறம் நீங்க நடிக்கவே இல்லையே... ஏன்?''

'' 'சத்யம்’ படம் ஹிட் ஆகலைன்னாலும் என் கேரக்டருக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சது. ஆனா, அதன் பிறகு தமிழில் ஒரே மாதிரி கேரக்டராவே வந்தது. அத னால் நடிக்கலை. தமிழில் நல்ல ஓபனிங் வேணும்னு இப்பவும் காத்துட்டு இருக்கேன். நான் ரஜினி ரசிகன். அதனாலேயே அவரோட 'அண்ணாமலை’ படத்தை கன்னடத்தில் ரீ-மேக் பண்ணி நடிச்சேன். மணிரத்னம், ஷங்கர், பாலா

நான் தமிழ் சினிமாவை மறக்க மாட்டேன்!

படங்கள்னா உலகத்தையே மறந்துடுவேன். நீங்க என்னை மறந்தாலும், நான் தமிழ் சினிமாவை மறக்க மாட்டேன்!''

''தமிழ் சினிமா அளவுக்கு கன்னட சினிமாவில் யாரும் பரீட்சார்த்த முயற்சிகளில் இறங்குவது இல்லையே,ஏன்?''

''தமிழ், தெலுங்கு திரை உலகை ஒப்பிடும்போது கன்னடத்தில் திறமையான இயக்குநர்களின் எண்ணிக்கை ரொம்பவே குறைவு. தமிழில் புது முயற்சிகளை  ஊக்குவிக்கும் தைரியமான தயாரிப்பாளர்களும், அதனை ஏற்றுக்கொள்ளும் புத்திசாலி ரசிகர்களும் இருக்காங்க. இப்படி நிறையப் பிரச்னைகள் இருக்கும்போது எப்படி ரிஸ்க் எடுக்க முடி யும்?  2030-ல் எல்லாமே 'சூப்பரா’ மாறும். பொறுமையா இருங்க தலைவா!''