Published:Updated:

''ஐரின் பிடிச்சவங்களுக்கு அஞ்சனா பிடிக்கும்!''

சார்லஸ்

பிரீமியம் ஸ்டோரி
##~##

'வெள்ளாவி வெச்சுத்தான் வெளுத்தாய்ங்களா?’ என்ற வியப்புப் பாட் டுக்குச் சொந்தக்காரர். தெலுங்கு, இந்தி என்று இப்போது டாப்ஸியின் ஆடுகளம் அதிகம் ஆகிவிட்டது.

''ஆடுகளத்துக்கு ஆறு விருதுகள். சந்தோஷமா?''

''இருக்காதா பின்னே? இந்த வெற்றிக்குக் காரணம், வெற்றிமாறன் சார்தான். அவரால் தான் இத்தனை விருதுகள் கிடைத்து இருக்கின்றன. தனுஷின் கடின உழைப்புக்குக் கிடைத்த அழகான அங்கீகாரம் என்றும் சொல்லலாம்!''

''ஐரின் பிடிச்சவங்களுக்கு அஞ்சனா பிடிக்கும்!''

''அடுத்த படமான 'வந்தான் வென்றான்’ படத்துக்கு எத்தனை விருதுகள் கிடைக்கும்?''

ஹா... ஹா... இது டோட்டலா வேறு களம். ஆடுகளம் ஐரின் அதிகம் பேச மாட்டாள். 'வந்தான் வென்றான்’ அஞ்சனா பேசுவா... பேசுவா... பேசிக்கிட்டே இருப்பா. ஆமா, அஞ்சனாதான் இதில் என் பேர். கோடீஸ்வர அப்பா டெல்லியில் இருந்தும், சொந்தக் காலில் நிக்கணும்னு சென்னை வந்து வேலை பார்ப்பேன். பக்கம் பக்கமா டயலாக் இருக்குன்னா பார்த்துக்கங்களேன். பட், ஐரினைப் பிடிச்சவங்களுக்கு அஞ்சனாவையும் பிடிக்கும்.

'' 'வந்தான் வென்றான்’ படத்துக்குப் பிறகு ஏன் தமிழில் எந்தப் படமும் கமிட் ஆகவில்லை?''

''இப்போது தெலுங்கில் ஒரு படம் நடித்துக்கொண்டு இருக்கிறேன். அடுத்ததாக இந்தியில் நடிக்கிறேன். இன்னும் ஆறு மாதத்துக்கு என்னிடம் தேதிகள் இல்லை. 'வந்தான் வென்றான்’ வெற்றிக்குப் பிறகு, எனக்குப் பொருத்தமான கதைகளில் நடிக்கலாம் என்றிருக்கிறேன். நான் ஒரு படத்தில் நடித்தால் அதில் என்னுடைய கேரக்டர் பேசப்பட வேண்டும் என்று நினைக்கிறேன். அப்படிப்பட்ட படங்களிலேயே நடிப்பேன்.''

''ஐரின் பிடிச்சவங்களுக்கு அஞ்சனா பிடிக்கும்!''

''தமிழ் சினிமா இண்டஸ்ட்ரிக்கு எத்தனை மார்க் போடுவீங்க?''

''ஸ்டூடன்ட்டை மார்க் போடச் சொல்றது உங்களுக்கே ஓவராத் தெரியலையா? தமிழ் சினிமாவில் கமர்ஷியல் அம்சங்கள் இருந்தாலும் யதார்த்தமும் இருக்கிறது. ஓவர் மசாலாவும் இல்லை. ஓவர் ரியலிஸமும் இல்லை. எது எது இருக்கணுமோ அது அது சரியான விகிதத்தில் இருக்கு!''

''தமிழ் கத்துக்கிட்டீங்களா?''

''சூப்பரா கத்துக்கிட்டேன். ஷூட்டிங் ஸ்பாட்ல என் பக்கத்துல உட்கார்ந்து 'கிசுகிசு’ பேசவே பயப்படுறாங்க. அந்த அளவுக்குக் கத்துக்கிட்டா போதாதா?''

''எங்கே... கொஞ்சம் தமிழ் பேசுங்க பார்ப்போம்?''

''முன்னாடி, பின்னாடி, மழை, சாப்பிட்டேன், கீழே, மேலே, அவங்க பிஸி, காதல் பண்றாங்க... போதுமா?''

''தெலுங்குக்குப் போன எல்லா நடிகைகளிடமும் கேட்பதுதான். தெலுங்கில் காட்டும் கிளாமர் ஏன் தமிழில் இல்லை?''

''ஐரின் பிடிச்சவங்களுக்கு அஞ்சனா பிடிக்கும்!''

''அங்கே கிளாமர் கொஞ்சம் தூக்கல். ஆனால், இன்டர்நெட்டைத் திறந்தாலே கிளாமர் ஆக்ட்ரஸ் டாப்ஸி என்று படங்கள் போட்டு பரபரப்பைக் கிளப்புகிறார்கள். தமிழ் சினிமாவில் கிளாமர் மட்டும் முக்கியம் இல்லை. இங்கே நடிக்கவும் வேண்டும். தமிழில் கிளாமரான கதாபாத்திரங்கள் அமைந்தால் நிச்சயம் அதில் நடிப்பேன்.''

''காதல் வந்துடுச்சா?''

''இதுவரைக்கும் இல்லை. சிம்பு, மஹத் ராகவேந்திரானு சேர்த்துக் கிசுகிசு வருது. ஆனா நம்புங்க, டாப்ஸி இப்ப வரைக்கும் சிங்கிள்தான்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு