Published:Updated:

எங்கே இருக்கீங்க? என்ன பண்றீங்க?

விகடன் டீம்

எங்கே இருக்கீங்க? என்ன பண்றீங்க?

விகடன் டீம்

Published:Updated:

''இப்போ எங்கே இருக்கீங்க? என்ன பண்றீங்க?'' என்று செலிபிரட்டிகளிடம் ச்சும்ம்மானாச்சுக்கும் போன் பண்ணி விசாரித்ததில்...

எங்கே இருக்கீங்க? என்ன பண்றீங்க?

சனுஷா: ''ஸ்கூல் இன்டர்வெல் டைம். அதனால ஃப்ரெண்ட்ஸோட உட்கார்ந்து அரட்டை அடிச்சுட்டு இருக்கேன். ப்ளஸ் டூல எகனாமிக்ஸ் குரூப் எடுத்துப் படிக்குறேன். படிப்பு கெடும்கிறதால பெரும்பாலும் ஸ்கூலுக்கு மொபைல் போனை எடுத்துட்டு வர மாட்டேன். இன்னிக்கு ஸ்கூல் முடிஞ்சதும் ஒரு ஃப்ரெண்ட்டை சந்திக்கப் போறேன். அதான் மொபைல் எடுத்துட்டு வந்தேன்!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எங்கே இருக்கீங்க? என்ன பண்றீங்க?

ஜெயம் ரவி: ''வீட்டுல பாக்ஸிங் பிராக்டீஸ் எடுத்துட்டு இருக்கேன். 'ஆதி பகவ’னுக்கு அடுத்து 'பூலோகம்’னு ஒரு படம் பண்றேன். ஜனநாதன் சாரின் அசிஸ்டென்ட் கல்யாண்தான் டைரக்டர். அதில் பாக்ஸரா நடிக்குறேன். அதனால தினம் மதன் கோச் எனக்கு மூணு மணி நேரம் பாக்ஸிங் பிராக்டீஸ் தர்றார். செமையா கை வலிக்குது நண்பா!''

எங்கே இருக்கீங்க? என்ன பண்றீங்க?

ஹன்சிகா: ''ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கேன். மூணு மாசமா ராத்திரி பகல்னு ஷூட்டிங்கில் நடிச்சதால், உடம்பு சரியில்லை. 102 டிகிரி காய்ச்சல் அடிக்குது. சரியா சாப்பிடவும் முடியலை. என் அம்மா ஒரு டாக்டர். அதனால என்னை மும்பைக்கு வரச் சொல்லி, வீட்டிலேயே ட்ரீட்மென்ட் கொடுத்துட்டு இருக்காங்க. அடுத்த வாரம் தெலுங்குப் படத்துக்கு கால்ஷீட் கொடுத்திருக்கேன். மூணு நாளில் ஹைதராபாத் கிளம்பணும். அதை நினைச்சா, டெம்பரேச்சர் எகிறுது!''

எங்கே இருக்கீங்க? என்ன பண்றீங்க?

கார்த்தி: ''துறைமுகத்துல வெயில்ல காய்ஞ்சுட்டு இருக்கேன் சார். 'சகுனி’ படத்துக்காக ஒரு ஓப்பனிங் ஸாங் ஷூட் பண்ணிட்டு இருக்காங்க. ''கந்தா காரவடை... முறுக்கு மசால்வடை... ரோட்டு மேல இட்லிக் கடை... காசு இல்லைன்னா பட்டினி கிட!’னு குத்துப் பாட்டு. இன்னும் யாருக்கும் இன்விடேஷன் கொடுக்கப் போகலை. இந்த ஷூட்டிங் முடிஞ்ச தும் எஸ்கேப் ஆகிடணும்!''

எங்கே இருக்கீங்க? என்ன பண்றீங்க?

அஞ்சலி: ''இப்போதான் ஜிம் வாசல்ல நுழையுறேன். 'எங்கேயும் எப்போதும்’ படத்துக்காக வெயிட் குறைக்கச் சொன்னாங்க. வெறும் கார்ன்ஃப்ளேக்ஸ் மட்டும்தான் காலை டிபன். ஒன்பது மணி டு பதினோரு மணி வரைக்கும் ட்ரெட் மில், தம்பிள்ஸ்னு செமையா வொர்க்  பண்ணிட்டு இருக்கேன். சீக்கிரமே சிக்குனு அஞ்சலியைப் பார்ப்பீங்க!''

எங்கே இருக்கீங்க? என்ன பண்றீங்க?

ஜி.வி. பிரகாஷ்: செல்வராகவனின் 'இரண் டாம் உலகம்’ படத்துக்காக ஸாங் ரெக்கார்டிங்கில் இருக்கேன். படத்துல மொத்தம் ஆறு பாட்டு. ரெண்டு பாட்டை தனுஷ் பாடியிருக்கார். ஆறு பாட்டையுமே செல்வராகவனும், தனுஷ§ம் சேர்ந்து எழுதியிருக்காங்க. 'இன்னும் பதினஞ்சு நாள் ஷூட்டிங் இருக்கு’ன்னு செல்வா சொன்னார். அதுக்கடுத்து, ரீ-ரிக்கார்டிங் ஆரம்பிக்கணும்!''

எங்கே இருக்கீங்க? என்ன பண்றீங்க?

விஷால்: ''சி.சி.எல். ஸ்டார் கிரிக்கெட் ஆட விசாகப்பட்டினம் போகணும். அதனால ஏர்போர்ட்டுக்கு கார்ல போய்ட்டு இருக்கேன். இப்போதான் 'அவன் இவன்’ ஃபர்ஸ்ட் காப்பி ரெடி ஆச்சு. படம் பார்த்தேன். 'நம்ம வாழ்க்கைக்கு இப்படி ஒரு படம் போதும்’னு திருப்தியா இருந்துச்சு. மாறுகண் மாதிரி கஷ்டப்பட்டு நடிச்சதுக்கு நல்ல ரிசல்ட் கிடைக்கும் சார்!''

எங்கே இருக்கீங்க? என்ன பண்றீங்க?

வெற்றிமாறன்: ''வளசரவாக்கத்துல சும்மாதான் உட்கார்ந்திருக்கேன் சார். அடுத்த படத்துக்காக ஆபீஸ் போட்டாச்சு. துரைதயாநிதி புரொடக்ஷன். ஜி.வி. பிரகாஷ், வேல்ராஜ், கிஷோர்னு ஆடுகளம் டீம் அப்படியே நடிக்குறாங்க. ஹீரோ, ஹீரோயினை இன்னும் கமிட் பண்ணலை. டிஸ்கஷன், புத்தகம் படிக்குறது, படங்கள் பார்க்குறதுன்னு போய்ட்டு இருக்கு. சரியான டைட்டிலை யோசிச்சுகிட்டே இருக்கேன். சிக்க மாட்டேங்குது. ஏதாவது கேச்சிங்கான டைட்டில் வெச்சிருக்கீங்களா?''

எங்கே இருக்கீங்க? என்ன பண்றீங்க?

பாவனா: 'டாக்டர் லவ்’ங்கிற மலையாளப் படத்தில் நடிச்சிட்டு இருக்கேன். நடுவில் மூணு நாள் வீவு கிடைச்சுது. உடனே, என் சொந்த ஊரான திருச்சூருக்குக் கிளம்பி வந்துட்டேன். ஃப்ரெண்ட்ஸ், டி.வி.டி, புட்டு, வாழைப்பழம்னு செமையா என்ஜாய் பண்ணினேன். லீவு முடிஞ்சு  ஷூட்டிங் ஆரம்பிக்கப்போகுது. அதனால என்னோட டிரெஸ், மேக்கப் அயிட்டம்களை பேக் பண்ணிட்டு இருக்கேன்!''

எங்கே இருக்கீங்க? என்ன பண்றீங்க?

மிர்ச்சி சிவா: ''அடுத்தது நானா? விஷால் பக்கத்துலதான் இருக்கேன். நம்ம இல்லாம சி.சி.எல். கிளம்பிப் போயிருவாங்களா?  மிர்ச்சி ஆபீஸ்ல இருந்து வந்து விஷாலோட ஜாயின் பண்ணிட்டேன். விசாகப்பட்டினத்தில் எங்கே பிரியாணி நல்லா இருக்கும்னு விசாரிச்சாச்சு தலைவா... போய் நாம யாருன்னு காட்டணும்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism