7 1/2, காமெடி காலனி!

லூஸு பையன்

அன்புதான் அடுத்த சி.எம்மு! எதிர்க்க எவனுக்கிருக்கு தம்மு?

தீ  பாவளியும் வந்தாச்சு..!

மக்களுக்கு ஏதாவது திகுதிகு போனஸ் தந்தாகணுமே!

‘‘ராமர் பாலத்துல ஆரம்பிச்சு, பா.விஜய் ஃபங்ஷன் வரைக்கும் கலைஞர் காட்டுகாட்டுனு காட்றார். நாம ஃபெஸ்டிவல் டைம்லயாவது பிரிச்சு மேயலைன்னா, வேலைக்காவாது!’’ என அதிரடி வெடிக்குரெடி யாகிறது அரசியல் அரங்கம். இதோ... போட்டுக் கொளுத்துது செம சர்ப்ரைஸ் சந்திப்புகள்..!

போயஸ் கார்டன் - வேதா இல்லம்

‘‘யோவ்... திருவண்ணாமலை அன்னமடம் கணக்கா எவனோ ஒருத்தன் உள்ளே பூந்துட்டான், நீங்கள்லாம் என்ன பண்றீங்க? நான்சென்ஸ்!’’ - பம்மி நிற்கும் செக்யூரிட்டிகளைக் கும்மிக்கொண்டு இருக்கிறார் சசிகலா. அப்போது கேட்டை ஓர் உருவம் திறக்கிறது. மொத்த செக்யூரிட்டிகளும் அவரைக் கொத்தாக அமுக்க, ‘‘ஏய்... எனக்குக் கருங்காலியா இருந்து காவு

வாங்கவும் தெரியும்... விருந்தாளியா வந்து பூவு தரவும் தெரியும். நீங்க போன் பண்ணதாலதான் வந்தேன். அக்காங்..!’’ என அலறல் பன்ச் அடிக்கிறார். ‘‘ஆஹா... விஜயகாந்த்து! ஏய்... விடுங்கப்பா அவரை!’’ என சசிகலா ஆர்டர் போட, செக்யூரிட்டி கள் சிதறி விலகுகிறார்கள்.

சசி: ‘‘வாங்க விஜி! அக்கா உங்களுக்காகத்தான் வெயிட் டிங். ஸ்டார்ட் மியூஸிக்!’’ என்ற தும், வளர்மதியின் குபீர் வரவேற்பு குலவைச் சத்தம்.

ஜெ: ‘‘வெல்கம் மிஸ்டர் விஜய காந்த். இன்னிலேர்ந்து தமிழக அரசியல் வரலாற்றுல புது யுகம் தொடங்குது...’’

ஓ.பன்னீர்: ‘‘இந்த ஸீனைப் பார்க்கும்போதே, தவுசன்வாலா வெடிக்குதும்மா. அந்தகருணாநிதி, டீக்கடைல ஆரம்பிச்சு டி.வி. சேனல் வரைக்கும் ஆக்கிரமிச்சு ஆட்டையப் போட்டுக்கிருக்காரு. அத்வானிலேருந்து ‘ஓ...பக்கங்கள்’ வரைக்கும் எப்பிடிச் சுத்துனாலும் கலைஞரை வெச்சுத்தான் பரபரப்பு கிளம்புது. பூரா சினிமாக்காரய்ங்களும் மண்டி போட்டு விருது வாங்குறாய்ங்க. நம்ம சைடுதான் இப்போ டாக்கே இல்லை!’’

செங்கோட்டையன்: ‘‘ஆமாம்மா... நம்ம போஸு மாதிரி பொடலங்கா பசங்க, தொப்பியை வீசிக் கிளப்புற குட்டிச் சலசலப்புகளைத் தவிர, முட்டித் தூக்குற மாதிரி ஒண்ணும் பண்ண முடியலியே! இந்த டைம்ல நீங்களும் விஜயகாந்த்தும் கையைக் கோத்து ஒரே மேடைல நின்னா, என்ன பண்றதுன்னு புரியாம எதிராளிங்க பேய்த்தனமா முழிப்பானுங்க...’’

ஜெ: ‘‘ஆமா! இந்த ராமதாஸ் தேர்தலுக்குத் தேர்தல் மாம்பழத்தை மாத்தி மாத்தித் தந்து கேம் ஆடுறாரு. வைகோ மைக்கைப் பாத்தா மடமடன்னு பேசுறாரே தவிர, ஃபார்ம் போன சேவாக் மாதிரி, மண்டையைத் தடவிட்டு உட்கார்ற லெவலுக்கு ஆகிட்டாரு. இப்போ நாம சேர்ந்து அடிச்சாதான் உண்டு.’’

விஜய: ‘‘நான் தனியாதான் நிப்பேன். கூட்டணின்னு காலிங் பெல் அடிச்சா, தமிழனோட நலன் கருதி கதவைத் திறக்கலாமான்னு கைலி கட்டிட்டு யோசிப்பேன்.’’

ராமு: ‘‘தலைவரே... இப்பிடியே கண்ணு செவக்க பேட்டி தர்றது, கூட்டம் போட்டு காட்டம் காட்டுறது, மேக்கப்பை ஏத்திட்டு இத்துப்போன ஸ்க்ரிப்டோட ஷூட்டிங் போறதுன்னு இருந்தா எப்பிடி? ஏதாவது புதுசா வியூகம் போட்டு புயலைக் கிளப்பியே ஆகணும். அம்மா கூட்டை அப்பிடியே டிக் பண்ணுங்க கேப்டன்!’’

ஓ.பன்னீர்: ‘‘தீபாவளியும் அதுவுமா நாம போடுற குண்டு நாட்டையே அலறடிக்கணும். தீபாவளி அன்னிக்குக் காலையில ஜெயா டி.வி-ல ‘அம்மா அருளுரை’யை விஜயகாந்த் வழங்கட்டும். சமையல் குறிப்பை பிரேமலதா வழங்கட்டும். ‘ஜாக்பாட்’ குஷ்புவோட சேர்ந்து பண்ருட்டியார் பின்னட்டும்... ஜனங்க குஷியாகிருவாங்க!’’

ராமு(மெதுவாக விஜயகாந்த்திடம்): ‘‘அம்மா அருளுரையா... ஆஹா! தலைவரே உஷாரு!’’

விஜய: ‘‘இதோ பாருங்க. எனக்கு வேட்டு வெச்சு போட்டு வாங்கவும் தெரியும்... கூட்டு வெச்சு சீட்டு வாங்கவும் தெரியும்!’’

செங்கோ(மெதுவாக ஜெ-விடம்): ‘‘யம்மா! பார்ட்டி பகுமானமா பன்ச் அடிக்கிறாப்ல... விட்டுப் பிடிங்க.’’

ஜெ: ‘‘பாருங்க விஜி... கருணாநிதி மாதிரி நான் கஞ்சம் கிடையாது. உங்க கட்சி வண்டிக எல்லாத்துக்கும் ஃப்ரீ பெட்ரோல் கூப்பன் குடுத்துருவோம். மொபைல் பில் செட்டில் பண்றோம். போற வர்ற இடத்துல டீ, காபி, டிபன் சாப்பிட்டீங்கன்னா பில்லு குடுத்துருங்க. உங்களுக்கு ஃபுல் மீட்டிங் சார்ட்டை தலைமைக் கழகம் தயாரிச்சுத் தரும். ராதாரவி, குண்டுகல்யாணம்லாம் கூட வருவாங்க. நான் கலந்துக்குற மீட்டிங்ல, கால் மணி நேரம் கலை நிகழ்ச்சிகள் நடத்த பர்மிஷன் தர்றேன். அதுக்குத் தனி பேமென்ட். ஓ.கே-வா?’’

ராமு: ‘‘இல்ல... சீட்டு..?’’

செங்கோ: ‘‘அதெல்லாம் பார்த்துக்கலாம் பாஸு! எப்பிடியும் வைகோட்ட இருந்து ரெண்டு மூணைப் பிடுங்கிரலாம். இப்போ உடனடியா ‘அரசாங்கம்’ படத்துல, ‘டேய்... இப்ப நான் அம்மா ஆளு, எங்கிட்ட ஆட்டாத வாலு!’ன்னு பல பன்ச்சுகளைச் சேர்த்துருங்க. முக்கியமா

நம்ம பரம்பரை ஃபார்முலா தெரியும்ல...’’ எனக் கண்ணடிக்க, நாலைந்து பேர் சேர்ந்து விஜயகாந்த்தை, ஜெயலலிதாவின் காலில் விழவைக்க, அமுக்குகிறார்கள். டென்ஷனாகிற விஜயகாந்த் ‘அபுஹாய்... அபுஹாய்’ என முண்டிச் சுழன்று, ‘‘ஏய்... நான்தான் நாளைக்கு சி.எம்மு!’’ எனக் கொந்தளிக்கிறார்.

ஜெ: ‘‘என்னது... சி.எம்மா? என்ன, ராவா குடிச்சுட்டு வந்தீங்களா? ரப்பிஷ்!’’ என டென்ஷனாக, ‘‘ஏய்... ஏய்...’’ என ஏரியா உருவேறுகிறது. யாரோ திடுதிப்பென்று வெங்காய வெடியை வீச, அத்தனை பேரும் அரண்டு தெறிக்கிறார்கள்.

கேளம்பாக்கம் பண்ணை வீடு

‘‘ஓம் சாந்தி... ஓம் சாந்தி... ஹரே பாபா!’’ - அடித்த டை வெளுத்து, ஆழ்நிலைத் தியானத்துக்கான ஆன் தி வே டிராவலில் இருக்கிறார் ரஜினி.

ஷக்தி: ‘‘தலைவா... நாம விருது விழால போட்ட ராமர் வெடி, ரவுசுதான். ஆனா, அதை அப்பிடியே பிக்கப் பண்ணி பெருசா கொளுத்தாம மறுபடி மெடிடேஷன்ல குந்திட்டீங்களே, பாஸு! ஓம் சாந்தி ஓம் பிரிவியூக்கு ஷாரூக்கான் கால் பண்ணாப்ல...’’ என்கிறபோதே, ‘‘அதெல்லாம் கிடக்கட்டும் தம்பி. தீபாவளிக்கு நம்ம தைலாபுரம் தோட்டத்துக்கு வந்துருங்க... எண்ணெய் மஸாஜ்ல ஆரம்பிச்சு, ஃபுல் விருந்து இருக்கு...’’ என ஓர் அதட்டல் குரலுடன் ரண்டக்க ரண்டக்கவென வந்து நிற்கிறார் ராமதாஸ். பக்கத்தில் அன்புமணி, கோ.க.மணிகள்.

ரஜினி(சுதாரித்து): ‘‘வாங்க அய்யாஜி... இதோட சீரியஸ்னெஸ் இங்கே இருக்கிறவங்களுக்குத் தெரியலை. நார்த் இண்டியன் பீப்பிள்ஸுக்கு இதோட பவர் தெரியும். கொளுத்திவிட்டு குளிர்காயப் பார்க்குறாங்க. அன்புமணிக்கு டெல்லி லீடர்ஸையெல்லாம் தெரியும். உட்கார்ந்து பேச லாம்!’’

கோ.க: ‘‘முதல்ல நாம பேசலாம் பாஸு! அய்யா பேச்சைக் கேட்டு நீங்க எப்போ தம் அடிக்கிறதைவிட்டீங்களோ, அப்பவே நம்மாளாகிட்டீங்க. இதான் சரியான டைமு... தம் கட்டி வந்தீங்கன்னா மொத்தமா மொத்திரலாம்!’’

அன்புமணி: ‘‘ஆமா ரஜினி... நீங்களும் கலைஞருக்காக கட்டை விரலைத் தூக்கி வாய்ஸ் தந்தீங்க. பி.ஜே.பி - ஜெயலலிதா கூட்டுக்கு மொட் டைத் தலை வாய்ஸ் தந்தீங்க. அவங்கள்லாம் உங்களைக் கறிவேப்பிலை மாதிரி கடாசிருவாங்க. ஆனா, டாடி அப்பிடி இல்ல... பக்கா!’’

ரஜினி(பதறி): ‘‘நைஜி... அய்யாஜியை எனக்குப் பிடிக்கும். ரெஸ்பெக்டிவ் டமில் லீடர். ஆனா, வாய்ஸ்... எனக்கு த்ரோட் இன்ஃபெக்ஷன்!’’

ராம: ‘‘அய்ய தம்பி... பாபா பொட்டியைத் தூக்கினதையெல்லாம் மறந்துரு. உன்னை உக்கார வெச்சு அழகு பார்க்க ஆசைப்படுறேன் தம்பி!’’ - எனத் ‘தளபதி’ பட ஓம்புரி ரேஞ்சில் சொல்ல, ‘‘வேற லெவல்ல சிக்கிட்டமே...’’ என வெல வெலக்கிறார் ரஜினி.

ரஜினி: ‘‘அய்யாசாப்... நெக்ஸ்ட் ஃபிலிம் கதை சொல்ல வெயிட் பண்றாங்க. மங்கிகுல்லா மாறுவேஷத்துல காளிகாம்பாள் கோயிலுக்குப் போயிட்டு... பெங்களூரு, ஹைட்ரபாட்னுதியேட்டர்ல நல்ல படம் பாத்துக் கதை சுடணும்.’’

கோ.க: ‘‘ஐயைய... பத்து வருஷமா இதைத்தானே பண்ணிட்டு இருக்கீங்க! அய்யா

வழிகாட்டுதல்ல ரூட் மாறுங்க. நில மீட்பு, மணல் கொள்ளை, தமிழன் அடையாள மீட்டெடுப்புன்னு பல போராட்டங்கள் இருக்கு. ‘தோ பார்... அன்புதான் அடுத்த சி.எம்மு, எதிர்க்க எவனுக்கிருக்கு இங்க தம்மு!’ன்னு அடிச்சுப் பிரிச்சிரலாம்!’’

ராம: ‘‘அப்பிடியே மக்கள் டி.வி-ல ‘ஸ்டைலா பேசு, வெள்ளிக் காசு’ன்னு ஒரு நிகழ்ச்சி பண்ணு. நம்ம பையன்தான அடுத்த முதல்வர். உன்னை டி.ஆர். ஸ்டைல்ல சிறுசேமிப்பு ஆலோசனைக் குழுத் துணைத் தலைவராப் போட்டுரலாம். கவலைப்படாத!’’

கோ.க: ‘‘நீங்க மட்டும் இங்க வந்துட்டா, விஜயகாந்த்தோட இடமெல்லாம் காலி. வேணும்னா ஒரு அனுதாபம் கிரியேட் பண்ண, ராகவேந்திரா மண்டபத்தை இடிக்க நோட்டீஸ் அனுப்பிருவோம்!’’

ஷக்தி (மெதுவாக): ‘‘ஆஹா... தலைவா! ஆகப் பெரிய ஆப்போட வந்துருக்காய்ங்க. பேசாம ஜப்பான் பக்கமா போய் அடுத்த படத்தைப் பண்ணுவோம். சிக்கிராதீங்க...’’ எனக் கிசுகிசுக்க, தாடை தடவி தப்பிக்க வழி தேடுகிறார் ரஜினி.

அன்பு: ‘‘அப்பா ஐடியா... சினிமாலதான் நமக்கு ஸ்டிராங்கான இடம் இல்ல. பேசாம ரஜினியையும் திருமாவையும் போட்டு டபுள் ஹீரோ சப்ஜெக்ட் படம் ஒண்ணு தயாரிச்சிருவோமா. மன்சூரலிகான் டைரக்ட் பண்ணட்டும். கட்சிக் கொள்கைகளை ஜப்பான் வரைக்கும் பரப்பிரலாம்...’’ என்றதும், ராமதாஸ் பெருமையோடு பெருங்குரலில் சிரிக்க, ரஜினி மொட்டைமாடிக்கு ஓடி பின்னால் ரெடியாக நிற்கும் வைக்கோல் லாரியில் குதித்துத் தப்புகிறார்.

கோபாலபுரம் கலைஞர் வீடு

‘‘தீபாவளி நீதானே, ஓட்ட வாளி நான்தானே, வஞ்சம் என்னைச் சுட்டுருச்சே சுட்டுருச்சே, நெஞ்சம் இப்போ பட்டுருச்சே பட்டுருச்சே...’’   - என குத்துப் பாட்டையே சுதி பிசகி சோகக் குரலில் பாடுகிறது ஒரு குரல். தாய் காவியத்துக்கு வசனம் எழுதிக்கொண்டு இருக்கிற கலைஞர் திரும்பிப் பார்க்க, வாசலில் வைகோ.

கலைஞர்: ‘‘வாடா தம்பி... எதிர்பார்த்தேனடா உன்னை. கோட்டானின் தோட்டத்தில் கூவப்போன என் குயிலே... தண்டவாளம் மாறி வண்ட வாளம் ஏறிய தமிழ் மயிலே, வாடா தம்பி!’’

வைகோ(சத்தமாக அழுது குமித்து): அண்ணே... உங்கள் வழி நடந்த கால்கள், நடைப் பயணத்தில் நாளரு கல், நாளரு முள் தைத்த இந்தக் கால்கள், இன்று சித்தம் கலங்கிப் பித்த வெடிப்பில் அலைகிறதே அண்ணே!’’

கலைஞர்: ‘‘தெரியும்யா... நீ வருவாயெனத் தெரிந்துதான் உனக்காகப் பல அஸைன்மென்ட்டுகள் தயாராக உள்ளன. முதலில், இந்தா புத்தாடை!’’ எனக் கை தட்ட, உள்ளேயிருந்து ஸ்டாலின் மஞ்ச மஞ்சேர் சட்டையை உதறியபடி ஓடி வருகிறார். பின்னால் அழகிரி.

ஸ்டாலின் (மெதுவாக): ‘‘அப்பா... முதல் போணியா தீபாவளிக்கு கலைஞர் டி.வி-ல காமெடி புரொகிராம் எதையாவது நடத்தவிட்ருவோமா?’’

அழகிரி: ‘‘வாங்க வைகோ... ஏதோ நடந்தது நடந்துபோச்சு! டோன்ட் ஒர்ரி..! முதல்ல, ‘ஜெயலலிதா போயஸ் கார்டன்ல அஞ்சு கிலோ ஹெராயின் பதுக்கியிருக்கார். நான் கண்ணால பார்த்தேன்’னு ஒரு பேட்டி குடுத்துருங்க... உங்க சைடுல அஞ்சு சுமோ அனுப்பினா போதும்ல?’’

வைகோ(மெதுவாக): ‘‘அச்சச்சோ! மறுபடி கறுப்புத் துண்டை முறுக்கிட்டு கருவக்காட்ல நின்னு கலைஞர் டி.வி-க்குப் பேச வெச்சிருவாங்க போலிருக்கே..! (சத்தமாக) இல்லண்ணே... முதல்ல என் தலைமையில் தீபாவளி நடைப் பயணம் கிளம்புவோம். பெரிய வரவேற்பு கிடைக்கும்.’’

ஸ்டாலின்(மெதுவாக): ‘‘பல திட்டங்களோடதான் வந்திருக்காப்ல... (சத்தமாக) ஏங்க... நாங்க சொல்றதை முதல்ல கேளுங்க. பால்வளத் துறை சொஸைட்டில ஏதாவது கௌரவ போஸ்ட் போட்டுத் தர்றோம்.’’

கலைஞர்: ‘‘இப்போதைக்கு தாய் காவியம் படத்துக்கு காப்பி ரைட்டராக இருடா... அது உனக்குச் சரித்திர முக்கியத் துவம் தரும்.’’

வைகோ: ‘‘என்னது... காப்பி ரைட்டரா..?’’

அழகிரி: ‘‘ஆமா! தாயகத்தை எதுக்கு சும்மா போட்டு வெச்சிருக்கீங்க. கலைஞர் டி.வி-க்கு ரெண்டு எடிட் சூட் அங்கே போட்ருவோம், என்னா?’’

துரை: ‘‘டோனி - தீபிகா லவ் பண்ணிட்டுத் திரியுதுகளாம்ல... அதைப் பத்தி ஒரு ஸ்பீச் குடுங்க. விஜய்காந்த் மாதிரி மிமிக்ரி பண்ணுங்க. முதல் எழுத்து சொல்றேன்... பாட்டுக்குப் பாட்டு பாடுங்க பார்ப்போம்... உங்களுக்கான மணி ‘உ’வில் ஒலிக்கிறது. குறில் உ அல்ல ஊ...’’ என சரமாரியாய் தாண்டவமாட, ‘‘வந்துட்டாரா... இந்தா வர்றேன், வர்றேன்..’’ என உடம்பு முழுக்க டென் தவுசன்வாலாவைச் சுற்றிக்கொண்டு ஓடி வருகிறார் எல்.ஜி. அதைக் கண்டு, ‘‘திரும்பத் திரும்ப வர்ற நீ... திரும்பத் திரும்ப வர்ற நீ’’ என மஞ்சள் சட்டையை விசிறியடித்தபடி எகிறுகிறார் வைகோ!