‘‘அவ சிரிச்சா நமக்குப் பூக்கணும்... அவ அழுதா நமக்குத் துடிக்கணும்!’’

இளைய தலைமுறை இயக்குநர்களில் கௌதம் மிஸ்டர் ஸ்டைலிஷ்!

‘வாரணம் ஆயிரம்’ படப் பணிகளில் தீவிரமாக இருப்பவருடன் உரையாடியதில் இருந்து...

‘‘ஒரு படைப்பாளனோட மனசே எக்கச்சக்கமா ட்விஸ்ட் அடிக்கிற சுவாரஸ்யமான திரைக்கதை போலத்தான். கொஞ்சம் விட்டுட்டோம்னா, மனசு வெளியே குதிச்சு வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சுடும். இங்கே உழைப்புதான் மந்திரம். ஒற்றைக் கால் கொக்கு மாதிரி நின்னு, சரியாக ஒரு ஸ்க்ரிப்ட் மாட்டும்போது ‘டக்’னு கொத்திட்டு றெக்கையை விரிச்சுப் பறந்துடணும். அப்படிப் பிடிச்ச ஸ்க்ரிப்ட், ‘வாரணம் ஆயிரம்’.

ஆண்டாள் திருப்பாவையில் இந்த வரி வருது. ஆயிரம் யானைகள் புடை சூழ வருபவன்னு பொருள். ஒருவனின் நினைவுகளையே பயணம் மாதிரி படமாக்குகிறேன்.

இந்தப் படத்தில் சூர்யா இருக்கார், ஷமீரா ரெட்டி இருக்காங்க. அவங் களோட நானும், நீங்களும், நாம எல்லோருமே இருப்போம். இப்படி ஒரு வாழ்க்கை இதுக்கு முன்னாடி இந்தப் பார் வையோடு சொல்லப் பட்டு இருக்குமான்னு தெரியலை. 30 வயசுக் காரனாவும், 70 வயதுக்காரராகவும் நடிக்கிறார் சூர்யா!’’

‘ ‘எப்படியிருக்கார் சூர்யா?’’

‘‘சூர்யா என்னிக்கும் நம்பர் விளையாட்டுக்களில் நம்பிக்கை வைக்க மாட்டார். எப்படியாவது

வித்தியாசம் காட்ட முடியுமான்னு முயற்சி பண்ணிட்டே இருப்பார். அவரோடு வொர்க் பண்றது நல்ல அனுபவமா இருக்கும்.

‘காக்க காக்க’வுக்குப் பிறகு இப்போதான் நல்ல ஸ்க்ரிப்ட் அமைஞ்சது. சூர்யாவிடம் போனேன். கதை கேட் டவர், கண் கலங்கிட்டார். ‘ஒரு வருஷம் காத்திருந்தது வேஸ்ட் ஆகிடுமோனு நினைச்சேன். ஆனா, அதுக்கு இப்போ அர்த்தம் கிடைச்சிரும். ரொம்ப தேங்க்ஸ்!’னு சொன்னார். இந்தக் கதையை வேறு எந்த ஹீரோ விடம் சொன்னாலும், ரொம்பத் தயங்கி இருப்பாங்க. கதையோட் டத்தைச் சரியாப் புரிஞ்சுக்கிற தன்மை சூர்யாவிடம் அதிகமாவே இருக்கு. இதே புரிதல் உள்ள ஆஸ்கார் ரவிச்சந்திரனுக்கும் என் நன்றி!’’

‘‘உங்கள் படங்கள் எப்பவுமே ஏன் ‘ஏ’ சென்டரை மட்டுமே குறிவெச்சு வருது?’’

‘‘என் ஸ்டைலிஷான மேக்கிங்கை வெச்சு அப்படியரு கேள்வி வருது. ‘காக்க காக்க’ பெரிய ஹிட். கடைசி தியேட்டர் வரைக்கும் கொண்டாடிப் பார்த்தாங்களே! ஒருவேளை, நான் வளர்ந்த சூழ்நிலை என் படங்களில் இருந்தால், தெரிந்தால், அது தவிர்க்க முடியாதது!’’

‘‘ஹீரோயின் தேர்வில் தொடர்ந்து ஜெயிக்கிறீங்களே..! இப்போ ஷமீரா ரெட்டி எப்படி?’’

‘‘ஒருவர் அல்ல, இருவர் அல்ல... மூன்று பெண்கள் வர்றாங்க. ஷமீரா, திவ்யா தவிர, இன்னொரு முக்கியமான கேரக்டருக்கு தபு என் சாய்ஸ். ஒரு கேரக்டர் யோசிக்கும்போது, அது நம்ம மனசுக்குப் பிடிச்ச சாயலுடன் அமையணும். அவ சிரிச்சா நமக்குப் பூக்கணும். அவ அழுதா நமக்குத் துடிக்கணும்.

இப்போ இண்டஸ்ட்ரிக்கு வருகிற பெண்கள், சென்ஸிபிளா இருப்பது சந்தோஷமா இருக்கு. உணர்வுபூர்வமான கதைக்கு எந்தவிதத்தில் ஒத்துழைப்பு தரணுமோ, அவ்வளவு அற்புதம் ஷமீரா. ஆயிரம் யானைகளோடு வந்து மீட்டுப் போகிற இளைஞனைக் கனவு காணுகிற பொண்ணு. வேடிக்கையும், விநோதமும், காதலும் நிறைந்த வாழ்க்கையைத் தரிசிக்க யாருக்குத்தான் இஷ்டம் இருக்காது!’’

‘‘புதுசா வந்திருக்கிற படங்கள், டைரக்டர்களைக் கவனிக்கிறீங்களா?’’

‘‘நல்லா! ‘பருத்திவீரன்’ எனக்குப் பிடிச்சுது. இப்படியெல்லாம் ரத்தமும் சதையுமா வாழ்க்கையைப் படமாக்க நம்மிடம் பாலா, அமீர், விஷ்ணுவர்தன், சேரன், ஹரி, முருக தாஸ், லிங்குசாமி, தரணின்னு நிறைய நல்ல கிரியேட்டர்ஸ் இருக்காங்க. அவங்களை நம்பணும். மொத்தக் கதை, வசனத்தையும் ஒப்பிச்ச பிறகு தான் அட்வான்ஸ் வாங்குவேன்னு அடம்பிடிக்கக் கூடாது.

கதையைக் கேட்டுட்டு, ‘எல்லாம் சரி. எனக்குன்னு பத்து பாயின்ட்ஸ் இருக்கு. அதைத் தவிர்க்க முடியாது’ன்னு சொல்றதை ஹீரோக்கள் முதலில் நிறுத்தணும். இப்படி ஆளுக்காள் கட்டுப்படுத்தினால் எப்படி வரும் நல்ல சினிமா?

இமேஜ் இரண்டாம்பட்சம்தான். ‘சிவாஜி’ பார்த்தேன். ஷங்கர் இவ்வளவு ரிஸ்க் எடுக்கணுமா? இவ்வளவு பெரிய பிரம்மாண்டத்துக்கு என்ன அவசியம் இருக்கு அந்தக் கதையில்? கொஞ்சம் பிசகியிருந்தா, அதை வாங்கினவங்க நிலைமை தெருக்கோடிக்குப் போயிருக்குமே! அதுவும் சாலமன் பாப்பையா ‘வாங்க, பழகலாம்!’னு கூப்பிடுகிறாரே, அராஜகம்!’’

‘‘உங்களுக்கும் ஹாரிஸ் ஜெயராஜுக்கும் அப்படி என்ன ஒரு மேஜிக் அது?’’

‘‘ஆரம்பத்திலேயே அமைஞ்சிருச்சு. ஹாரிஸோட எங்கேயாவது கண்காணாமல் போயிடுவோம். முழுக் கதையையும் ஒரு சம்பவம் விடாமல் சொல்லிடுவேன். பாட்டு ஆரம்பிக்கிற இடத்துக்கான சூழ்நிலையை வர்ணிப்பேன். ‘இதோ, இந்த இடம்தான்... இந்த வார்த்தையைச் சொன்னதும் பாட்டு பறக்குது’ன்னு சொல்லிட்டு, என் வேலையைப் பார்க்கக் கிளம்பிடுவேன். திரும்பி வந்தால் முத்து முத்தா டியூன் போட்டுவெச்சிருப்பார். ‘வாரணம் ஆயிரம்’லயும் அப்படிப் பரவச கணங்கள் நிச்சயமா, நிறையவே இருக்கு!’’

\ நா.கதிர்வேலன்