‘‘அண்ணன் உடையான் படத்துக்கு அஞ்சான்!’’

மு  ன்னே மாதிரியில்லே ‘ஜெயம்’ ரவி!

‘‘ஹாய் சார். இன்னிக்கு கொஞ்சம் அதிகமா வொர்க்-அவுட் பண்ணேன்..’’- ஆர்ம்ஸ் கைகளை முறுக்கிக் காட்டுகிறார். அடிக்கடி சிணுங்கும் மொபைலை அணைத்து, ‘‘நீங்க வேற... ஃப்ரெண்ட்ஸ்தான் சார்!’’ என முகம் பார்த்துச் சிரிக்கிறார்.

கூச்சமும் பதற்றமும் குறைந்து அழகும் தெளிவும் கூடியிருக்கிறது பையனிடம்! அண்ணன் இயக்கத்தில் ‘சந்தோஷ் சுப்ரமணியம்’ செய்கிறவருக்கு ஜனநாதன், அமீர் என அடுத்தடுத்து அமைவதெல்லாம் அதிரடியான கூட்டணி.

‘‘‘சந்தோஷ் சுப்ரமணியம்’ படத்தில் நடிக்கிறது சிரமமே இல்லை சார். படத்தில் நடிகனாக இருக்க வேண்டிய அவசியமே இல்லை. இயல்பான மனிதனாக இருந்தாலே போதும். இந்தப் படத்தைப் பார்க்கிற யாருக்குமே, முடிஞ்சா நாமளும் அழகாக ஒரு ‘லவ்’வை ஆரம்பிச்சு வைப்போமேனு தோணும். ஓடித் துரத்துற வெறி இல்லாமல், மிக அழகான ஒரு காதல். உணர்வுகளும்,

அன்பைப் பகிர்தலும் படம் முழுக்க, தெளிந்த நீரோடை மாதிரி போய்க்கிட்டு இருக்கு. தந்தை பிள்ளை உறவும், காதலும் இது மாதிரி ஆரவாரம் இல்லாம இதுக்கு முன்னே சொல்லப்பட்டிருக்குமானு யோசிச்சுதான் பார்க்கணும்!’’

‘‘அண்ணன் கூட சேர்ந்து ‘ஹிட்’ கொடுக்கிறது சந்தோஷம்தான். ஆனால், ‘மத்த டைரக்டர்களோட இந்த வெற்றி அலைவரிசை கம்மியா இருக்கே?’’

‘‘அண்ணன் என் மீது செலுத்து வது அதிகப்படியான அக்கறை. எனக்கு எது பொருந்தும், இவன் எதுக்கு, எப்படி ரியாக்ட் பண்ணு வான்னு அவருக்கு என்னைப் பத்தி எல்லாமே தெரியும். அதனால... அண்ணன் உடையான் படத்துக்கு அஞ்சான்! அதுக்காக மத்தவங்களை யும் குறை சொல்ல முடியாது. இப்பப் பாருங்க... ஜனநாதன், அமீர்னு களத்தில் இறங்கப் போறேன். இந்த இரண்டு படங்களும் என்னை வேறுவிதத்தில் கொண்டுபோய் வைக்கும்!

அமீர், ஜனநாதன் இருவரது சினிமாக்களும் என்னை தன்வசப்படுத்தியிருக்கு. அமீர் என்னைத் தேடிவந்து இந்த வாய்ப்பைத் தந்ததில் சந்தோஷம். கதையில் ஒரு சின்ன இழையை மட்டும்தான் என்னிடம் சொன்னார். அதுவே செடியா, மரமா செழித்து வளரும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. ‘பருத்திவீர’னைப் பாருங்க, சிம்பிள் லவ் ஸ்டோரி. ஆனா, அப்படி பட்டவர்த்த னமாகத் தெரியாமல் எவ்வளவோ உணர்ச்சி களைப் புரளவிட்டிருப்பார். ஜனநாதன் சாரோடது பிரமாண்டமான ஆக்ஷன் கதை. இப்பவே பயிற்சிகள், ஓட்டங்கள்னு பலப் படுத்திக்கிட்டு இருக்கேன்.’’

‘‘சிம்பு பரபரப்பு ஆவதற்கு காரணங்கள் ஏராளம். தனுஷ் பெரிய இடத்து மாப்பிள்ளைங்கிறதே போதும். ஜீவா கெட்-அப் மாஸ்டர் ஆயிட்டார். இதில் உங்க இடம் என்ன ரவி?’’

‘‘எது மாதிரியுமாக இல்லாமல் புது மாதிரியாக இருக்கிறதுதான். யாரும் யார் மாதிரியும் இருக்க வேண்டாம். அவங்கவங்க தேர்ந்தெடுத்த வழியில் போய்க்கிட்டு இருக்கோம். இரண்டு ஜீவா, இரண்டு தனுஷ், இரண்டு சிம்பு எதுக்கு? இன்னும் பத்துப் பேர் வந்தாலும், அவங்களுக்கும் ஒரு தனி இடம் காத்துக்கிட்டு இருக்கு. என்னோட இடம் மக்கள் மனசுதாங்க!’’

‘‘இனிமையான விஷயத்துக்கு வருவோம்... ஜெனிலியா எப்படி?’’

‘‘எனக்கு இப்பதான் ‘ச.சு’ படத்தில் முதல் தடவையா ஜோடி சேர்றாங்க. ரொம்ப ஸ்வீட்! இந்தப் படத்தில் அவங்க நடிக்கவே இல்லை. அவங்களோட இயல்பான குணம் எப்படியோ, அதே மாதிரிதான் கதையில் அவங்க கேரக்டரும் அமைஞ்சிருக்கு! அதனால சிரமமே இல்லாம ஊதித் தள்றாங்க!’’

‘‘உங்களுக்கு மட்டும் காதல், கல்யாண ஆசை வரலையா? நீங்களும் சிம்புவும் மட்டும்தான் பாக்கி!’’

‘‘பேஸ்மென்ட்டைக் கொஞ்சம் ஸ்டிராங்கா போட்டுக்குவோம் சார்! அப்புறம் எல்லாமே தன்னால வரும்!’’ என்று நமுட்டுச் சிரிப்பாகச் சிரிக்கிறார்.

இந்தப் பையன்களைப் புரிஞ்சுக்கவே முடியலீங்க!

\ நா.கதிர்வேலன்