டப்பாஸு டமாஸு! டப்பாஸு டமாஸு!

சி  ன்னத் திரை டு வண்ணத் திரை ப்ரொமோஷன் வாங்கியிருக்கும் காமெடி பார்ட்டிகளுக்கு அன்று விடுமுறை!

சந்தானம், ஆர்த்தி, ஷோபனா, ‘கஞ்சா’கருப்பு என நாலு பேரும் ‘பிஸி’யாக வெட்டி அரட்டை அடிக்க, அனகோண்டா ரேஞ்சில் உடலை வளைத்து நெளித்து ஓடி வந்தார் மண்டை மனோகர்.

‘‘அண்ணே... அண்ணே! டப்பாஸ் கடையில டிஜிட்டல் சவுண்டாம்ம்ம். விலையெல்லாம்ரொம்பக் கம்மியாம்ம்ம்ம். டப்பாஸ் வாங்கப் போலாமாண்ணே!’’ என்று கைகளை உருட்டிப் புரட்டி ஆக்ஷனோடு கேட்க, சூடேறினார் சந்தானம். ‘‘டேய்... அணுகுண்டு மண்டையா! உன் வாய்க்குள்ள வெங்காய வெடியைத்தான் வீசணும். அது டப்பாஸ் கடையில டிஜிட்டல் சவுண்ட் இல்லை. பட்டாஸ் கடையில டிஸ்கவுன்ட். இதுக்குத்தான் சொல்றது, மாசத்துக்கு நாலு தடவையாவது பல்லு விளக்குடான்னு!’’

‘‘அப்பு! இந்த டக்ளஸை மறந்துட்டு போறீங்களேப்பு. நாயந்தானா இது..? யத்தா ஷோபனா, செத்த என்னோட வாத்தா!’’ என்று ‘கம்பேனியன்’ சேர்த்துக்கொண்டு ஓடி வர, ரணகளமானது சாலிகிராமம் ‘ஸ்ரீ அண்ணா மலை பட்டாசுக் கடை!

இந்த காமெடிக் கரகத்தைப் பார்த்தவுடன் உற்சாகமான ஓனர் ஜான், ‘‘ஹெஹ்ஹேய்... வாங்கய்யா! எங்க கடையில 400 வகையான பட்டாசு இருக்கு. வாங்க... வந்து வெடிச்சுப் பாருங்க! புடிச்சிருந்தா புள்ளகுட்டிகளுக்கு வாங்கிட்டுப் போங்க. இல்லேன்னா வெடிச்சதுக்கு மட்டும் காசு கொடுத்துட்டுப் போங்க!’’ என்று உஷாராக ஒரு பிட்டைப் போட்டு வைத்தார்.

‘‘இப்படி ஒரிஜினலைக் காமெடி பண்ணி கலாய்க்கிறது எல்லாம் லொள்ளு சபால

பார்த்துக்குவாங்க! நீங்க பீசுகளைப் பிச்சுப் போடுங்க!’’ என்று சந்தானம் சவுண்ட் கொடுக்கவும், சிலபல உதிரி வெடிகளை ட்ரையலுக்கு எடுத்துப் போட்டார் ஓனர்.

முதல் வெடிக்குத் திரி கிள்ளி பயந்து நடுங்கி, பாய்ந்து பதுங்கி என ஏகப்பட்ட உதாருக்கு பிறகு பத்த வைத்தார் கஞ்சா கருப்பு. சர்சர்ரென சீறி, பூச்சி காட்டிவிட்டு புஸ்ஸ்ஸ்ஸ்ஸானது அந்த வெடி.

டென்ஷனான ஆர்த்தி, ‘‘யோவ், குளிச்சுட்டு வந்தியா?’’ என்று கருப்பு மீது வெறுப்பு காட்டினார். ‘‘யக்காவ்... போன தீபாவளிக்கே உச்சியில நல்லெண்ணெய் வெச்சுத் தேச் சுத் தேச்சுக் குளிச்சேனக்கா! அந்த எண்ணெய்ப் பிசுக்கு இன்னும்கூடப் போவலை, தொட்டுப் பாரு!’’ என்று தலையை நீட்ட, ‘‘கர்மம் கர்மம்!’’ என்று தன் தலையில் அடித்துக்கொண்டார் ஆர்த்தி.

‘‘பாலு... பட்டாசு பாலு வர்றான்! ஒதுங்கு!’’ என்று சந்தானம் பிஜிலி வெடிக்கு பில்ட்-அப் கொடுக்க, ‘‘ஆமாமா, நீங்க பசும்பாலு. அப்ப நான் பூஸ்ட்டா... பட்டாசு பூஸ்ட்.. அக்காங்!’’ என்று கவுன்ட்டர் கொடுத்தார் மனோகர்.

சந்தானம் பட்டாசுக்கு நெருப்பு வைக்கப் போகும் நேரம் பார்த்து சவுண்டாகப் பாட ஆரம்பித்தார் ஷோபனா. ‘‘ஏ... சந்தானத்தைப் பூசுங்க, சந்தோஷமாக் கொளுத்துங்க..!’’

‘‘ஏந்தாயி! இந்தக் கொலைவெறி? சந்தனத்தை அப்பச் சொன்னா, சந்தானத்தையே ரெண்டு அப்பு அப்பிருவ போல!’’ என்று சப்போர்ட்டுக்கு வந்தார் கஞ்சா.

‘‘சின்ன வயசுல இருந்தே எனக்கு வெடின்னா ரொம்பப் பயம். எங்க தாத்தாதான் பாம்பு வெடி வெடிச்சா, பயம் போயிடும்னு சொல்வார்! ஒரு பாம்பு வெடி தூக்கிப் போடுறது..!’’ என்று கைகளால் பாம்பு டான்ஸைப் போட்டபடியே கேட்டார் மனோகர்.

‘‘இதுக்குதான் இவனைக் கூட் டிட்டு வராதீங்கன்னு சொன்னேன். விட்டிருந்தா ஓரமா உக்காந்து ஒரு தேங்காயைக் கரண்டிட்டு இருந்திருப்பான். ஓனர் சார்... இவன் வழுக்கை மண்டையில வழுக்காம துளைச்சுட்டுப் போற மாதிரி துப்பாக்கி இருக்கா உங்க கடையில?’’ என்று சலம்பத் தொடங்கினார் சந்தானம்!

‘‘அண்ணே! இந்தத் துப்பாக்கி, அணுகுண்டுல்லாம் நம்ம டிபார்ட்மென்ட்டு! ஊர்ல என்னிய ராக்கெட் ராஜான்னுதான் கூப்பிடுவாய்ங்க. அணுகுண்டுகளை அக்குவேறு ஆணிவேறாப் பிரிச்சுப் போட்டு, புஸ்வாணத்தை புஸ்ஸுனு ஊதிட்டுப் போயிக்கே இருப்போம்ணே!’’ என்று கருப்பு உதார் காட்ட, ஆர்த்தி முகம் கோபத்தில் ஜிவுஜிவு! ‘‘நான் வேணா அப்படியே கருப்பு மேல உருண்டு எந்திரிக்கவா?’’ என்று சூடேறி யவரைச் சமாதானப்படுத்தினார் ஷோபனா.

ஆளாளுக்கு ஒரு லிஸ்ட்டைப் போட்டுப் பொட்டலம் கட்ட ஆரம்பிக்க, மனோகர் மட்டும் அங்குமிங்கும் உருண்டுகொண்டே இருந்தார். ‘‘டே, என்ன வேணும்னு சீக்கிரம் சொல்லலைன்னா, உன் தலையிலேயே ஒரு புஸ்வாணத்தைக் கொளுத்திருவோம்!’’ என்று சந்தானம் சவுண்டு விட, படக்கென ‘‘ரெண்டு முழம் சரவெடி கொடுங்க!’’ என்று சீரியஸ் ஆர்டர் கொடுக்கிறார் மனோகர். தலையிலடித்துக்கொண்ட ஷோபனா, ஒரு டூ தவுசண்ட் வாலாவை தூக்கிப் போட, ‘‘இது சரவெடி இல்ல.. சிவப்பு கலரா இருக்கு. இது வேணாம்ம்ம்ம்!’’ என்று வளைந்து நெளிந்தபடி டான்ஸ் ஆடுகிறார்.

‘‘அவன் வாய்ல ஒரு அணுகுண்டு வெடிச்சாதான் அடங்குவான்!’’ என்று சிவகாசி விஜய் கெட்-அப்பில் சந்தானம் சீற, அணுகுண்டையும் தீப்பெட்டியையும் அக்கறையாக எடுத்துக் கொடுத்தார் கஞ்சா கருப்பு. ஆர்த்தியும், ஷோபனாவும் மனோகரை ரவுண்ட் கட்ட...

ஆரம்பித்தது தீபாவளி!

\ மை.பாரதிராஜா,
படங்கள்: உசேன்