இரட்டை வேடம் என்றதும் ‘இருவரும் ஒரு தாய் மக்கள்’ என செபியா ஃப்ளாஷ்பேக் இல்லாமல் கலர்ஃபுல் ட்விஸ்ட் பண்ணியதற்காக, அறிமுக இயக்குநர் பரதனுக்குப் பாராட்டுக்கள்!
மாஸ் ஹீரோவுக்கான அத்தனை அமர்க்களங்களுடன் ஆரம்பிக்கிறது படம். ஓட்டப் பந்தயத்தில் விஜய் விட்டுக்கொடுப்பதும், ஸ்ரேயாவுக்கு அதனாலேயே விஜய் மீது டச்சிங் ஆவதும்
லவ்வபிள் ஹீரோயிஸம்தான்! நண்பர்களுடன் சேர்ந்து விஜய் அடிக்கிற பேச்சுலர் ரூம் கூத்துகள், சரியான காமெடி வீல். ஜாலி யாக நகரும் கதையில் திடுதிப் பென்று, ‘நடக்கப் போவதை முன்கூட்டியே அறியும் சக்தி’ விஜய்க்கு இருக்கிறது என்பது தெரியும்போது பரபரப்பான கியர் விழுகிறது.
டைட்டிலுக்கு ஏத்த மாதிரி விஜய் செம ஸ்டைலிஷ்! ஃப்ரேமுக்கு ஃப்ரேம் அழகழகான மேனரிசங்களில் அசரடிக்கிறார். நடனங்களும் செம கலக்கல். வழக்கமான கதைகளைவிட்டு புது முயற்சி எடுத்ததற்காக விஜய்க்கு ஒரு வெல்கம் பொக்கே! எதிர்காலத்தை அறிந்து தவிக்கும் குரு, குஷி மைனர் பிரகாஷ் என இரண்டு கேரக்டரிலும் விஜய்யின் பெர்ஃபாமன்ஸ், சர்ப்ரைஸ் போனஸ்!
ஆனால், அப்புறம் நடப்பதெல்லாம் உத்தமபுத்திரன் காலத்து உல்டா! வில்லன் விஜய் - ஹீரோ விஜய் சந்திப்பில் எந்த சஸ்பென்ஸும் இல்லை. மாறி மாறிச் சண்டை போடு கிறார்கள், வசனம் பேசுகிறார்கள், சவால் விடுகிறார்கள். யார் உண்மையான குரு என்பதைக் கண்டுபிடிக்க நடக்கிற காட்சிகளிலும் சுவாரஸ்யம் மிஸ்ஸிங்! கடைசியில் அவர் பொசுக் கென்று திருந்துவதெல்லாம் நிறைய பார்த்தாச்சு! வில்லன் விஜய், அதிரடி யான வில்லனாகவே இருந்திருந்தால்தானே இந்தக் கதைக்கு அழகு! அவரையும் நியாயப்படுத்த எதற்கு ஒரு ஃப்ளாஷ்பேக்?
ஸ்ரேயா டான்ஸில் பின்னுகிறார். கிளாமரில் கிளப்புகிறார். நடிப்பு..? அட, அது யாருக்கு வேணும்?
தியேட்டர் அதிர அறிமுக மாகிற நமீதா ரெண்டு ஸீன், ஒரு செட் பேபி டிரெஸ்... என செக்ஸி |