‘‘ரஜினி சார் ஃபார்முலா!’’

மு  ட்டுச் சந்தில் ஆரம்பித்து, பரந்து விரிந்து நிற்கிறது மாளவிகாவின் மும்பை வீடு. வீட்டினுள் நுழைந்தால், அறை எங்கும் கேரள வாசம். ‘‘என்னோட கனவு மாநிலம் கேரளா. ஆனா, எனக்கு அங்கே வாழக் கொடுத்துவைக்கலை. அதனால இங்கே நான் இருக்குற வீட்டையே கேரள ஸ்டைல்ல மாத்திக் கிட்டேன். எல்லாம் ரஜினி சார் ஃபார்முலாதான்!’’ - மாளவிகா சிரித்தால், பிபி எகிறுகிறது.

‘‘சார் பேர் சுமேஷ்! பெங்களூருவில் பைக் இறக்குமதி செய்து விற்கிற ஃபேக்டரி வெச்சிருக்கார். மும்பைல ஒரு பார்ட்டியில தான் சுமேஷை சந்திச்சேன். காதல்ல எப்பவும் ஜென்ட்ஸ் தானே முந்திக்கிறாங்க..? அதன்படி அவர்தான் காதலைச் சொன்னார். எனக்கும் பிடிச்சிருந்தது. ஆனா அது ஈர்ப்பா, காதலான்னு தெரியாம மனசு அலைபாய்ஞ்சுட்டு இருந்துது. அதுக்கப்புறம் அடுத்தடுத்து யதேச்சையா ரெண்டு, மூணு சந்திப்புகள் தொடர்ச்சியா அமைஞ்சுது. ஒவ்வொரு சந்திப்பும் அவ்வளவு ஆனந்தமான அனுபவம். இது காதலேதான்னு மனசுக்குள்ள பட்சி சொல்லுச்சு. சம்மதம் சொன்னேன். உடனே கல்யாணம் பண்ணிக்கிட்டோம்.

கல்யாணத்துக்கு அப்புறம் நடிக்க வேண்டாம், குடும்பத்தைக் கவனிச்சுக்கலாம்கிற முடிவுல இருந்தேன். என் முடிவை மாத்தினது சுமேஷ்தான். ‘கல்யாணத்துக்கு அப்புறம் பெண்கள் ஏன்

நடிக்கக் கூடாது? கல்யாணம் ஆன பெண்கள் வேலைக்குப் போறதில்லையா?’ன்னு நம்பிக்கையும், தைரியமும் தந்தார். போன வாரம் என் பிறந்த நாள். எனக்குக் கேரளா பிடிக்கும்கிறதால சர்ப்ரைஸா கேரளா கூட்டிட்டுப் போனார். இந்த மாதிரியான அன்பாலதான் என் காதல் கல்யாணத்துக்கு அப்புறமும் உயிர்ப்பா இருக்கு!

பிரபலங்களுக்குள் காதல், கல்யாணம்னு ஆச்சுன்னா அது கடைசியில பிரிவுலதான் போய் முடியும்னு பல பேர் நினைக்கிறாங்க. இது தவறான கருத்து. வி.ஐ.பி-க்கள் மட்டும்தான் கோர்ட் படியேறி டைவர்ஸ் வாங்குறாங்களா, என்ன? பிரபலமா இருக்கிறதால அது வெளிச்சத்துக்கு

வருது. அவ்வளவுதான். மத்தபடி கணவன், மனைவிக்குள்ளே எந்தவிதமான ஒளிவு மறைவும் இல்லாமல் இருந்தாலே போதும்... டைவர்ஸ் கேஸ்கள் பாதியா குறைஞ்சுடும். இப்போ நான் ‘சிங்கக் குட்டி’, ‘கட்டு விரியன்’, ‘மச்சக்காரன்’ படங்கள்ல நடிச்சுக்கிட்டு இருக்கேன். இப்பவும் பாட்டுக்கு கிளாமரா டான்ஸ் ஆடத்தான் செய்யறேன். இது என் வேலை. இதுல எனக்கோ, சுமேஷ§க்கோ எந்தக் குழப்பமும் இல்லை. ரெண்டு பேரும் மனசு விட்டுப் பேசுறதால, பிரச்னை இல்லை.

‘சினிமாவுல பரபரப்பா இருக்கும் போதே ஏன் கல்யாணம் பண்ணிக்கிட்டே?’ன்னு எல்லாரும் கேட்கிறாங்க. எந்தெந்த நேரத்துல எது எது தேவையோ, அதை எடுத்துக்கிறதுதானே வாழ்க்கை? வாழ்க்கையைத் தொலைச்சுட்டு, வெறும் பணத்தை வெச்சுக்கிட்டு என்ன செய்யறது?

திருமணம்கிறது வாழ்க்கையோட முக்கியமான கட்டம். அதை கிராஸ் பண்ணாம போன வாழ்க்கையில எந்த சுவாரஸ்யமும் இல்லை. இங்கே தனியாகவே வாழுற கலாசாரம் ஒண்ணு உருவாகிட்டு இருக்கு. அது அவங்கவங்க சௌகரியம். ஆனா, வாழ்க்கைங்கிறது ஒரு முறைதான். அதை அனுபவிச்சு வாழ்ந்துடணும். நம்ம மனசுக்குப் பிடிச்ச ஒருத்தரோடு அன்பால் இணைஞ்சு வாழறதுதான் சந்தோஷமான வாழ்க்கை. இதுவும் ரஜினி சார் ஃபார்முலாதான்’’- சொல்லிவிட்டுக் கணவரின் தோளில் சாய்ந்து கொள்கிறார் மாளவிகா - அவ்வளவு அன்பாக... அத்தனைக் காதலாக!

\ நா.இரமேஷ்குமார்
படங்கள்: சு.குமரேசன்