‘‘ரஜினி மாறினால், சினிமாவுக்கு நல்லது..!’’

‘உ  திரிப்பூக்க’ளைத் தொடுத்துவிடும் ஆசை இப்போதும் துடிக்கிறது மகேந்திரன் விழிகளில். ஜன்னல் கம்பி பிடித்து, தூரத்தில் திரளும் மேகங்களைவெகுநேரம் பார்த்துவிட்டுத் திரும்புகிறார்.

‘‘பூட்டாத பூட்டுக்குச் சாவி தேடி அலைகிறவன்தான்கலைஞன். கனவுல சாவியைத் தொலைச்சிட்டு, யதார்த்தத்தில் பூட்டை உடைக்க முடியாம அலைகிறவங்கதான் அனேகம் பேர். தேடலும் வேட்கையும் இல்லைன்னா இங்க யாராலும் உயிர் வாழ முடியாது. நான் நிறையக் கண்டெடுத்திருக்கேன். அதுக்கும்மேல தொலைச்சிருக்கேன். இழந்ததுக்கும் இருக்கிறதுக்கும் நடுவுல நான் இப்பஉட்கார்ந்திருப்பது நம்பிக்கையோட நாற்காலி!’’

தமிழ் சினிமாவின் ‘ஐகான்’ டைரக்டர்களில் ஒருவர். கால நதியால் அடித்துச்செல்ல முடியாத திரைப்படங்களைத் தந்த கலைஞன் மகேந்திரனுடன் பேச நேர்வதே ஒரு சுகானுபவம்!

‘‘சட்டம் படிக்க வந்துட்டு, சினிமாவுக்கு வந்தவன் நான் ஆரம்பத்தில் பத்திரிகையாளனாக இருந்த என்னை, ‘பொன்னியின் செல்வன்’ அத்தனை வால்யூம்களையும் படித்து,திரைக் கதையாக்கித் தரச் சொன்னவர் எம்.ஜி.ஆர். இப்படி என்னை அறியாமலேயே சினிமா வுக்கு வந்தவன் நான். மத்தபடி, சினிமாவை வாழ வைக்கணும்னெல்லாம் வந்தவன் கிடை யாது.

இன்னிக்கு வரைக்கும் என் படங்கள் உசத்தியானவைனு நான் சொல்லிக்கிட்டது கிடையாது. என் வேலையைப் பொறுப்பாகச் செய்திருக்கிறேன் அவ்வளவுதான்! இப்போதுகாணக்கிடைக்கிற உலக சினிமாக்களைப் பார்க்கிறபோது, நான் ஒண்ணுமே செய்யலைன்னுதான் சொல்லணும். இதைத் தன்னடக்கம்னு யாரும் நினைக்க வேண்டாம். உண்மை அதுதான். ‘உதிரிப்பூக்கள்’ படம் போல இன்னொரு படம் வரலை; ‘முள்ளும் மல’ரை மறக்க முடியலை; ‘மெட்டி’ மனதைத் தொட்டுதுன்னு என்னை யார் யாரோ எது எதுக்காகவோ பாராட்டும்போது, பல்லைக் கடிச்சுக்கிட்டுப் பொறுத்துக்கறேன். காரணம், இனிமேல்தான் சிறந்த டைரக்டராக நானே வெளிவரணும். இதுதான் இறுதி வடிவம்னு எந்த ஒரு படத்தையும் நான் இதுவரை தந்ததில்லை. ரிலீஸான பிறகுதான் ‘அடடா! இதை இன்னும் பெட்டரா பண்ணியி ருக்கலாமே’னு தோணும்.

அந்தக் காலத்துப் படங்கள் நீளமாக இருந்தன, மெலோடிராமா வாக இருந்தன, பாடல்கள் நிரம்பி வழிந்தனன்னு குறைகள் சொல்றவங்க இருக்காங்க. உண்மைதான். ஆனால், அதைப் படிப்பினை மாதிரி அழகா, நேர்த்தியா செய்தாங்க. அந்தக் காலத்தில் கல்லை எறியறதே பெரிய வன்முறை. இப்ப சர்வ சாதாரணமா வெடிகுண்டை வீசிட்டுப் போறாங்களே! எல்லாமே மாறும்போது சினிமாவும் மாறத்தானே செய்யும்!

ஒரு நல்ல சினிமாவுக்கு திரைக்கதைதான் அச்சாணின்னு நாம இன்னும் புரிஞ்சுக்கலை. அந்த அச்சாணி இல்லாமல் குடை சாய்ந்த வண்டிகள் ஏராளம். முன்னாடி ‘ஸ்டோரி டிபார்ட்மென்ட்’னு விஸ்தாரமா இருந்ததை, இப்ப ‘டிஸ்கஷன்’னு சுருக்கிட்டாங்க.

இலக்கியத்தில் எவ்வளவோ இருக்கு. நிறையப் படிக்கணும். நான் படிச்ச இலக்கியம்தான் என்னை உருவாக்கியது. இங்கே பல பேர் சினிமாவுக்கு வருவதற்கு முன்னாடி வாழ்க்கையைத் தெரிஞ்சுக்க எடுத்த முயற்சியை, சினிமாவுக்கு வந்த பின்னாடி செய்யறதில்லை. கையேந்திபவனில் சாப் பிட்டவங்க, கார் கண்ணாடியை ஏத்திவிட்டுட்டுப் போறாங்க. மக்களுக்கும் படைப்பாளிகளுக்குமான இடைவெளி கூடிப்போச்சு. அதனால, அவங்க படத்தின் யதார்த்தம் தூரப் போயிடுது.

உண்மையில், யதார்த்தமான சினிமா எடுக்கிறதைப் போல சுலபமான விஷயம் எதுவும் கிடையாது. உங்க முகத்தைக் கண்ணாடியில் பார்ப்பது போல எளிமையானது அது. எந்த ஒப்பனையும் இன்றிப் பார்ப்பது; நமதுவாழ்க் கையின் உண்மைகளை ஒளிவு மறைவின்றித் தரிசிப்பது; அப்படித் தரிசிக்கும் உண்மைகளை அழகுணர்ச்சியுடன் சித்திரிப் பது; உணர்வுபூர்வமாகச்சொல் வது; முடிஞ்சுது. நல்ல சினிமா தயார்!

சினிமாவை சூதாட்டம்னு சொல்றாங்க. கொஞ்சம் அனுபவப்பட்டால், காசு பார்த்துட லாம்னு வர்றாங்க. அது தப்பு! இதுல நிறைய உழைப்பு வேணும்; புத்திசாலித்தனம் வேணும். நம்ம மக்களின்மனோ பாவமே தனி. இங்கே இங்கி லீஷ் படம் 100 நாள் ஓடும். இந்திப் படமும் மொழி புரியா விட்டாலும் ஓடும். சினிமாவுக்கு மொழி தேவையில்லை. சினிமாவே ஒரு மொழிஎன்பது தான் சரி! முதல் வாரம் பிக்கப் ஆகாத சினிமா, பதினைந்து நாள்களுக்குப் பிறகு பிச்சுக் கிட்டு ஓடும். முதல் வாரம் ஜனங்கள் முண்டியடித்த ஒரு படம் அடுத்த வாரம் சீந்து வாரில்லாம ஈயாடும். ஆனா, கேரளத்து ஜனங்களின் மனோ பாவமே வேற! அங்கே முதல் ஷோவிலேயே படத்தோட தலைவிதி நிர்ணயம் ஆகிடும். படம் சரியில்லேன்னாஅடுத்த ஷோ பார்க்க நிற்கிறவங்ககிட்டே ‘போய்க்கோ’ன்னு சொல்லிடுவாங்க. அவங்களுக்கு நேரமும் பணமும் அத்தனை அவசியம். நமக்கு அது கிடையாது. இதுலதான் பல தமிழ் சினிமாக்காரங்க, வண்டி ஓட்டிக்கிட்டு இருக்காங்க.

என்னால் மிகவும் மதிக்கப்படுகிற இயக்குநர் ஸ்ரீதர். என் வழிகாட்டி. புதுமை விரும்பி. காதலையும் கலா பூர்வமாக, நகைச்சுவையாக, கௌரவமாகச் சொன்னவர் அவர்தான். அவர் உடல் நலத்தோடு இருந்திருந்தால், அவரது சாதனைகளை அவரே மிஞ்சியிருப்பார். மற்றபடி

இன்றைய சினிமாவில் குறிப்பிடத்தக்கவர்களாக பாலா, சேரன், பாலாஜி சக்திவேல், ராதாமோகன், அமீர் இவர்களைச் சந்தோஷமாகச் சொல்வேன்.

நடிகர்களில் என் மனசைத் தொட்டவர்கள் என்று பிரபுதேவா, விக்ரம் இருவரையும் குறிப்பிடுவேன். பிரபுதேவா அவ்வளவு இயற்கையான நடிகர். எத்தனை பேர் இருந்தாலும், தனித்து முகபாவம் காட்டுகிறார். எது செய்தாலும் தனித்துவமாகச் செய்கிறார். அவர் சிறந்த நடனக்காரர்னு முத்திரை குத்திப் பெருமைப்படுகிறோம். அவர் அதையும் விட்டு டைரக்ஷனுக்குப் போகிறார். மொத்தத்தில் சிறந்த நடிகரை இழந்து கொண்டு இருக்கிறோம். விக்ரம் ஒரு ஆச்சர்யம். அவரால் எந்தக் கேரக்டருக்கும் முழுமையான வடிவம் தரமுடிகிறது. நல்லவேளையாக, அவராவது தன் பொறுப்பை உணர்ந்து செயல்படுகிறார் என்பதில் எனக்குச் சந்தோஷம். இன்னும் அவர் முழுதாக வெளிப்பட்டால், பல ஆச்சர்யங்கள் நமக்குக் கிடைக்கும்.

ரஜினியை வெச்சு நான் மூன்று படங்கள் இயக்கியிருக்கேன். மிக நாகரிகமான, மிக மென்மையான, மிக கம்பீரமான மனிதர். அவரோட ரியல் கேரக்டரைக் காட்டுகிற மாதிரி எந்தப் பாத்திரப் படைப்புகளும், சினிமாவில் அதன் பிறகு அவருக்குக் கிடைக்கவே இல்லை. அமிதாப் இப்போது அதன் எல்லையை நெருங்கிக் கொண்டு இருக்கிறார். அமிதாப்பின் எல்லையை மீறும் சக்தி ரஜினிக்கு உண்டு. ஆனால், அதைச் செய்ய ரஜினி மனசு வைக்கணும்; அவரது ரசிகர்களும் வழிவிடணும். அவர் அப்படி மாறினால், தமிழ் சினிமாவுக்கு நல்லது.

இங்கே எனக்குள்ள பெரிய குறை, பெரியவர்களுக்கான படங்களையே தொடர்ந்து எடுத்துக்கொண்டு இருக்கிறோம். துரதிர்ஷ்டவசமாக அதைத்தான் குழந்தைகளும் பார்க்க வேண்டி இருக்கு. குழந்தைகளுக்காகப் படம் எடுக்க நான் ரெடி. தயாரிப்பாளர்கள் யாராவது தயாரா? பதில் இருக் காது!’’

\ நா.கதிர்வேலன்
படம்: கே.ராஜசேகரன்