Published:Updated:

''ராஜா மாதிரி இருக்கிறது சந்தோஷம்...

ராசா மாதிரி இருக்கிறது கொடுமை!''நா.கதிர்வேலன்படங்கள் : ராக்கி பார்த்திபன்

''ராஜா மாதிரி இருக்கிறது சந்தோஷம்...

ராசா மாதிரி இருக்கிறது கொடுமை!''நா.கதிர்வேலன்படங்கள் : ராக்கி பார்த்திபன்

Published:Updated:
##~##

''நாலு ஃபைட், அஞ்சு பாட்டு, பஞ்ச் டயலாக்னு ஃபார்முலா சினிமா எனக்குப் பிடிக்காது. இப்போ வாழ்க்கை அனுபவம் நிறையக் கிடைச்சிருக்கு. யோசிக் கிற புத்தி கூடியிருக்கு. கத்துக்கிட்ட அத்தனை யும் கலந்து புதுசா ஒருவன் உருவாகிட்டான். அவன்தான் 'வித்தகன்’. சுவாரஸ்யம்தான் திரைக்கதை!'' கேள்விகளுக்குக் காத்திருக்கா மல் தடதடவென பார்த்திபன் ஆரம்பிக்க, 'டேக் ஆஃப்’ ஆகிறது பேச்சு.

''வித்தகனில் ஹீரோயின் பூர்ணா. ஹீரோ, செவன்த் சேனல் நாராயணன். 'இப்போ புத்திசாலிகள்தான் படம் பார்க்கிறாங்க. நீங்கள் புத்திசாலி. நீங்க படம் எடுத்தால் ஓடும்’னு நம்பிக்கையா சொன்னார். கேள்வி கேட்டால், பதில் சொல்லலாம். பொறுப்பைக் கொடுத்தால், எப்படித் தட்டிக் கழிக்க முடியும்? இது போலீஸ் - டான் ஸ்டோரி. பாதி போலீஸ்... மீதி டான். இது சுட்ட கதையல்ல. சுட்ட கதையையே சப் டைட்டில் போட்டு உலகத் திரைப்பட விழாவுக்கு அனுப்புற தைரியம் எனக்குக் கிடையாது. இந்த வித்தகன் ரொம்பப் புதுசா இருப்பான். பாடல்களையும் நானே எழுதிட்டேன்!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''ராஜா மாதிரி இருக்கிறது சந்தோஷம்...

''உங்க பொண்ணு கீர்த்தனா எப்படி இருக்காங்க?''

''வியன்னா ஷூட்டிங் முடிஞ்சு வந்ததும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு 'அமைதியே ஆளுமையாய், அந்த ஆளுமைகூட அமைதி யாய்’னு ஒரு கடிதம் எழுதினேன். அது கீர்த்தனாவுக்கும் பொருந்தும். ஒரு நாளைக்கு 10 விஷயங்களைக்கூட அதன் சுமை அறியா மல் செய்றாங்க. மகள்னு மட்டும் சொல்ல முடியலை. சமயத்தில் தாய் மாதிரி கனிவு காட்டுறாங்க. என்னோட கோபத்தை, உணர்ச்சிகளைச் சமன் செய்கிற பொண்ணு கீர்த்தனா. எனக்கு உரிய இடமும் வெற்றி யும் கிடைக்காத காலகட்டங்களில் என் கூடவே உறுதுணையா இருந்தாங்க. இப்போ, ராக்கி லயோலா காலேஜில் சேர்ந்துட்டான். இந்தப் படத்தில் ஒரு பாடலில் நடிச்சிருக்கான். ஸ்டில் போட்டோகிராஃபியில் பின்னி எடுக்குறான். என்னால் பணம் சேர்த்துவைக்க முடியலை. நிறைய சொத்து சேர்த்து, அவங்களைச் சோம்பேறியா இருக்க விடலை. படிச்சு நல்லா வந்து, அப்பனுக்குப் புத்தி சொல்ற சாமி மாதிரி வருவாங்க!''

''உங்களுக்கு வேண்டிய இடம் கிடைக்கலைன்னு வருத்தம் இருக்கா?''

''நிறைய! 'ஆயிரத்தில் ஒருவன்’ ரெண்டரை வருஷம் ஆச்சு. எனக்கு சாமர்த்தியமான அப்ரோச் தெரியாது. பெரிய வெற்றி வரும்னு காத்திருக்கேன். அது வித்தகனாவும் இருக்கலாம். எப்போ, எங்கே பார்த்தாலும், 'பார்த்திபன், உங்களுக்கான இடம் இன்னும் கிடைக் கலைப்பா’ன்னு இளையராஜாவும் பாரதிராஜாவும் சொல்லிட்டே இருப்பாங்க. இதுகூட அங்கீகாரம்தான். நான் திறமையோட இருக்கிறதுகூட வெற்றி தான். இப்போகூட 'மேல் விலாசம்’னு மலையாளப் படம் செய்து இருக்கேன். அதை 'உள் விலாசம்’னு தமிழில் டப் பண்ணி ரிலீஸ் பண்றேன். ஒரே ஒரு காட்சிதான் மொத்தப் படமும். இது மாதிரி தமிழில் முன்மாதிரிப் படங்கள் எதுவும் கிடையாது. அடுத்ததா 'அழகி பார்ட்-2’ பண்றேன். படத்துக்குப் பெயர் 'சண்முகத்தின் தனலட்சுமி’. நான்தான் டைரக்டர். நந்திதாதாஸ்தான் நாயகி. ஒரு தெலுங்குப் படமும், ஒரு பெரிய புரொடக்ஷன் கம்பெனிக்குப் படம் டைரக்ட் பண்றேன். ஹீரோ யாருன்னு கொஞ்ச நாளில் சொல்றேன்!''

''ராஜா மாதிரி இருக்கிறது சந்தோஷம்...

''இப்போ இருக்கிற ஹீரோக்கள் உங்களுக்குத் தெரியும்தானே! அவங்க உங்களோட நல்லாப் பழகுறாங்களா?''

''நல்லாப் பழகுவாங்க. ஆனா, பழக்கத்தை வெச்சுக்கிட்டுப் படம் பண்ணுங்கன்னு கேட்க முடியாது. என்னைப்பத்தித் தெரியலைன்னா, நானே சுய விளம்பரம் செய்யலாம். அதுக்கும் வாய்ப்பு இல்லை. இப்போ காங்கிரஸ் கூட்டணிபத்திக் கேட்கும்போது நம்ம முதல்வர், 'என் கூட்டணி தேவைன்னா, அவங்கதான் அணுக வேண்டும்’னு சொன்னாங்க. அது மாதிரிதான் நானும். இப்போகூட சூர்யாகிட்ட ஒரு லைன் சொன்னேன். 'சார், இது மாதிரியே கே.வி.ஆனந்த் சொல்லி அவரை ஓ.கே. பண்ணி வெச்சி ருக்கேன். அதுதான் 'மாற்றான்’னு சொன்னார். கமல் சார்கிட்ட 'தசாவதாரம்’ பண்ணும்போது ஒரு கதை சொன்னேன். 'ரொம்ப சிம்பிளா ஒரு படம் பண்ணலாம்’னு இருக்கேன்னு சொன்னார். 'நண்பன்’ படத்தை இயக்கும் வாய்ப்பு நடிகர் விஜய் மூலமா முதல்ல எனக்குத்தான் வந்துச்சு. அக்ரிமென்ட் வரைக்கும் வந்து அது ஷங்கர் கைக்குப் போயிருச்சு. ஒரு வெற்றியைக் கொடுத்துட்டு, எல்லாத்தையும் தொடர்வேன்!''

''ராஜா மாதிரி இருக்கிறது சந்தோஷம்...

''நீங்க எல்லாத்தையும் கவனிப்பீங்களே... தேர்தல் முடிவுகளை எப்படிப் பார்க்கிறீங்க?''

''மாறுதல் எல்லாத்துக்கும் அவசியமானது. எலெக்ஷனுக்கு முன்னாடி என்கிட்ட கருத்துக் கேட்டு இருந்தால் கூடச் சொல்லியிருப்பேன்.  இப்போ மக்கள் ஒருமுகமாக, 'இதுதான் சரி!’ன்னு முடிவு எடுத்த பின்னாடி... இதுதான் சரி!

இந்த ஆட்சி நல்லபடியா ஆரம்பிச்சு இருக்கு. இலங்கைக்கு எதிராக சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானம்... நம்மை 'ஈர’த் தமிழர்கள் என சொல்லிக்கொள்ளவைத்தது. இந்த ஈரம்தான் உலகத் தமிழர்கள் நம்மிடம் ஆக்சிஜனா எதிர்பார்த்தது. அது இப்போ வாய்க்கரிசியாப்போச்சு. இன்னொரு மனுஷன் இருக்குற வரைக்கும், யாரும் இங்கே அநாதை கிடையாது. அந்த இன்னொரு மனுஷனா நாம இருக்கணும். கர்நாடக பழைய முதல்வர் குமாரசாமி, 'இனிமே ஊழல் பண்ணாமல் ஆட்சி செய்ய

''ராஜா மாதிரி இருக்கிறது சந்தோஷம்...

முடியாது’ன்னு சொல்லி இருந்தார். ஆட்சி நடத்துவதற்கு ஊழல் செய்யணும்னு அவசியம் இல்லை. கட்சி நடத்துறதுக்குத்தான் ஊழல் செய்யணும். ஊழல் செஞ்ச கோடிக்கணக்கான பணத்தைக் கையில்வெச்சுக்கிட்டு, அதை அனுபவிக்க முடியாமல் போவது துரதிருஷ்டம். அன்னன்னிக்குச் சம்பாதிச்சு ராஜா மாதிரி சந்தோஷமா இருக்கிறது வேற விஷயம். ஆனால், 'ராசா’ மாதிரி இருக்கிறது ரொம்பக் கொடுமையான விஷயம். இதை நான் அரசியலாப் பார்க்காமல், ஒரு மகள் ஜெயிலில் கஷ்டப்படுறதையும், அவரை வெளியில் கொண்டு வர முடியாமல் அப்பா கஷ்டப்படுறதையும் பார்த்து வருத்தப்படுறேன். கம்பிகளுக்கு உள்ளே மகளும் தாயுமா ஒரு பெண்ணும், கம்பிக்கு வெளியே சிறு வயது மகனும், வயதான ஒரு அப்பாவும் நின்றுகொண்டு இருக்கிற காட்சி என் மனதில் தைக்குது!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism