சார்லஸ்
##~## |
தீக்ஷா சேத்... தெலுங்கில் இருந்து தமிழுக்கு வந்திருக்கும் புத்தம்புது கப்பக் கிழங்கு. அனுஷ்கா உயரம், சோனாக்ஷி தேகம் என மிரட்டல் மிக்ஸிங்கால் தூக்கம் விரட்டும் பி.காம். மாணவி. விக்ரமுடன் 'ராஜபாட்டை’, சிம்புவுடன் 'வேட்டை மன்னன்’ எனத் தமிழ் சினிமாவில் கோட்டை கட்ட வந்திருக்கும் அழகிய நல்வரவு.
''வெல்கம் டு சென்னை தீக்ஷா...''

''ஹலோ! சென்னைக்கு நான் ஒண்ணும் புதுசு இல்லை. எனக்கு ஏ.பி.சி.டி. சொல்லிக்கொடுத்ததே சென்னைதான். எல்.கே.ஜி-யில் இருந்து மூணாம் கிளாஸ் வரைக்கும் சென்னையில் உள்ள சிக்ஷா ஸ்கூலில்தான் படிச்சேன். அப்பா ஐ.டி.சி. கம்பெனி ஊழியர். அடிக்கடி சென்னை, நேபாளம், மும்பைனு டிரான்ஸ்ஃபர் கிடைக்கும். மும்பையில் பி.காம். படிச்சுட்டு இருக்கும்போது, ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியில் கலந்துகொண்டேன். அப்புறம் சவுத்ஸ்கோப் மாடல் ஷூட்டில் கலந்துகொண்டேன். அப்போதான் 'வேதம்’ படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிக்குற வாய்ப்பு வந்துச்சு. வேதம் செம ஹிட். அடுத்து ரவி தேஜாவோட சேர்ந்து நடிச்ச 'மெரப்பகாய’ படமும் செம ஹிட். இப்போ தமிழ்ல ஹிட் அடிக்க வந்துட்டேன்!''
''தீக்ஷா எப்படிப்பட்ட பொண்ணு?''
''ரொம்ப ரொம்ப சிம்பிள். பிராண்டட் டிரெஸ், ஜுவல்ஸ், மேக்கப் எதுவுமே பிடிக்காது. ஷூட்டிங் ஸ்பாட்டைத் தவிர, வேற எங்கயும் என்னைப் பளபளன்னு பார்க்க முடியாது!''
''விக்ரம், சிம்புன்னு அதிரடியா ஆரம்பிக்கிறீங்களே?''
''ரெண்டு படங்களுமே சூப்பர் ஸ்க்ரிப்ட். இரண்டு படங்களோட ஷூட்டிங்குமே ராக்கெட் ஸ்பீடில் போய்ட்டு இருக்கு. விக்ரம் சூப்பர் ஆக்டர். அவரோட நடிக்குறது பெருமையான விஷயம். சிம்பு செம கலகலன்னு பேசுறார். ரெண்டு பேருமே என்னோட ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டாங்க!''
''தமிழ் சினிமா பத்தி தெரியுமா?''
''ஐஸ் வைக்கலை... தமிழ் சினிமாதான் இப்போ இந்திய சினிமா. தமிழில் நடித்தால் இப்போது நேஷனல் ரீச் கிடைக்குது. ரஜினி, கமல், மணி ரத்னம், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் என லெஜென்ட்ஸும் இங்கேதான் இருக்குறாங்க. எனக்கு ஒரே ஒரு வருத்தம்தான். சென்னையில் இருந்தப்போ தமிழ் படிச்சிருந்தா, இன்னும் ஈஸியா நடிச்சிருப்பேன்!''

''தெலுங்கில் நீங்க செம கிளாமர்... தமிழில் எப்படி?''
''எனக்கு மொழி வித்தியாசம் கிடையாது. கேரக்டரோ, கிளாமரோ எதுவா இருந்தாலும் அடி பின்னி எடுக்கணும். நடிப்பை மட்டும் வெச்சு ஒரு நடிகை ஜெயிக்க முடியாது. இது என்னோட சொந்தக் கருத்து!''
''உங்க அழகின் ரகசியம் என்ன?''
''எனக்கு சாப்பாட்டில் எந்த வரைமுறையும் இல்லை. எல்லாமே சாப்பிடுவேன். அதற்கு ஏத்த மாதிரி எக்ஸர்சைஸ் பண்ணுவேன். நான் ஒரு ஸ்விம்மர். மாநில அளவிலான போட்டிகளில் பல பதக்கங்கள் வாங்கியிருக்கேன். தினமும் இரண்டு மணி நேரம் நீச்சல் கட்டாயம் உண்டு. நீச்சல் அடிச்சுப் பாருங்க... மனசு, உடம்பு எல்லாமே அழகாகிடும்!''
''செம உயரமா இருக்கீங்க... தமிழ் ஹீரோக்கள் கொஞ்சம் உயரம் கம்மி ஆனவங்களாச்சே... எப்படிச் சமாளிக்கப் போறீங்க?''
''சிம்ரனின் உயரம் 5’8. அனுஷ்கா உயரம் 5’9. இவங்கள்லாம் சமாளிக்கலையா? சினிமா வைப் பொறுத்தவரைக்கும் உயரம் ஒரு பிரச்னையே கிடையாது!''
''சினிமாவுக்கு வந்துட்டாலே நிறைய கிசுகிசுக்கள் வர ஆரம்பிச்சிருமே?''
''அதைப்பத்திக் கவலை இல்லை. நான் என் அப்பா, அம்மா, அக்காவோட ரொம்ப க்ளோஸா இருப்பேன். நண்பர்களோட எப்பவும் தொடர்புல இருப்பேன். கிசுகிசு வந்தால் அவங்கதான் கவலைப்படப்போறாங்க. அவங் களுக்கு என்னைப்பத்தி எல்லா விஷயமும் தெரியும்போது நான் ஏன் கவலைப்படணும்?''