Published:Updated:

''எதற்கெடுத்தாலும் இந்திய இறையாண்மை!''

நா.கதிர்வேலன்

''எதற்கெடுத்தாலும் இந்திய இறையாண்மை!''

நா.கதிர்வேலன்

Published:Updated:
##~##

ரு நாடுகளின் துப்பாக்கிகளுக்கு இடையில் சிக்கிக்கொண்டு உயிர் பறிக்கப்படும் ராமேஸ்வரம் மீனவனின் வாழ்க்கையை அவர்களின் மொழியிலேயே பேசுகிறது லீனா மணிமேகலையின் 'செங்கடல்’ திரைப்படம். படத்துக்குத் தரச் சான்றிதழ் தர மறுத்த சென்சார் போர்டுடன் போராடி, டிரிப்யூனலுக்குப் போய் ஒரு வெட்டும் இல்லாமல் வெற்றியோடு திரும்பி இருக்கிறார் லீனா.

'' 'இந்தப் படம் இலங்கை அரசை விமர்சிக்கிறது, அதனால்தான் தணிக்கைச் சான்றிதழ் தர முடியாது’ என்றார்கள். அதை எதிர்த்துத்தான் டிரிப்யூனல் போனேன். தனுஷ்கோடியில் 1,000-த்துக்கும் மேற்பட்ட தமிழ் மீனவர்களை இலங்கை ராணுவம் கொன்று இருக்கிறது. ஏராளமான விதவைகள், தாயை, சகோதரியை, சகோதரனை இழந்தவர்கள் சூழ நிற்கிறது அந்த ஊர். பெண்களை உருட்டுக்கட்டையில் தாக்கி மர்ம உறுப்புக் களைச் சிதைக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களின் வாழ்க்கையை வெறும் புள்ளிவிவரங்களாகச் சுருக்கி விட முடியுமா? கறுப்பாக இருப்பதையும் தமிழில் பேசுவதையும் தவிர, மீனவர்கள் செய்த குற்றம்தான் என்ன? 'சென்சார் அதிகாரிகளின் பாராட்டுப் பெற்ற படம்’ என்று சிலர் விளம்பரம் செய்கிறார்களே, அவர்கள் என்ன கலைஉலகின் பிரதிநிதிகளா?'' என்று கோபம் வார்த்தைகளாகக் கொப்பளிக்கிறது லீனாவிடம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''எதற்கெடுத்தாலும் இந்திய இறையாண்மை!''

''சென்சார் போர்டின் மீது கடுமையான கோபமோ?''

''எதற்கெடுத்தாலும் இந்திய இறையாண்மை!''

இந்தக் கோபம், தனிப்பட்ட வகையில் ஆனது அல்ல. இலங்கை போர்க் குற்றங்கள் பற்றி 'சேனல் 4’தான் உண்மைச் செய்திகளை வெளியிடுகிறது. தணிக்கையே உண்மையை மறைக்கத்தான் பயன்படுகிறது. குஜராத்தில் நடந்த அக்கிரமங்களின் ஒரு சிறிய பங்குகூட இன்னும் நம்முன் வைக்கப்படவில்லை. மணிப்பூரில் ராணுவத்துக்கு எதிராகத் தாய்மார் கள் ஆடைகளைத் துறந்து போராட்டம் நடத்தினார்கள். காஷ்மீரில் ராணுவத்தை மக்களே கற்கள் எறிந்து விரட்டுகிறார்கள். 'சேனல் 4’ வெளியிட்ட போர்க் காட்சிகளில், சித்ரவதைக் காட்சிகளில் இந்திய வீரர்களும் இருக்கிறார்கள். ஆனால், இவற்றை எல்லாம் காட்சிப்படுத்த முடியாது. எல்லாவற்றுக்கும் இந்திய இறையாண்மை என்று ஒரு வார்த்தையைத் தயாராக வைத்து இருக்கிறார்கள்!''

''ஏன் இந்தப் படத்துக்கு இவ்வளவு பிரச்னைகள்?''

''கலையா, தொழில்நுட்பமா, உண்மையா என்று வரும்போது, நான் உண்மையைத்தான் தேர்ந்தெடுத்தேன். எனக்கு மொழி, தேச, இன அபிமானங்கள் கிடையாது. இந்தப் படத்தில் கொலைகார அரசாங்கங்களின் அசல் முகத்தைக் காட்டி இருக்கிறேன். விடுதலை இயக்கங்களும் என் விமர்சனத்துக்குத் தப்பவில்லை. ஈழப் பிரச்னையை மேடைகளில் பேசி பிழைப்பு நடத்துகிறவர்களையும் சாடி இருக்கிறேன். நான் முழுதாக மக்கள் பக்கம் மட்டுமே நின்று இருக்கிறேன். எது நல்லது, எது கெட்டது எனத் தீர்மானித்துத் தேர்ந்தெடுக்கும் பக்குவம் மக்களுக்கு உண்டு. நிறைய நாடுகளில் தணிக்கை என்பதே கிடையாது. 'சென்சாருக்கு ஏற்றபடி கருத்துக்களைச் சாமர்த்தியமாகச் சொல்லலாமே’ என்கிறார்கள் சிலர். வியாபாரத்துக்குத்தான் சாமர்த்தியங்கள் தேவை. செங்கடல், இந்திய- இலங்கை அரசுகளையும், பதவிக்காக ஆயிரக் கணக்கான உயிர்களைப் பலிகொடுத்த ஓட்டுக் கட்சிகளையும், விமர்சனம் செய்யும் படம். அடுத்த மாதம் திரைக்கு வருகிற இந்தப் படம், ஈழத்தின் அசலான முகத்தை முன் வைக்கும்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism