Published:Updated:

மன்னிப்பாயா?

ம.கா.செந்தில்குமார்

மன்னிப்பாயா?

ம.கா.செந்தில்குமார்

Published:Updated:
##~##

''இன்றைய இளைஞர் கள் இந்தப் படத் தைப் பார்த்தால், நிச்சயம் தவறு செய்ய அஞ்சுவார்கள்'' - உறுதியாகப் பேசுகிறார் இயக்குநர் சரோ ஸ்ரீராம். 'தேரோடும் வீதியிலே’ பட இயக்குநர்.

'' 'சிறு துளி பெரு வெள்ளம்’ நாம் அறிந்த பழமொழி. அதேபோல் நாம் செய்த சின்னச் சின்ன தவறுகள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மன்னிப்பாயா?

எப்படிப் பின்விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பதுதான் கதை. என் ஹீரோ, எது சரி என்று படுகிறதோ, அதைச் செய்துவிட்டுப் போய்க்கொண்டே இருப்பான். எவ்வளவோ தவறுகள் செய்தும் அதற்காக வருந்தாதவன், செய்யாத ஒரு தவறுக்காகச் சிறை செல்கிறான். அங்கு இவனால் பாதிக்கப்பட்ட பலரைச் சந்திக்கிறான். தண்டனை முடிந்து திரும்பி வருபவன், அம்மாவின் சொல்படி தன்னால் பாதிக்கப்பட்டவர்களிடம் சென்றுமன்னிப்பு கேட்கிறான். பாதிக்கப்பட்டவர்கள் அவனை மன்னித்தார்களா என்பதுதான் படம்!''

''உங்க டீம் பற்றி சொல்லுங்கள்?''

''பிரதீப் என் ஹீரோ. நான் என்னவெல்லாம் சொன்னேனோ ஏன், எதற்கு என்று கேள்வி கேட்காமல் நடித்தான். ஒரு நிர்வாணக் காட்சி. இரவு 9 மணி தொடங்கி அதிகாலை 5 மணி வரை அந்தக் காட்சியை எடுத்தோம். சேறு சகதியில் விழுந்து புரண்டு, காயங்களுடன் வந்ததைப் பார்த்து, 'இவன் நிச்சயம் வெற்றி பெறுவான்’ என்று நம்பிக்கை வந்தது.

மன்னிப்பாயா?

ஹீரோயின் பாயல் கோஷ், மோகன்பாபு மகனுடன் 'பிரணயம்’ என்ற தெலுங்குப் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகம். பிரபல ஒளிப்பதிவாளர் சரோஜ் குமார்பாடியின் மகன் தீபக் குமார்பாடிதான் ஒளிப்பதிவு. இசை இமான். இது அவருக்கு இன்னொரு 'மைனா’வாக இருக்கும்.

'சக்கூசி’ என்ற கேரக்டரில் ரமேஷ் என்பவரை நகைச்சுவைக் கலைஞனாக அறிமுகப்படுத்து கிறோம். மொத்தத்தில் திருப்தியான டீம்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism