Published:Updated:

சினிமா விமர்சனம்: வாத்தியார்

சினிமா விமர்சனம்: வாத்தியார்

சினிமா விமர்சனம்: வாத்தியார்

சினிமா விமர்சனம்: வாத்தியார்

Published:Updated:
சினிமா விமர்சனம்: வாத்தியார்
சினிமா விமர்சனம்
சினிமா விமர்சனம்: வாத்தியார்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சினிமா விமர்சனம்: வாத்தியார்
 
சினிமா விமர்சனம்: வாத்தியார்
சினிமா விமர்சனம்: வாத்தியார்

ர்ஜுன் என்றால், ஆக்ஷன் வாத்தியார்தானே!

கும்பகோணத்தில் நேர்மையான ஆசிரியராக அர்ஜுன். கும்பகோணம் பள்ளியில் தீ விபத்து நடந்து, அப்பாவி மாணவர்கள் தீக்கிரையாகிறார்கள். அதற்குக் காரணமான அத்தனை அரசு அலுவலர்களையும் மீடியா முன் அடித்துத் துவைக்கிறார் அர்ஜுன். அடி வாங்கிய ஒருவர் இறந்துவிட, ஜெயிலுக்குப் போய்த் திரும்பும் அர்ஜுன், அநியாயங்களுக்கு எதிராகத் தீர்ப்பு எழுதும் ராபின்ஹூட் வாத்தியார் ஆகிறார். அரசாங்கத்தை நம்பாமல் அர்ஜுனிடம் வருகிறார்கள் பாதிக்கப்படும் ‘பப்ளிக்’. அர்ஜுனை ஒழிக்க அலைகிறார் அஸிஸ்டென்ட் கமிஷனர் பிரகாஷ்ராஜ். மக்களின் உயிருக்கு உலை வைக்கத் துடிக்கும் முன்னாள் முதல்வருக்கும் அர்ஜுனுக்கும் பிரகாஷ்ராஜ் மூலம் மோதல் வருகிறது. யார் ஜெயித்தார்கள் என்பது க்ளைமாக்ஸ்!

சினிமா விமர்சனம்: வாத்தியார்

பள்ளிகளை நடத்துவதில் இருக்கும் அலட்சியங்களையும், சட்ட மீறல்களையும் வெளிச்சம் போட்டுக் காட்ட நினைத்தது இயக்குநர் ஏ.வெங்கடேஷின் நல்ல முயற்சி. அதற்காகக் கும்பகோணம் பள்ளி தீ விபத்தைக் கதைக்குள் கொண்டுவந்ததுகூடச் சரி. ஆனால், அர்ஜுன் தனியாளாகப் புகுந்து புறப்பட்டு, தீ விபத்துக்குக் காரணமானவர்களை மக்கள் புடைசூழ புரட்டி எடுப்பதில் ஆரம் பித்து, அத்தனையும் ஹெவி டோஸ்!

ஆட்டுக்குத் தாடி மாதிரி, ஆக்ஷன் படத்துக்கு ஃபார்முலா நாயகியாக, மல்லிகா கபூர். ஹீரோ பின்னாடியே அலைகிறார்; அவ்வளவே!

முன் பாதி முழுவதும் அர்ஜுனிடம் சவால்விட்டு உலா வரும் போலீஸாகவும், தன்னால் முடியாததை அர்ஜுனைத் தூண்டிவிட்டு நடத்துபவருமாக பிரகாஷ்ராஜைக் காட்டியதில், ‘இப்படியெல்லாம் போலீஸ் இருக்குதா என்ன?’ என்று ஆயாசம் வருகிறது. இருந்தாலும், இரு வேறு நடிப்பால் அதைச் சுவாரஸ்யமாக்கி இருக்கிறார் பிரகாஷ்ராஜ்.

சினிமா விமர்சனம்: வாத்தியார்

அர்ஜுனைவிட அதிகப்படியான பில்டப்புடன் அறிமுகமாகும் வடிவேலு சில இடங்களில் சன்னமாக புன்னகைக்க வைக்கிறார். ஊர் பேர் தெரியாதவ னிடமெல்லாம் அடி வாங்கும் காமெடி அலுக்கத் தொடங்கிவிட்டது. டிரெண்டை மாத்துங்க கைப்புள்ள!

படத்தின் முன்னாள் முதல்வராக வரும் பிரதீப் ராவத் போடும் ஆர்டர்களை ஆட்சி மாறிய பிறகும் டி.ஜி.பி. வரை அலறியடித்துச் செய்து முடிக்கிறார்கள். இது எந்த ஊர் லாஜிக்கோ!

சினிமா விமர்சனம்: வாத்தியார்

பொறி பறக்கும் ஆக்ஷன் காட்சிகளை சிந்தாமல் சிதறாமல் அள்ளி வழங்கியுள்ளது கே.எஸ். செல்வராஜின் கேமரா.

ரௌடிகளைக் கொன்று யாரிடமும் சிக்காமல் ஒற்றை ஆளாக ஊருக்குள் வலம் வருவது, கொள்கையை மீறி, பணத்துக்காக பிரதீப் ராவத் சொல்லும் வேலைகளைச் செய்ய அர்ஜுன் ஒப்புக்கொள்வது, பின் மூடப்பட்ட சவப்பெட்டிக்குள் இருந்து உயிர்த்தெழுவது என பல ஸீன்களில் வரும் லாஜிக் பொத்தல்கள் பற்றியெல்லாம் பேசினால் லெட்ஜர் சைஸ் புக் தேவைப்படும்.

இருந்தாலும், டைம் - பாஸுக்குக் கியாரண்டி கொடுக்கிற அடிதடி வாத்தியார்!

 

 
சினிமா விமர்சனம்: வாத்தியார்
\ விகடன் விமர்சனக் குழு