மீண்டும்... வருகிறார் பெரியார்!

‘கி   ழவனல்ல அவன் கிழக்கு திசை
இருள் கிழித்தெழும் கதிரவன் உலகின் மிசை!’

‘‘வெட்கமா இருந்தாலும் நான் சொல்றதுதான் உண்மை. சாஸ்திரம், புராணம் எல்லாம் சித்திரிக்கிற பெண்களைவிடப் பத்து மடங்கு அதிகமா, புருஷனுக்காக வாழ்கிற பெண் அடிமையாகத்தான் நீ வாழறே! இதெல்லாம் தெரிஞ்சும், அது எனக்குச் சௌகரியமாஇருக்கிறதால அமைதியா ஏத்துக்கிறதை நினைச்சு நான் வெட்கப்படுறேன்!’’

-காதல் மனைவி நாகம்மையின் கண்கள் பார்த்துப் பேசுகிறார் பெரியார்.

‘‘ஷாட் ஓகே..!’’ என்றதும், அரை நூற்றாண்டுக்கு முந்தைய அரையிருளில் நிற்கிற அந்த காரைக்குடி வீட்டுக்குள் பளீரென்று வருகிறது மின் வெளிச்சம். பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாராக சத்யராஜ். அவரின் முதல் மனைவி நாகம்மையாக ஜோதிர்மயி. ஞான ராஜசேகரன் இயக்கத்தில், தங்கர் பச்சானின் ஒளிப்பதிவில், ஈரோட்டுச் சூரியனின் வாழ்க்கை வரலாறு ‘பெரியார்’ என்கிற தலைப்பில் சினிமா வாக வளர்கிறது காரைக்குடியில்!

தனது நெடுங்காலக் கனவுக்குச் சிறகு முளைத்திருக்கிற பெரு மகிழ்ச்சி மின்னுகிறது சத்யராஜின் விழிகளில்.

‘‘நான் நடிச்சது நூறு படங்களுக்கு மேலே இருந்தாலும், நடிச்சேன்னு சொல்லிக்கிறதுக்கு ஆறேழு படங்கள் தான் மனசில் நிற்கும். அது எல்லாத் தையும் தாண்டிய என் ஆத்மார்த்தமான தேடலின் நாயகனான பெரியாரா இப்போ நடிக்கிறது, ‘இது போதும்டா, இந்த வாழ்க்கைக்கு!’ன்னு தோணுது.

20-ம் நூற்றாண்டின், உலகின் தலை சிறந்த தலைவர்களில், நல்ல மனிதர்களில் ஒருவர் பெரியார். அவரோட பங்களிப்பு மட்டும் இல்லைன்னா தமிழனும், தமிழ் மண்ணும் நாறி, நாசக்காடாகி இருக்கும். அப்படிப்பட்ட பெரியார் வேஷத்தைப் போடும்போது, இன்னொரு தடவை பிறந்தது போல இருக்கு.

பத்து வருஷத்துக்கு முன்னாடி பெரியார் திடலில் நடந்த ஒரு கூட்டத்தில், ‘பெரியார் வேஷம்தான் என்னோட கனவுக் கதாபாத்திரம். யாராவது பெரியார் படத்தை எடுக்க முன்வந்தா, அதில் சம்பளமே வாங்காமல் நடிப்பேன்’னு சொல்லியிருந்தேன். இப்போதான் காலம் கூடி வந்திருக்கு. இதோ ஞானராஜசேகரன் சார் இயக்கும் இந்தப் படத்தில், இதுவரை உலக சினிமாவில் யாரும் வாங்காத சம்பளத்தை வாங்கப்போறேன். அது என்னன்னா, என்னையே நான் புதுப்பித்துக்கொள்வது’’ என்று நெகிழ்கிறார்.

‘‘இப்போ என்னை முழுக்க ஆக்கிரமிச்சிருக்கிறவர் பெரியார்தான். பெரியாரைப் பார்த்தவங்க, பெரியாரோட பழகினவங்கன்னு தேடித் தேடிப் போய்ப் பார்த்தேன். பெரியாரின் பாடி லாங்வேஜ், மேனரிசம் எல்லாத்தையும் தெரிஞ்சுக்கிட்டேன். அவரைப் பற்றிக் கிடைத்த எல்லா வீடியோ, ஆடியோ பதிவுகளையும் பார்த்தேன், கேட்டேன். ரொம்ப சீரியஸான விஷயங்களை நறுக்குன்னு நகைச்சுவையா சொன்னவர் அவர்.

பொதுவா, வரலாற்று நாயகர்களின் வாழ்க்கையைப் பார்த்தால், கிட்டத்தட்ட ஒரே நேர்க்கோட்டில்தான் இருக்கும். ஆனால், பெரியார் தன் வாழ்க்கையில் நகரசபை சேர்மன், ஆசிரமவாசி, வியாபாரி, புரட்சிக்காரர் என ஏழெட்டுவிதமான தோற்றங்களில் இருந்திருக்கிறார்.

1958-ல் குன்றக்குடி அடிகளாருடன் பெரியார் ஒரு கூட்டத்தில் பேசுகிறார். அப்போதான் பெரியாரோட குரலில் ஒரு சின்ன தடுமாற்றம் தெரியுது. இளமைக்கு விடை கொடுத்து, முதுமை தொட்டுப் பார்க்கிற பருவம் அது. இந்தப் படத்தில் பெரியாரோட தோற்றத்துக்கு காலவரையறையாக அந்த பொதுக்கூட்டத்தைதான் முன்னும் பின்னுமாக வைத்துச் செய்கிறோம்’’ என்பவர்,

‘‘நடிகர் திலகம் சிவாஜி சார், தந்தை பெரியாரின் வேடத்தில் நடிக்க ஆசைப்பட்டார். ஆனா, அது முடியாமல் போய்விட்டது. இது ‘அன்னை இல்லம்’ தன் செல்லப் பிள்ளைக்குக் கொடுத்த பரிசு என்றுதான் எனக்குத் தோணுது. முதல்வர் கலைஞரும் இந்தப் படத்துக்கு 95 லட்சம் ரூபாய் உதவி பண்ணியிருக்கார். அவருக்கும் இந்தப் படத்தில் அக்கறை இருக்கு. பெரியார் பற்றிப் படம் எடுத்துக்கொண்டு இருக்கிற இந்தக் குழுவை தமிழகத் தலைவர்கள் அனைவருமே கவனிக்கிறார்கள். காரணம், பெரி யாரின் பாதிப்பு இல்லாமல் இங்கு தமிழக அரசியலே கிடையாது. இது தமிழ் நாட்டின், தமிழ் மக்களின் சினிமா!’’ என்கிறார் சத்யராஜ்.

‘‘பாரதியை சினிமாவாக்கியதற்குக் கிடைத்த வரவேற்புதான், இன்று பெரியாராக வளர்ந்து நிற்கிறது. இது என் கலைவாழ்வின் கனவு!’’ என்கிறார் இயக்குநர் ஞானராஜசேகரன்.

‘‘காலத்தை மீறிக் கனவு காண்கிற ஒரு மகாகவி சந்திக்கிற தவிப்புகளின் கதைதான் ‘பாரதி’. காலங்களின் கனவை நினைவாக்கத் துடித்த ஒரு கலகக்காரனின் கதை ‘பெரியார்’.

‘நான் சில்லறை விஷயங்களைப் பேச வந்தவனில்லை. சமுதாயத்தின் இழிவுகளைப் புரட்டிப் போட வந்த அழிவு வேலைக்காரன்’ என்று சொன்னவர் பெரியார். எதிர்காலத் தலைமுறைகளையும் தன் தோளில் தூக்கிச் சுமந்த புரட்சிக்காரர். அதுதான் இந்தப் படத்தின் அடிநாதம்.

‘கொஞ்சம் ஏமாந்தா ராமசாமி எல்லாத்தையும் புரட்டிப் போட்டுடு வான்’னு பெரியாரின் அம்மா சின்னத் தாயம்மாள் சொல்றாங்க. அதிகம் குறும்பு பண்ணுகிற தன் குழந்தையைப் பற்றிய ஒரு தாயின் பெருமிதமான வார்த்தைகளாக இவை இருந்தாலும், பின்னாளில் பெரியார் உண்மையாகவே இந்த மண்ணைப் புரட்டித்தான் போட்டார்.

94 வருடங்கள் அவர் வாழ்ந்த வாழ்க்கையில், மூன்று நிலைகளைக் கடந்துதான் அவர் வருகிறார். ஈரோட்டில் புகழ்மிக்க செல்வாக்கான வியாபாரி, 29 கௌரவப் பதவி களை வகித்தவர், கோயில் தர்மகர்த்தாவாக இருந்தவர், ஈரோடு நகரசபை சேர்மனாகப் பதவி வகித்தவர், பின்னர் சீர்திருத்தவாதி. இந்த மனிதர்கள் மீது சுமத்தப்பட்ட சடங்கு, சம்பிரதாயம், அடிமைத்தனம் என அவர் எதை எதையெல்லாம் அறுத்தெறிய விரும்பினாரோ, அவை எல்லாம் பெரியாரின் வீட்டுக்குள்ளேயே இருந்தன. ஆசாரமான குடும்பத்தில் பிறந்த, வசதியான வீட்டுப் பிள்ளை. ஒவ்வொரு தலைவருமே தங்களுக்கு நேர்ந்த ஏதாவது ஒரு பாதிப்பின் காரணமாகப் போராட வந்திருப்பார்கள். ஆனால், பெரியார் அப்படி இல்லை. தனக்கும் மனிதர்களுக்குமான தொடர்பின் மூலமாகவும் அனுபவத்தின் மூலமாகவும் தன்னெழுச்சியாக வந்த சமூக வேலைக்காரர் பெரியார்!’’ என்கிறார் ஞானராஜசேகரன் சிலிப்பாக!

பெரியாரைத் தரிசிக்கிற முதல் விழியாக கேமராவில் அமர்ந்திருக்கும் தங்கர்பச்சான், இந்த அனுபவத்தைப் பெருமிதமாக உணர்கிறார். ‘‘எப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு இது. நடிகர் சத்யராஜை அதிகாலையிலும், இரவிலும்தான் பார்க்கிறோம். நாளெல்லாம் நாங்கள் பெரியாருடன்தான் வாழ்கிறோம்’’ என்று சிலாகிப்பவர்,

‘‘இதைக் கேளுங்க. ‘நீங்க நல்லதா நினைச்சு சில விஷயங்கள் பண்றீங்க. ஆனா, சமூகம் அது மாதிரி இல்லை. இப்படியே போனா, ஒரு நாள் நீங்க உயர் சாதிக்காரன் ஒருவனின் துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலியாக நேரிடும்’னு, 1928-ல் பெங்களூரில் காந்தியடிகளைச் சந்திக்கிறபோது எச்சரிக்கிறார் பெரியார். என்ன ஒரு அனுமானம் பாருங்க! காலத்தைக் கிரகிக்கிற தன்மையும், அதை வெளிப்படுத்துறதும்தான் பெரியாரின் சிறப்பு. அதற்கு ஏத்த மாதிரிதான் நான் கேமராவையும் கையாள்கிறேன்.

தார்ச் சாலைகள் இல்லாத, மின்சாரம் இல்லாத ஒரு காலத்தில் வாழ்வதாக நாம் கற்பிதம் செய்துகொண்டால் மட்டுமே இதில் ஒளிப்பதிவு செய்ய முடியும். இந்தப் படத்தின் தேவைங்கிறது நம் சமூகத்தின் தேவை. இன்றைக்கு மதப் பயங்கரவாதமும் மத அடிப்படைவாதமும் எவ்வளவு மோசமாக வளர்ந்திருக்கு! ஆனால், இன்றைக்கும் கொஞ்சம் நிம்மதியாவும், மரியாதையாவும் இந்தத் தமிழகத்தில் நம்மால் வாழ முடிகிறதென்றால், அது பெரியார் இட்ட அடித்தளம்தான்!

வருங்காலத் தலைமுறைகளுக்கும் சேர்த்துச் சிந்தித்து அதற்காகப் போராடிய தலைவர். அதன் பலனை இன்று அனுபவித்துக்கொண்டு இருக்கிற, அனுபவிக்கப்போகிற தலைமுறைகளுக்காகவும் நாங்கள் இணைந்து எடுக்கிற படம் இது.

பெரியாரை கடவுள் மறுப்பு என்கிற ஒரு சிமிழுக்குள் அடக்கி விட முடியாது. கடவுள் மறுப்பு, பெண் விடுதலை, சாதி ஒழிப்பு, சமூக விடுதலை, மூட நம்பிக்கை எதிர்ப்பு, கள்ளுக்கடை மறியல், ஆலயப் பிரவேசம் என்று சமூகத்தின் எல்லாத் தளங்களிலும் களப் பணியாற்றிய மனிதர் அவர். அவை தமிழர்களுக்கு மட்டுமானது இல்லை; ஒட்டுமொத்த இந்திய சமூகத்துக்குமானது!

பொதுவாழ்விலும், அரசிய லிலும், படைப்பு ஊடகங்களிலும் இன்று ஏற்பட்டிருக்கிற நெருக்கடியான சூழலில் பெரியார் படம்... கலகத்தின் குரல், காலத்தின் பாடம்!’’ என்கிறார் தங்கர்பச்சான்.

பெரியாரைப் பற்றிய பல்லவனின் பாடல்தான் நினைவுக்கு வருகிறது...

‘மண் மீது அறிவுக்கு முடி சூட்டினான்
மானமும் அறிவும் பெற உணர்வூட்டினான்
கண் மூடிக் கொள்கைக்குக் கனல் மூட்டினான்
கண் மூடும் வரை இங்கே கடனாற்றினான்!’

\ டி.அருள்எழிலன்
படங்கள்: கே.ராஜசேகரன்