Published:Updated:

‘‘ரஜினியின் துரோகம்!’’: பாரதிராஜா பொளேர்!

‘‘ரஜினியின் துரோகம்!’’: பாரதிராஜா பொளேர்!

‘‘ரஜினியின் துரோகம்!’’: பாரதிராஜா பொளேர்!
‘‘ரஜினியின் துரோகம்!”
‘‘ரஜினியின் துரோகம்!’’: பாரதிராஜா பொளேர்!
‘‘ரஜினியின் துரோகம்!’’: பாரதிராஜா பொளேர்!
 
பாரதிராஜா பொளேர்!
‘‘ரஜினியின் துரோகம்!’’: பாரதிராஜா பொளேர்!
த.செ.ஞானவேல்

‘‘எ ன்னய்யா, எலெக்ஷன் டைம்ல பேட்டியா?’’ என்றபடி எதிரில் வந்து அமர்கிறார் பாரதிராஜா. மனதில் படுகிற எதையும் ஒளிவு மறைவு இல்லாமல் போட்டு உடைக்கிற படைப்பாளி. சிறிது காலம் சினிமாவை மறந்து, காவிரிப் போராட்டம், தமிழ்த் திரை சேனல்... என்று பரபரப்பாகத் திரிந்தவர், மீண்டும் தன் தாய் மடியான சினிமாவுக்கே திரும்பியிருக்கிறார்.

‘‘ரஜினியின் துரோகம்!’’: பாரதிராஜா பொளேர்!

‘‘தமிழில் பெரிய இடைவெளி விட்டுட்டு, என்ன திடீர்னு இந்தி படம் பண்ண ஆரம்பிச்சுட்டீங்க?’’

‘‘காலமும் அனுபவமும் கணக்கு வாத்தியார் மாதிரி. காதைத் திருகி பாடத்தைக் கத்துக் கொடுத்துடும். இடையில் ரெண்டு வருஷம் சினிமாவை மறந்துட்டு என்னென்னவோ செய்துட்டிருந்தேன். எங்கே, எனக்குள் இருக்கிற படைப்பாளியைக் கொன்னுட்டு ஒரு அரசியல்வாதி அந்த இடத்தில் வந்து உட்கார்ந்துடுவானோன்னு பயம் வந்துருச்சு. அதான், எல்லாத்தையும் மூட்டை கட்டிட்டு சினிமாவை நோக்கி வந்துட்டேன்.

புதுப் படத்தை இங்கிலீஷ்ல பண்ணணும்னு ஆசைப்பட்டேன். வெள்ளைக்காரனுக்குப் புரியவைக்க இன்னும் நேரம் எடுக்கும். அதான் தமிழுக்கும் இங்கிலீஷ§க்கும் நடுவில் இருக்கிற இந்தியைத் தேர்ந்தெடுத்தேன். ஏன்னா, உலகம் முழுக்க சினிமாவுக்கு ஒரே இலக்கணம்தான்!

‘‘ரஜினியின் துரோகம்!’’: பாரதிராஜா பொளேர்!

‘‘அப்போ, தமிழ் மக்களை மறந்துட்டீங்களா?’’

‘‘தொப்புள்கொடியை மறக்க முடியுமா?

‘மயில்’னு ஒரு ஸ்கிரிப்ட்டை தமிழ்ல ரெடி பண்ணேன். முப்பது வருஷத்துக்கு முன்னால் தமிழ் மக்களோட தூக்கத்தைக் கெடுத்த என்னோட ‘பதினாறு வயதினிலே’ மயில் இப்போ திரும்பி வந்தாள்னா எப்படி இருக்கும்? அப்படி ஒரு கதை. ஆனா, அது சின்ன பட்ஜெட் படம்.

ஒரு இடைவேளைக்குப் பிறகு திரும்பி வர்றப்போ, இன்னும் பெருசா இருக்கணும்னு நினைச் சேன். ‘சினிமா’வுக்குள்ளேயே ஒரு சினிமா இருக்கும்ல, ‘கல்லுக்குள் ஈரம்’ போல, அப்படி ஒரு கதை பிடிச்சேன். படத்துக்குப் பேரே ‘சினிமா’.

ஒரு ஹீரோயினை, ஒரு டைரக்டர் அறிமுகப்படுத்துகிறார். மூணு பருவங்கள் கடந்து அந்த உறவுக்குள் நடக்கிற போராட்டம்தான் கதை. இந்தக் கதையை சும்மா பதினஞ்சு நிமிஷம் நானா படேகரிடம் சொன்னேன். ‘எப்போ ஷூட்டிங் போலாம் சார்?’னு ரெடியாகிட்டார். லண்டன், கனடா, ஹம்பின்னு ஷூட்டிங் கிளம்புறேன். நிச்சயம் எல்லாரையும் திரும்பிப் பார்க்கவெப்பான் பாரதிராஜா. அப்புறம் ஆரம்பிக்கும் ‘குற்றப் பரம்பரை’... என் கனவுப் படம்!’’

‘‘இதையே அஞ்சு வருஷமா சொல்லிட்டிருக்கீங்க?’’

‘‘யோவ், நான் ரெண்டு வருஷமா படம் எடுக்கலை. அவ்ளோதான். மற்றபடி எப்பவும் தமிழ் சினிமாவில்தான் இருக்கேன். என்ன, நான் சினிமாவுக்கு வந்த புதுசுல மொத்தமே அஞ்சு ஆறு குதிரைகள்தான் இருந்துச்சு. அதுல நான் தனியா அடையாளம் தெரிஞ்சேன். இப்ப ஐம்பது குதிரைகளுக்கு மேல வந்தாச்சு. எதிரே யார் நிக்கிறாங்கன்னு தெரியாம மறைக்கிற அளவு புழுதி கிளம்புது. ஆனா, ‘குற்றப் பரம்பரை’ படம் எடுக்காம என் திரையுலக வாழ்க்கை முடியாது. விக்ரம்கிட்டே பேசிட்டேன். என் அடுத்த படம் அதுதான்!’’

‘‘தமிழ்த் திரை தொலைக்காட்சி என்னாச்சு?’’

‘‘அதை ஞாபகப்படுத்தாதீங்க. அதுல எனக்கு நிறைய காயங்கள்!

மீடியாவுல அரசியல் நுழைஞ்சா ஜனநாயகம் செத்துடும். தமிழ்நாட்டுல அதுதான் இப்போ நடக்குது. தமிழ் சினிமாவை வெச்சு பல கோடி லாபம் பார்க்கிற டி.வி-க்கள், சினிமா வளர எந்த உதவியும் பண்ணலை. முடிஞ்சவரைக்கும் காலை வாரிவிடற வேலையைத் தான் செய்தாங்க. சரி, நமக் குன்னு ஒரு ஊடகம் இருந்தா நல்லா இருக்கும்னு ஒரு சேனல் ஆரம்பிச்சோம். என்னையே சேர்மனாக்கினாங்க. ராத்திரி பகலா உழைச் சோம். தமிழர்கள் ஒரு தொலைக்காட்சியைத் தொடங்கினால், அதை தமிழ்நாட்டிலிருந்து ஒளிபரப்ப முடியாதபடி தடுத்தாங்க. அட, தமிழ்நாடு அரசே ஒரு குடும்பத் தொலைக் காட்சியின் துஷ்பிரயோகத்தைத் தடுக்க முடியாமல் தடுமாறும்போது, தனி மனிதர்கள் நாங்க என்ன செய்ய முடியும்?

என்னால சாகிற வரைக்கும் நல்ல இயக்குநரா இருக்க முடியும். ஆனா, இப்போ இருக்கிற அரசியல்வாதிகள் போல மாற முடியாதுப்பா!’’

‘‘ரஜினியின் துரோகம்!’’: பாரதிராஜா பொளேர்!

‘‘காவிரிப் பிரச்னைக்காகப் போராடினதெல்லாம்..?’’

‘‘அது அரசியல் இல்லை... ஒரு தமிழனின் உணர்வு. லட்சக்கணக்கான தமிழ் உழவர்களின் வாழ்க்கை. அதில் நான் விளையாடலை. அப்படி ஏதாச்சும் என் மனசில் இருந்தா, ‘போடுங்கம்மா ஓட்டு!’ன்னு நானும் இன்னிக்கு வீதி வீதியா வேன்ல வந்துட்டிருப்பேனே.

‘கர்நாடகத்துக்குப் போற நெய்வேலி மின்சாரத்தைத் தடுப்போம்’னு பண்ணினது ஒரு போராட்டத்தின் குறியீடு. அதை அரசியலாக்கிட்டாங்க. நான் ஏதோ அ.தி.மு.க-வுக்கு ஆதரவா போராட்டம் பண்றதா சொன்னாங்க. விஜயகாந்த் அதை அவரோட கட்சிக் கூட்டமாக்கப் பார்த்தார். ரஜினிகாந்த் அவர் பங்குக்கு தன்னால் முடிஞ்ச அளவுக்கு தமிழர்களுக்குத் துரோகம் பண்ணினார். எல்லோரோடவும் சேர்ந்து போராட வராம, நதிகளை இணைக்கணும்னு போராட்டத்தையே திசை திருப்பினார்.

ஆசை இருந்து அரசியலுக்குப் போக விரும்புறவங்க தாராளமா போகட்டும். ஆனா, மக்கள் பிரச்னையை வெச்சு விளையாடக் கூடாது. அப்படிப் பண்ணினால், நடக்கக் கூடாததெல்லாம் நடக்கும். ரஜினிக்கு இப்போ அதுதான் நடக்குது!’’

‘‘விஜயகாந்த்தைப் பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமா வர்றாங்களே?’’

‘‘சார், ‘ஆட்டுக் கார அலமேலு’ படம் வெற்றிகரமா ஓடினப்போ, அந்த ஆட்டை லாரியில் ஏத்தி ஊர் ஊரா அனுப்பிச்சாங்க. மக்கள் கட்டுச்சோறு கட்டிக்கிட்டு வந்து ஆட்டைப் பார்த்துட்டுப் போனாங்க. ஏன்னா, தமிழனுக்கு சினிமான்னா, பெத்த தாய்- தகப்பனகூட மறந்துடுவான்.

விஜயகாந்த் ஒரு நேர்மையான அரசியல்வாதியா, படிப்படியா உழைத்து மேலே வர என் வாழ்த்துக்கள். இப்பவும் சினிமால விஜயகாந்த், ரஜினிகாந்த் எல்லாம் என் நண்பர்கள்தான். ஆனா, அரசியல்னு வந்துட்டா, விமர்சனங் களைச் சந்திச்சேதான் ஆகணும்!’’

‘‘நடுவில் நீங்கள் அ.தி.மு.க. ஆதர வாளர் அவதாரம் எடுத்தீர்களே?’’

‘‘96-ல் அ.தி.மு.க-வைக் கடுமையாக எதிர்த்தவங்கள்ல நானும் ஒருத்தன். ஆனா, இந்த அம்மாவோட கடந்த அஞ்சு வருஷ ஆட்சி, மிகச் சிறந்த ஆட்சி. சங்கராச்சாரியார் கைதுல தொடங்கி மழை நீர் சேகரிப்புத் திட்டம் வரை ஜெயலலிதா நல்லாட்சி தந்திருக்காங்க.

இப்பவும் எனக்கு கலைஞரோட உழைப்பு, ஞாபக சக்தி, நட்புணர்வு எல்லாமே பிடிக்கும். கருத்து பேதம் கடந்து என்னை ஒரு கலைஞனா கட்டித் தழுவிக்கிற மனுஷன் அவர். அது வேற.

ஆனா, காமராஜரைத் தோற்கடிச்ச தி.மு.க-வின் கொள்கைகள் மீது எனக்கு உடன்பாடில்லை. ‘ஒரு ரூபாய்க்கு அரிசி தருவோம், இல் லைன்னா சவுக்கால அடிங்க’ன்னு வாக் குறுதி தந்து ஆட்சிக்கு வந்தார் அண்ணா. அதை நிறைவேற்ற முடியலை. இப்போ அதே ஃபார்முலாவில் கலர் டி.வி. தர்றதா கலைஞர் வாக்குறுதி தர்றதை ரசிக்க முடியலை.

தமிழ்நாட்டைத் தன் குடும்பமா நினைச்சவர், இப்போ தன் குடும்பத் தையே தமிழ்நாடா பார்க்க ஆரம்பிச் சுட்டார். தமிழகத்தில் கலைஞர் தொடங்கின வாரிசு அரசியல் இன்னிக்கு எல்லாக் கட்சியையும் பாதிச்சிருக்கு.

தி.மு.க. மட்டுமல்ல, இன்னிக்கு எல்லாக் கட்சிகளும் கொள்கைகளைக் கூட்டணிங்கிற குப்பைத் தொட்டியில் கொட்டியிருச்சு. எனக்கு ஓட்டு போடுற உரிமை உண்டுன்னா, என் கருத்தைச் சொல்ற உரிமையும் இருக்கு!’’

‘‘நீங்களே உங்கள் மகன் மனோஜை ஹீரோவாக்க முயற்சி செய்தவர்தானே. வாரிசை ஹீரோவாக்குவது தவறில்லை. அரசியல்வாதியாக்கினால் தவறா?’’

‘‘நான் என் மகனை சினிமாவுக்குக் கொண்டு வரச் செய்த முயற்சியில், கலைஞன் என்பதைத் தாண்டி அப்பா என்கிற பாசம் என் கலைக்கு குறுக்கே நின்னுச்சு.

வாரிசை யாரும் உருவாக்கக் கூடாது. உருவாக வேண்டும். அந்தத் தவறை நான் செய்யப்போய் என் கலைத் திறமையும் பாதிக்கப்பட்டுச்சு. என் மகன் திறமைக்கும் தீமை வந்துச்சு. அதை நான் இப்போது உணர்றேன். அதனால்தான் சொல்றேன். வாரிசு சினிமாவே தீங்கான துன்னா, வாரிசு அரசியல் இன்னும் ஆபத்து!’’

‘‘உங்கள் இரண்டு பிள்ளை களுக்கும் ஒரே நேரத்தில் காதல் திருமணமாமே?’’

‘‘வீட்ல சீக்கிரம் கல்யாண விசேஷம் இருக்கு. அது காதல் கல்யாணங்களா இல்லையான்னு சீக்கிரமே சொல்றேன். தமிழ்நாட்டுல திருப்புமுனையா இருந்த காதல் படங்களை எடுத்த நான் எப்படி காதலுக்கு விரோதியா இருப்பேன். உண்மையான காதலை இந்த பாரதிராஜா எப்போதும் வரவேற்பான். அது உண்மையான காதலாக இருக்கணும், அவ்வளவுதான். அதை எடைபோடுற தகுதியும் அனுபவமும் எனக்கு உண்டு. ஏன்னா, நான் இன்னும் வாழ்க்கையைக் காதலிச்சு வாழ்றவன். அது எல்லோருக்கும் தெரியும்!’’

 
‘‘ரஜினியின் துரோகம்!’’: பாரதிராஜா பொளேர்!
\ படங்கள்: ‘தேனி’ ஈஸ்வர்