விக்ரம்- ‘கன்’ ரௌடி... த்ரிஷா- கண் ரௌடி!

ராஜுமுருகன்

படங்கள்: ஜி.வெங்கட்ராம்

பி  ன்னி மில்ஸ் ஏரியாவில் ‘பீமா’ பட போட்டோசெஷன்!

களேபரமான ஷார்ட் கட் ஹேர் ஸ்டைல், கவ்விப் பிடிக்கிற டி-ஷர்ட், கிண்ணடித்திருக்கிற உடம்போடு விர்ர்ர்ரூம் விக்ரம். சீவி வைத்த தர்பூஸ் மாதிரி சிலுசிலுவென ஜில்ல்லீர் த்ரிஷா.

‘‘விக்ரம் சார், நீங்க டஃப் லுக்லயே இருங்க. த்ரிஷா... இன்னும் லவ்வபிளா சிரிங்க!’’- டைரக்டர் லிங்குசாமி சொல்லச்சொல்ல, சடசடவென அள்ளுகிறது ஜி.வெங்கட்ராமின் கேமரா!

‘‘விக்ரமும் த்ரிஷாவும் ‘சாமி’க்குப் பிறகு ‘பீமா’வில் இணையுறாங்க. படத்துல த்ரிஷாவுடன் விக்ரம் சாருக்கு ரகளையான லவ் போர்ஷன் இருக்கு. அது பிரமாதமா வரும்னு இப்பவே பட்சி சொல்லுதுங்க!’’- உற்சாகமாகப் பேசுகிறார் லிங்குசாமி...

‘‘தன்னை மட்டும் பார்த்துக்க புத்தி இருந்தா போதும். எல்லாத்தையும் தூக்கி சுமக்கணும்னா சக்தி வேணும். புத்தியும் சக்தியும் சேர்ந்து செஞ்ச மனுஷன்தான் இந்த பீமா. உடம்பால மட்டுமில்லை... மனசாலேயும் பயங்கர பலசாலி. சில பேர் ஷார்ப்பான ஒரு பார்வையிலேயே நம்மளை குலை நடுங்கவெச்சிடுவாங்க; அடுத்த செகண்ட் என்ன நடக்கப்போகுதுனு அலாரம் மாதிரி அவங்க மனசு சொல் லிட்டே இருக்கும். அவங்களைச் சுத்தி எப்பவும் ஒரு வைப்ரேஷன் இருந்துட்டே இருக்கும். அப்படி ஒருத்தன்தான் பீமா!’’

‘‘இது எது சம்பந்தமான கதை?’’

‘‘சென்னையில் இருக்கிற அண்டர் கிரவுண்ட் உலகத்தை மையமா வெச்சு சுழல்ற படம்.

எப்பவும் கத்தி, அருவா, துப்பாக்கினு தூக்கிட்டு மனுஷ உயிருக்கு அலைகிற அந்த உலகத்துக்குள்ளேயே இன்னொரு உலகம் இருக்கு. அது அவங்களுக்காக அவங் களே உருவாக்கிக்கிற உலகம். அங்கே நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியுமா நிறைய உணர்ச்சிப் போராட்டங்கள் உண்டு. தடதடக்கவைக்கிற ஆக்ஷன் கலவரத்துக்கு நடுவிலே, அவங்க உலகத்தின் சென்டிமென்ட்ஸ், காதல், நட்பு எல்லாத்தையும் கவிதையா, காமெடியா, ரணகளமா சொல் லிட்டே இருப்போம். ரொம்ப யதார்த்தம்னு சொல்ல முடியாது. செம மசாலான்னும் சொல்ல முடியாது. அது ரெண்டுக்கும் நடுவில் டிராவல் பண்றது தான் என்னோட ஸ்டைல்னு நினைக் கிறேன். ஆனா, ரொம்ப ஸ்டைலிஷா, செம ரிச்சா டெக்னிக்கலா வேற ஏரியாவை ட்ரை பண்ற படமா இது இருக்கும்!’’

‘‘விக்ரம் எப்படி..?’’

‘‘மிஸ்டர் பர்ஃபெக்ட்!

பக்கத்தில் நின்னாலே அவரோட உற்சாகம் நம்மையும் பிடிச்சுக்கும். இதைப் பண்ணலாமா, அதைப் பண்ணலாமானு எப்பவும் எதையாவது தேடி அலைகிற ஆள். இவரோட வேகத்துக்கு ஈடுகொடுக்கணுமேன்னு கொஞ்சம் பயமாவே இருக்கு.

படத்தில் சார்தான் பீமா. எங்க தஞ்சாவூர்ப் பக்கம், மோடு முட்டினு சொல்வாங்க. கரடுமுரடா அலைகிற ஆளுக்குத்தான் அப்படிப் பேரு. பொசுக்குனு கோபம் வந்தா போட்டுத் தள்ளிட்டுப் போயிட்டே இருப்பான்; நிதானமா யோசிச்சான்னா மொத்தமா நிர்மூலமாக்கிட்டுத்தான் ஓய்வான். அப்படி ஒரு கேரக்டர் இதில் விக்ரமுக்கு!

எப்ப என்ன பண்ணுவான்னே தெரியாம, பதறவைக்கிற ஆளு. விக்ரமுக்குள்ளே பாதி ரஜினி, பாதி கமல் இருக்காங்க. இது அந்த ரெண்டு பேருக்கும் தீனி போடுற படம். த்ரிஷா இதில் காலேஜ் பொண்ணு.

விக்ரம் சார் கன் வெச்சு ஆடற ரௌடின்னா, த்ரிஷா கண்ணாலேயே விளையாடற ரௌடி. இந்த ரெண்டு பேருக்கும் சட்டுனு ஒரு இடத்தில் பூக்கிற காதல் சுவாரஸ்யமா இருக்கும்.’’

‘‘வேற என்ன ஸ்பெஷல்..?’’

‘‘நானா படேகர்... இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருத்தர். பீமாவில் வெயிட்டான கேரக்டரில் நடிக்கிறார். ‘ஸாரிப்பா! நான் சவுத் இந்தியா பக்கம் வர்றதில்லையே’ன்னார். அப்புறம் அவரை வெச்சு பாரதிராஜா சார் பண்ற இந்தி படத்தோட பூஜைக்கு விக்ரம் போயிருந்தார். அங்கே விக்ரம் நானா படேகரிடம் பேசி, கதை கேட்க ஒரு அப்பாயின்மென்ட் வாங்கிட்டு எனக்கு போன் போட்டார். அடுத்த ஃப்ளைட்ல மும்பைக்கு ஓடிப் போய் படேகருக்கு கதை சொன்னேன். சொல்லி முடிச்ச நிமிஷம் ‘நான் நடிக்கிறேன்’னுட்டார். படத்தில் விக்ரமும் நானா படேகரும் ஆடப்போற ஆட்டத்தில் அலறப்போகுது தமிழ்நாடு’’- எனச் சிரிக்கிற லிங்குசாமி,

‘‘விக்ரம், ஏ.எம்.ரத்னம், ஹாரிஸ் ஜெயராஜ், ஆர்.டி.ராஜசேகர், கனல் கண்ணன்னு ரொம்ப பெரிய டீமை சேர்த்துட்டேன். இனிமே தி பெஸ்ட்டை கொடுக்க வேண்டியது என் பொறுப்பு. எனக்கென்ன கவலை... என்னோட பீமா இருக்காரே!’’ -அழகாகச் சிரிக்கிறார் லிங்குசாமி.