Published:Updated:

ஜாலி விலாஸ்!

ஜாலி விலாஸ்!

ஜாலி விலாஸ்!
ஜாலி விலாஸ்!
ஜாலி விலாஸ்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஜாலி விலாஸ்!
 
முளைக்கப் போகுது மு.கொ. அணி!
ஜாலி விலாஸ்!
ஜாலி விலாஸ்!
‘எ லெக்ஷன்’ என்றாலே, பிரபலங்கள் சிலருக்கு பி.பி. எகிறும். ‘நீங்கதான் ஏஜன்ட்டாம்ல?’, ‘லாஸ்ட் மினிட்ல வாய்ஸ் தரப் போறீங்களாம்ல?’, ‘டெல்லில பேசிட்டு இருக்கீங்களாமே?’ என கரட்டாண்டி நிருபர்களின் டார்ச்சர்... ‘உசிலம்பட்டியை வாங்கித் தாங்கண்ணே’, ‘சைதாப்பேட்டையை முடிச்சுக் குடுங்கண்ணே’ என விபரம் புரியாத விசுவாசிகளின் ரப்சர் என இவர்களுக்கு இது டென்ஷன் சீஸன். இந்த ‘பியாண்ட் தி ஸ்க்ரீன்’ பிரபலங்கள் தலைமறைவாக இடம்தேடி ஓடுகையில், விபரீத விபத்தாக நடக்கிறது சந்திப்பு.

இமயமலை. ‘சிவாஜி’ கெட்டப் ரஜினி, ‘‘ஹேய்... ஹேய்... இந்த சிவாஜிக்கு வாய்ஸ் கொடுத்து குட்டையைக் குழப்பவும் தெரியும், எஸ்கேப்பாகி மொட்டைய அடிக்கவும் தெரியும்!’’ என தனக்குத்தானே பேசியபடி ஓரு ஓரமாகப் புளியோதரை சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறார். அப்போது ‘‘ஏய்! இந்தா, உன்னத்தான். வந்துடு... வாய்ஸ் கொடு’’ என கோரஸாகக் குரல்.

பொட்டலத்தை விசிறிவிட்டு ரிவர்ஸில் ஓடத் தொடங்குகிற ரஜினி, யார் மேலோ இடித்துவிட, பதற்றமாக நிமிர்ந்து பார்க்கிறார். அங்கே கோரஸாகச் சிரிக்கிறார்கள் ம.நடராஜன், கி.வீரமணி, சோ, சுப்பிரமணியம் சுவாமி!

சோ: ‘‘ம்க்குர்ர்ம்...(கனைக்கிறார்), தெரிஞ்சோ தெரியாமலோ... ம்க்குர்ர்ம்... நாமெல்லாம் சந்திச்சிருக்கோம். எனக்கென்னவோ பை பிரிவீயஸ் எலெக்ஷனைக் கம்பேர் பண்ணும் போது, வர்ற தேர்தல் செம டஃப் ஃபைட்டா இருக்கும்னு தோணுது. இந்த எலெக்ஷன்ல யார் சி.எம். சேரை மிஸ் பண்ணாலும் அவங்களுக்கு இன்னொரு சான்ஸ் எப்பவும் கிடைக்காது. வாங்க, டீடெயில்டா டிஸ்கஸ் பண்ணுவோம். ம்க்குர்ர்ம்...’’ என்றதும், ‘சம்போ சிவசம்போ... அம்போ நாடு அம்போ’ என்றபடி, தீ மூட்டி சுற்றி உட்கார்கிறார்கள்.

சு.சுவாமி (தடாலடியாக): ‘‘அதோ வெள்ளைக் காக்கா கத்தறதைக் கேட்டேளா? நல்ல சகுனம். நான் டிசைட் பண்ணிட்டேன். கமிங் எலெக்ஷன்ல நாம அஞ்சு பேரும் கூட்டணி அமைச்சா, தூள் பண்ணிரலாம். ரஜினியை எத்தியோப்பியா அதிபராக்கிட்டு, நடராஜனை ஜப்பான் பிரதமராக்குறதுதான் என் லட்சியம். தமிழ்நாட்டுக்கு சந்திரலேகாவை சி.எம். ஆக்கிடலாம். நான் பக்ரைன் மன்னர்ட்ட பேசிட்டேன். பார்டர்ல பின்லேடன் வெயிட்டிங்!’’

அப்போது நடராஜனின் செல்போன் ஒலிக்கிறது. ‘உஷ்ஷ்’ என மற்றவர்களை உஷார்படுத்திவிட்டு, ‘‘ஹலோ.. நடராஜன் ஸ்பீக்கிங்! ஆமாங்க... கார்டன்லதான் இருக்கேன். ஆமாமா, ஸீட்டிங் அலாட்மென்ட் டிஸ்கஷன் போயிட்டிருக்கு. அடடா... என் கையில என்னங்க இருக்கு? என் பேச்சை சி.எம். கேட்கி றாங்கனு நீங்க நம்பினா, அதுக்கு நான் ஆமானு பதில் சொல்லணும்னு நீங்க எதிர் பார்த்தீங்கன்னா, நான் என்னன்னு சொல்றது? என்னது... அது உடைச் சிரலாம். நாகப் பாம்பைத் தாண்டலாம்... சீண்டினா சும்மா விடுமா? டோன்ட் ஒர்ரி!’’ எனப் பேசிவிட்டு நிமிர்கிறார்.

கி.வீரமணி: ‘‘என்னங்க சொல்றீங்க, ஒண்ணுமே புரியலியே?’’

நடராஜன்: ‘‘அட, சமயத்துல எனக்கே புரியாது. அப்பப்ப இது மாதிரி ஏதாவது அள்ளிவிடலேன்னா, நம்மளை மறந்துடு வானுங்க... மஜா மஜா!’’ எனக் கையை மடக்கி சிம்பல் காட்டிச் சிரிக்கிறார்.

ஜாலி விலாஸ்!

கி.வீரமணி: ‘‘மஜாவா..? கலைஞரும் ஜெயலலிதாவும் கைவிட்டு பஞ்சராகிக் கிடக்கிற பகுத்தறிவு வண்டிக்கு நீங்க பஞ்சர் ஒட்டி பெட்ரோல் போடுவீங்கனு பார்த்தா, மாறிமாறி பொய் சொல்றீங்க. மஜாங்கிறீங்க.. என்னங்க இது?’’

நடராஜன்: ‘‘அவசரப்படாதீங்க... அடுத்த மாசம் காதலர் தினம் வருதுல்ல. அதையட்டி தஞ்சாவூர்ல பிரமாண்ட மான தமிழர் காதல் விழா ஏற்பாடு பண்றோம். மதுரை ஆதீனம் கூப்பிடாமலே வந்துடுவாரு. நீங்க லாண்டரில கொடுத்த கறுப்புச் சட்டையை வாங்கி மாட்டிட்டு வந்துருங்க. திருமாவளவன், திருநாவுக்கரசர், கார்த்திக், செந்திலு, எல்.ஜி, சேதுராமன், மான்கொம்பு கண்ணப்பன், மச்சினன் திவாகரன்னு ஒரு கூட்டத்தைக் கூட்டி ஏழு கூட்டுப் பொரியலோட பந்தி போட்டோம்னா பாலிடிக்ஸ் வட்டாரம் பத்திக்கும்ல! ‘நாளைய தமிழகமே! இன்றைய இத்தாலியே’னு மதுரை ஆதீனம் என்னைப்பத்தி ஏதாவது பேசுவாரு. ‘என்ன நடக்குது, ஏது நடக்குது’னு அவனவன் மண்டையப் பிச்சுக்குவான்ல.. ஏன், ரஜினி சார், இந்த தடவை நீங்களும் வாங்களேன்... ஜாலியா டைம் பாஸ் ஆவும்!’’

ரஜினி: ‘‘அடி வயித்தைக் கலக்கினா வாந்திபேதி, அனாவசியமா பேசினா அரசியல்வாதி! இந்த சிவாஜி ஆக்ஷன்ல குரோர்பதி! பேச்சுல பிச்சாதிபதி.. இப்புடுச் சூடு!’’

சோ: ‘‘ம்க்குர்ர்ம்... இந்த எலெக்ஷனைப் பொறுத்தவரைக்கும் பார்த்தீங்கன்னா, கருணாநிதி சைட்ல நோ ஹோப்! எல்லோரும் ஆர்.ஏ.சி.யில் வெயிட் பண்ற பாசஞ்சர் போல இருக் காங்க. வைகோவுக்கு எந்த ரயில்னுகூட தெரியாமக் குழப்பமா இருக்கார். ராமதாஸோ எந்த ரயில் வந்தாலும் விழுப்புரம் டு சென்னை சீஸன் டிக்கெட் எடுத்துடற ஆள். ம்க்குர்ர்ம்... வென் கம்பேர் டு அரசன் முறுக்குக் கம்பிகள், அவங்க அலையன்ஸ் அவ்வ ளவு ஸ்ட்ராங்கா இல்லை. அவங்க ளோட வோட் பேங்க்ல கணிசமான வோட்டு பிரியும். ம்க்குர்ர்ம்.. அமராவதி பாலம் கேஸ்ல ஐ எக்ஸ்பெக்ட் சரமாரி சம்மன். இந்த சைட்ல ஜெயலலிதா சில நல்ல விஷயங்கள் பண்ணியிருக்காங்க. ஆனா, நூத்துக்கு நூறு மார்க் கொடுக்க முடியாது. பார்டர்ல பாஸ் பண்றாங்க. விஜயகாந்த் என்னென்ன வேடிக்கை காட்டப்போறார்னு தெரியலை. ரஜினி கூட நான் டிஸ்கஸ் பண்ண வேண்டி யிருக்கு. ம்க்குர்ர்ம்.. லெட்ஸ் ஸீ!’’

ஜாலி விலாஸ்!

கி.வீரமணி (மெதுவாக): ‘‘இவரு வேற டி.வி-யில ராசிக்கல்லு விக்கிறது மாதிரியே பேசிட்டிருக்காரே. மொட்டை யைத் தடவித் தடவியே குட்டையைக் குழப்பிடுவாரு போல இருக்கேப்பா!’’

ரஜினி (பதற்றமாகி): ‘‘ஏய்... ஏய்... கம்ப்யூட்டர்ல வந்தா வைரஸு, மூக்குல வந்தா சைனஸு, சிவாஜி வந்தாலே எதிரிக்கு மைனஸு! ஹா... ஹா...ஹா!’’

சோ: ‘‘ரஜினி, அல்ரெடி டி.எம்.கே. -வுக்கு வாய்ஸ் தந்தீங்க, வாஜ்பாய்க்கும் இரட்டை இலைக்கும் தந்தீங்க. ஐ திங் இந்தத் தடவை தே.மு.தி.க-வுக்கு வாய்ஸ் தந்தீங்கன்னா, விஜயகாந்த்தே டெரராக வாய்ப்பு இருக்கு. ம்க்குர்ர்ம்...’’

ரஜினி (மெதுவாக): ‘‘ஆஹா... மறுபடி வலையை விரிக்கிறாங்க; சிக்கிராதடா சிவாஜி. (சத்தமாக) ஹா...ஹா... சுட்டு வெச்சா அப்பளம், சூட்ல வந்தா கொப்பளம், தூத்துக்குடினா உப்பளம், சிவாஜி அடிச்சா ஆயிடுவே பப்படம். ஹவ் ஈஸ் இட்?’’

கி.வீரமணி : ‘‘அய்யய்யே! சிவாஜி யோட மொத்த ஸ்க்ரிப்ட்டையும் சொல்லிடுவாரு போல இருக்கே.. பாருங்க ரஜினி தம்பி, பெரியாரின் உண்மையான தம்பி இப்ப நான் மட்டும்தான். (நடராஜனிடம் கண்ணைக் காட்டிவிட்டு) கலைஞர், வைகோ, ஜெயலலிதானு போய் மாட்டிக்காதீங்க. விபூதிப் பட்டை, உத்திராட்சக் கொட்டைனு இந்த கெட்-அப்பை மாத்திட்டு, என்கூட வந்தீன்னா பெரியார் திடல்ல ஒரு மீட்டிங் போட்டு நாம பிக்கப் பண்ணிரலாம். எப்படி?’’

ரஜினி: ‘‘மொபைல்ல வந்தா மெஸேஜு, முதுகுல பண்ணா மஸாஜு, சீறிப்போறது பஜாஜு, சிவாஜின்னாலே எதிரி டேமேஜு!’’

சு.சுவாமி (குறுக்கிட்டு): ‘‘நேக்கு தெரிஞ்சுபோச்சு! எலெக்ஷன் டைம்ல பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள் நாட்ல ஊடுருவப் போறா. கட்சித் தொண்டர்கள் மாதிரி வேஷம் போட்டு வரப்போறா. இதுக்காக அவா தி.நகர் ரெங்கநாதன் தெருவுல ஆயிரம் டி.எம்.கே,, ஏ.டி.எம்.கே. கரை வேட்டி பர்ச்சேஸ் பண்ணியிருக்கா. அல்கொய்தா ஆளுங்க மட்டும் காங்கிரஸ் வேட்டியில வரப்போறா. இதுக்காக கலைஞர்ட்ட முஷாரப் பேசியாச்சு. ஜெயலலிதாட்ட முல்லா உமர் டீலிங் போட்டாச்சு. குவைத் மன்னர், வாசனுக்கு பச்சை பெல்ட்டும், சென்ட் பாட்டிலும் கோடாலித் தைலமும் கொடுத்து கரெக்ட் பண்ணிட்டார்!’’

சோ: ‘‘ம்க்குர்ர்ம்... என்னைப் பொறுத்தவரைக்கும் வைகோவோட பம்பரம் நாட் ரொட்டேட்டிங் திஸ் எலெக்ஷன். ராமதாஸோட மாம்பழம் எங்கே இனிக்கப் போகுதுனு அவருக்கே தெரியாது. ஸீட் ஷேரிங்கை மிஸ்டர் கருணாநிதி எப்படிச் சமாளிக்கப்போறார்னு தெரியலை. பி.ஜே.பி-க்கு ம்க்குர்ர்ம்... காலும் இல்லை, ரோலும் இல்லை. ஆனா, கைக்கு கை இருக்கு. கார்த்திக்குக்கு கூட்டம் வர்றதா சொல்றாங்க. ஆனா, அது பாம்பு கீரி சண்டை பார்க்க வர்ற கூட்டம்தான். ஜெயலலிதா இஸ் லீடிங்!’’

ஜாலி விலாஸ்!

கி.வீரமணி (மெதுவாக): ‘‘அடடா! ஜோசியம் சொல்லியே இவருக்கெல்லாம் தலை தரிசாயிருச்சு... ஆனாலும், விட மாட்டேங்கறாரே! (சத்தமாக) இதோ பாருங்க, இப்படிப் பேசிப் பேசியே ஆளாளுக்கு வீணாப் போயிட்டோம். தேர்தல் நேரத்துல மட்டும் தேடறாங்க.. அப்புறம் அஞ்சு வருஷமும் நாம எந்தப் பக்கம்னு நமக்கே தெரியாம அலைய வேண்டியிருக்கு. சுத்தி இருக்கிறவங் களைச் சமாளிக்கிறது வேற கத்தி மேல நடக்கிற மாதிரி இருக்கு!’’

நடராஜன்: ‘‘அட, ஆமாய்யா..! நாமளே தஞ்சாவூரு, மன்னார்குடினு எங்கேயாவது ஏதாவது கல்யாண வீட்ல மேடையைப் போட்டுப் பேசறது, நூல் வெளியீட்டு விழா நடத்தறதுன்னே வாழ்க்கை போகுது. ஏதோ தீவிரவாதக் கும்பல் தலைவன் மாதிரி கட்சிக்காரன் எல்லாம் என்னை ரகசியமா வந்து பார்த்துட்டுப் போறானுங்க. பத்தாததுக்கு பலூன் விக்கிறவன், பால் போடறவன், சேல்ஸ் ரெப் மாதிரியெல்லாம் உளவுத் துறை ஆளுங்க சுத்திச் சுத்தி வர்றதா எனக்குப் பீதியா இருக்கு. அதனால இந்த எலெக்ஷன்ல நிக்கிறதா முடிவு பண்ணிட் டேன். ஏர்போர்ட்ல விஜய் தம்பி நல்லா பேசிச்சு. அஜீத்கூட சிக்னல்ல நின்னப்ப சிரிச்சாரு. பெசன்ட் நகர்ல நம்ம ஏரியாவில்தான் விக்ரம் வீடும் இருக்கு. இப்போ ரஜினியின் ஆதரவும் கிடைச்சிருக்கு!’’

ரஜினி (ஷாக்காகி): ‘‘சின்னதா இருந்தா கிளிக்கூண்டு, பெருசா இருந்தா பொகக்கூண்டு, சிவாஜி அன்பா இருந்தா காமெடி பாண்டு, ஆக்ஷன்னு வந்தா ஜேம்ஸ்பாண்டு!’’

சு.சுவாமி: ‘‘நோக்கே இப்படின்னா என்னையெல்லாம் நினைச்சுப் பாருங்க ஓய்... ரஜினியா இருக்கிறதைவிட வடிவேலுவா இருக்கிறதுதான் கஷ்டம். சாதாரணமா பேசும்போதே பில்கேட்ஸ், பின்லேடன்னு ஆரம்பிச்சு அமெரிக்கா வரைக்கும் ஒரு ஆட்டு ஆட்டறதையே என் ஸ்டைல் ஆக்கிட்டேன். எது பேசினாலும் எவ்வளவு யோசிக்க வேண்டியிருக்கு, தெரியுமா! ‘என்னடா பண்றதுன்னு டெய்லி ரெண்டு தலையணையைத் திங்கிறேன். மண்டை விண்விண்ணுனு தெறிக்குது.’’

ரஜினி: ‘‘அட, ஆமா சார்! எனக்கு வாய்ஸ்தான் வாழ்க்கைப் பிரச்னை. எலெக்ஷன் வந்துட்டாலே ‘வருவாரா, வாய்ஸ் தருவாரா’னு ஆரம்பிச்சுடறாங்க. கலைஞர் போன் போட்டு ‘சன்ல ஸ்லாட் ஒதுக்கிரட்டுமா?’ங்கிறார், விஜயகாந்த் போன் போட்டு ‘நீங்களும் கறுப்பு, நானும் கறுப்பு’னு என்னென்னமோ சொல்றார், எலெக்ஷன் டைம்கிறதால ‘சிவாஜி’ படத்துக்கு டப்பிங் வாய்ஸ் கொடுக் கிறதைக்கூட தள்ளி வெச்சுட்டேன்னா பார்த்துக்குங்க. யெஸ், அந்தப் பக்கம் அம்மாஜி, இந்தப் பக்கம் கலைஞர்ஜி, கேப்புல ஆட்டோ ஓட்டுவான் இந்த சிவாஜி!’’

சோ: ‘‘பட் ஒன் திங்... கருணாநிதி இந்த எலெக்ஷன்ல நாட் எ மேக்கர். குக்கரா வேணா இருப்பார்!’’

கி.வீரமணி: ‘‘அட, அதை விடுங்க.. இனிமேலும் நாம இப்படியே இருக்க வேணாம். நாமளே சேர்ந்து ஒரு அணியை அமைச்சு தேர்தலைச் சந்திப்போம். ராமதாஸ்லேருந்து ராம கண்ணப்பன் வரைக்கும் ஒரு ரகசிய ரவுண்ட் அடிச்சு ஆள் தேத்திடலாம். கலைஞர், ஜெயலலிதா யாரையும் நம்பாம தனியா நின்னு தகர அடி அடிப்போம். வழி காட்ட பெரியார், மொழி காக்க அண்ணானு கரகரனு ஏதாவது கோஷத்தை உருவாக்கிடலாம். அதுக்குத் தலைவரா ஒரு நல்லவரைப் போட்டுடலாம்’’ என நடராஜனைப் பார்த்துக் கண்ணடிக்கிறார்.

ஜாலி விலாஸ்!

சு.சுவாமி: ‘‘சூப்பர்! மூணாவது அணி மாதிரி மு.கொ.அணி. அதாவது, முட்டுக்கொடுக்கிற அணி.. ஐ மீன், தமிழ்நாட்டை முட்டுக்கொடுக்கிற அணினு பேர் வெச்சுண்டுடலாம். ஏர் உழவன் சின்னத்திலேயே போட்டி போடலாம். நான் உக்ரைன் அதிபர்ட்ட பேசிடறேன். சந்திரலேகா சி.எம். கார்த்திக்கை இழுத்துட்டு வந்து கல்வி அமைச்சரா ஆக்கிடலாம். வாய்ஸ் கொடுக்குற ரஜினியை ராஜ்ய சபா எம்.பி-யாக்கிடலாம்..!’’

அப்போது நடராஜனின் செல் ஒலிக்க எடுத்து, ‘‘யாரு, சின்ன எம்.ஜி.ஆரா,.. ராங் நம்பர்! நான்சென்ஸ்!’’ என்று கட் பண்ணுபவர்,

‘‘கடைசி நேரத்துல ஏதாவது பிரச்னை வந்தா, முட்டுக்கொடுக்கிற அணியை அப்படியே கொண்டு போய் அ.தி.மு.க-வுல இணைக்க வேண்டியது என் பொறுப்பு. ரஜினி தம்பி, கையக் கொடுங்க! கலக்கிடலாம்’’ என்கிறார்.

ரஜினி (மெதுவாக): ‘‘தாங்காது..! எஸ்ஸாகிடவேண்டியதுதான். (சத்தமாக) ஹேய்... ஹேய்... சிவாஜின்னாலே ரசிக சபா, எனக்கு வேணாம் ராஜ்ய சபா.. சேனலை மாத்தணும்னா ரிமோட்டு, சிவாஜியை மாத்தணும்னு நினைச்சா ம்ஹூம்... ரிவீட்டு.. அப்பீட்டு!’’ என்றபடி திடீரென்று வேகமெடுத்து ஓட, தடுக்க முடியாமல் திகைத்து பார்க்கி றார்கள் மற்றவர்கள்.

அப்போது பனிக்குல்லா விற்பவர் ஒருவர் க்ராஸாக, ‘‘அய்யய்யோ! உளவுத் துறையோ! பேசினதையெல்லாம் கேட்டிருப் பானோ’’ என ஜெர்க்காகிற நடராஜன், அடிக்காத செல்லை எடுத்து, ‘‘முலாயமா..? பக்கத்துத் தெருவுலதான் இருக்கேன். இதோ, வர்றேன்!’’என்றபடி, ஒருபக்கம் பிடுங்கிக்கொண்டு ஓடுகிறார்.

சு.சுவாமி: ‘‘நேக்கு எல்லாம் புரிஞ்சுபோச்சு! ராஜபக்ஷேவோட ரகசிய டீல் போட்டு, ராணுவ ரகசியத்தை விக்கத்தான் இங்கே நீங்க வந்திருக்கீங்க. கலைஞரும், ஜெயலலிதாவும் இதுக்கு உடந்தை. இந்த எலெக்ஷன்ல எனக்கு மேட்டர் சிக்கிருச்சு. விஜயகாந்த் தைப் பிரதமராக்கிடறதுன்னு முடிவு பண்ணிட்டேன். செந்திலை சி.எம். ஆக்கப்போறேன்’’ என மலையதிரச் சிரிக்க, எல்லோரும் எஸ்கேப்!

 
ஜாலி விலாஸ்!